WordPress 2.2வுக்கு இற்றைப்படுத்திய பின் வலைப்பதிவில் இருந்த தமிழ் எழுத்துகள் எல்லாம் சிலேபி சிலேபியாகத் தெரிந்து பதற வைத்து விட்டன. இந்தப் பிரச்சினை, WordPressஐ இற்றைப்படுத்திய எல்லா தமிழ் வலைப்பதிவர்களுக்கும் வரவில்லை. அப்படி பிரச்சினை வருபவர்களுக்கான தீர்வு கீழே:

wp-config.php கோப்பில்

define(’DB_CHARSET’, ‘utf8′);
define(’DB_COLLATE’, ”);

என்ற வரிகளைக் கண்டுபிடித்துப் பின்வருமாறு மாற்றவும்

//define(’DB_CHARSET’, ‘utf8′);
//define(’DB_COLLATE’, ”);

இந்தத் தீர்வைச் சொல்லித் தந்து பதிவில் பாலை வார்த்த VoWக்கு நன்றி :)

தொடர்புடைய உரையாடல்: WordPress சிலேபி பிரச்சினைக்கான தீர்வுகள் – ரவி மன்றம்

இக்குறிச்சொற்களில் சிலவற்றைக் கொண்டிருக்கும் பிற இடுகைகள்

Tags: ,

13 Comments to “WordPress சிலேபியைச் சாப்பிடுவது எப்படி?”

  1. ravidreams says:

    கட்டற்ற அண்ணாக்களைக் கோவிச்சுக்கிறதும் அப்புறம் தீர்வு கண்டதும் மன்னிப்பு கேக்கிறதுமே பொழப்பா போச்சு. இதற்கு முன் இருந்த புலம்பல் இடுகையை மாற்றி உதவிக் குறிப்பாக மாற்றி வைத்திருக்கிறேன். புலம்பல் தொடர்புடைய மறுமொழிகளையும் அழித்து இருக்கிறேன். எல்லாம் வலைப்பதிவு வரலாற்றில் wordpress அண்ணாவின் சறுக்கலை யாரும் கவனிக்கக் கூடாதுன்னு தான் ;)

    bloggerல் மறுமொழி இட்டவரின் பெயரைத் தமிழில் காட்டவே பல வரி நிரல் எழுத வேண்டி இருந்தது. wordpressல் சும்மா இரண்டு // போட்டதில் எல்லாம் சரியாப் போச்சு..ஆக, இப்பவும் wordpress தான் ஜெயிச்சிருக்கு ;)

  2. கொழுவி says:

    // போட்டதற்கு பதிலாக அதனை அழித்துப் பாருங்கள். அதுவும் சரியாக இருக்கும். இருக்கலாம்.

  3. கலை says:

    பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டம்.

    ammaa = அம்மா விளம்பரம் நல்லா இருக்கு. (very creative advertisement. But I still use ‘ammaa’). :( or :)

  4. அப்ப பிரைச்சனையை தீர்த்தாச்சு…நாமழும் மாற வேண்டியதுதான்!!!!!

  5. Bala says:

    —But I still use ‘ammaa’). :( or :)

    அதே அதே :)
    (தமிழ் கீ எக்ஸ்டென்சன் ரொம்ப நல்லாருக்கு :D

  6. [...] பற்றி ரவிசங்கர் தன் வலைப்பதிவில் எழுதியிருக்கிறார். ஆனால் இது ஒன்று மட்டும்தான் தீர்வு [...]

  7. [...] உங்கள் வலைப்பதிவு தமிழில்(-உம்) இருக்கும் என்றால் அதிமுக்கியமான ஒரு கூடுதல் இணைப்பு: Wordpress ஜிலேபியைச் சாப்பிடுவது எப்படி? [...]

  8. [...] page and post Ids and lot of my links went broken and I had to manually fix them. Also, there is bug for UTF-8 encoding in WordPress. I forgot to fix this before importing and all the Tamil text became ???? marks [...]

  9. [...] Wordpress themes for Tamil 5. Fixing Wordpress themes to display Tamil properly in Firefox 6. Fixing jilebi font or ???? issue for self-hosted blogs in Tamil for Wordpress 2.0+ 7. Wordpress plugin for Thamizmanam toolbar Tags: tamil in wordpress, [...]

  10. [...] பூச்சி போன்று மாறியமைக்கு ரவிசங்கர் இந்த பதிவில் குறிப்பிட்டிருப்பது செய்தாலும் [...]

  11. Panaikulam says:

    தங்களின் கருத்துக்கு நன்றி. உங்களின் tips ஐ உபயோகப்படுத்தி இப்பொழுது எங்கள் இணைய தளம் தமிழில் தெரிகிறது.

    Wordpress 2.6.3 உபயோகப்படுத்தினேன் முதலில். ஆனால் அதில் பின்வரும் சிக்கல்கள் வந்தன.

    1. Static front page ஆக வைக்கப்படும் பக்கம் மட்டும் தான் Page களில் தெரிகிறது. மற்ற Page எதை கிளிக் பண்ணினாலும் அவை தெரியவில்லை. Error 404 message வந்தது.

    2. பின்பு Wordpress 2.5 Install பண்ணி, நீங்கள் சொன்னபடி,

    wp-config.php கோப்பில்

    define(’DB_CHARSET’, ‘utf8′);
    define(’DB_COLLATE’, ”);

    என்ற வரிகளைக் கண்டுபிடித்துப் பின்வருமாறு மாற்றினேன்.

    // define(’DB_CHARSET’, ‘utf8′);
    // define(’DB_COLLATE’, ”);

    வேறு எந்த வித Language file ம் Install பண்ணவில்லை. Page களுக்கும் post களுக்கும் permalink structureஐ /%postname%/ என்று மாற்றினேன்.

    இப்பொழுது URL ல் எல்லா post களுக்கும் page களுக்கும் link URL தமிழில் தெரிகிறது. IE 6.0+, Firefox 3.0+ மற்றும் Google Chrome 0.2 ஆகிய browser களில் தமிழ் தெளிவாக தெரிகிறது.

  12. Gautam says:

    I’m having similar problem while I’m trying to work in Kannada/bengali. I’m oon wordpress 2.7.1 and I’m sorry I don’t understand tamil.

    Care to explain a bit in English so that I can benefit ?

    Thanks in advance,
    /G

  13. ரவிசங்கர் says:

    Gautam,

    in your wp-config.php file

    find the lines

    define(’DB_CHARSET’, ‘utf8′);
    define(’DB_COLLATE’, ”);

    and change them as below:

    //define(’DB_CHARSET’, ‘utf8′);
    //define(’DB_COLLATE’, ”);

Leave a Reply

You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>