தமிழ்நாட்டில் குழந்தைகளின் பெயர்கள்

நல்ல, தூய தமிழ்க் குழந்தைப் பெயர்கள் தரும் இணையத்தளங்கள்:

1. http://peyar.in

குறிப்பு: தூய தமிழ்ப் பெயர்களைத் தரும் இணையத்தளங்களை அறியத்தருவதும், தமிழ்நாட்டில் தமிழ்ப் பெயர்கள் குறைந்து வருவது குறித்த விழிப்புணர்வையும் பரப்புவதே இக்கட்டுரையின் நோக்கம். தயவு செய்து, உங்கள் குழந்தைக்குப் பெயரிடுவது குறித்த ஆலோசனைகளைக் கேட்க வேண்டாம். நாள், நட்சத்திரம் பார்க்காமல் மனதுக்கினிய பெயரை வைப்பதே சிறந்தது என்பதே என் நிலைப்பாடு. நன்றி.

**
தமிழர் பெயர்களில் பிற மொழித் தாக்கம்:

முந்தா நேத்து காலையில தூங்கிட்டிருந்தப்ப அண்ணன் அழைச்சார். அண்ணனுக்கு முதல் குழந்தை பிறந்திருக்கு.

“தம்பி, பையனுக்கு பேர் வைக்கணும். ர-வுல ஆரம்பிக்கிற நல்ல பேரா சொல்லுப்பா”

காலாங்காத்தால அண்ணன் எழுப்பி விட்ட கடுப்பு எனக்கு.

“ரவிசங்கர்-னு வையுங்க” 🙂

“தம்பி, புதுசா உள்ள பேரு சொல்லுப்பா. ராம், ராஜா-னு பழைய பேர் எல்லாம் வேண்டாம்”

“சரிண்ணே, இணையத்தில பார்த்து சொல்றேன்”

வலையில தேடினப்புறம் தான் தெரியுது. இந்த எழுத்தில் புதுப் பெயர்கள் ரொம்பக் குறைவு. இருந்தாலும் ரோஷன், ரோஹித்-னு எல்லாம் வட நாட்டுப் பெயரா இருக்கு. அதையும் மீறி புதுசா வைக்கணும்னா rembrandt-னு டச்சு ஓவியர் பேரை தான் வைக்கணும். கண்டிப்பா, இந்தியால இது புதுப் பேர் தான் 🙂

முன்ன எல்லாம் சாமிப் பெயர், குலசாமிப் பெயர், முன்னோர் பெயர், புகழ் பெற்றவர் பெயர், அரசியல்வாதி பெயர், தலைவர் பெயர்னு வைப்பாங்க. செட்டியார் வீட்டுப் பிள்ளைகள் பலர் இப்படி அழகம்மை, வள்ளியம்மை-னு இப்பவும் பேர் வைச்சிருக்கிறத பார்த்திருக்கேன். இப்ப நிறைய பேர் தொலைக்காட்சித் தொடர்கள்ல வர்ற பாத்திரங்கள் பேர் வைக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஹர்ஷினி, வர்ஷினி, தர்ஷினி-னு எல்லாம் நாடக நடிகர் பேர். ஸ, ஷ, ஜ, ஹ கலந்து பேர் வைச்சா இன்னும் ரொம்ப மகிழ்ச்சி மக்களுக்கு.

தொலைக்காட்சித் தொடர்களும் எண் ராசி, சோதிட நம்பிக்கைகளும் பெருமளவில் ஊர்ப்புறங்களை கெடுத்து வைச்சிருக்கு. எங்க சித்திப் பையன் பேர் ஹர்ஷத். ஏன் ஹர்ஷத் மேத்தான்னே வைச்சிருக்கலாமேன்னு கேட்டேன் 😉 200 மக்களும் 50, 60 மாடுகளும் இருக்க ஒரு பட்டிக்கு எதுக்கு இந்தப் பெயர்?

புதுசா பேர் வைக்க வேண்டாம்னு இல்ல. ஆனா,முதல்ல வீட்ல உள்ளவங்க அதக் கூப்பிட முடியுற மாதிரி வைக்க வேண்டாமா? ஏற்கனவே சத்யாங்கிற எங்க உறவினர் பொண்ணுக்கு வீட்டுப் பெயர் வேலாயி. காயத்ரிங்கிற பொண்ணுக்கு வீட்டுப் பெயர் காயம்மா.  இந்த வீட்டுப் பெயர்கள் எல்லாம் அப்பத்தாக்கள், அமத்தாக்கள் வசதிக்காக வைச்சது. வாயுல நுழையுற மாதிரி ஒரு பேர முதல்லயே வைச்சிருக்கலாம்ல. எங்க அக்கா பையன் பேரு ஹரீஷ்.  இருந்தாலும் அப்பத்தா அரீசு-னு தான் கூப்பிட முடியும். கிரந்த எழுத்து குறித்த எந்தக் கொள்கையும் அவங்களுக்கு கிடையாது 🙂 ஆனா, அவங்க வாயுல இப்படி தான் வருதுன்னா எது இயல்பான ஒலியமைதி கெடாத தமிழ், எது திணிக்கப்பட்ட ஒலின்னு எளிமையா புரிஞ்சுக்கிடலாம்.

பிள்ளை பிறந்த பிறகு எழுத்துப் பார்த்து பெயர் வைக்கிறத விட பிள்ளை பிறக்கிறதுக்கு முன்னாடியே அம்மாவும் அப்பாவும் இந்தப் பேர் தான்னு யோச்சிச்சு வைச்சு பேர் வைச்ச பிள்ளைங்களையும் பார்த்து இருக்கேன். அந்த குழந்தைகள்ட்ட ஒரு மகிழ்ச்சியையும் பார்த்திருக்கேன். எனக்கு எங்க அப்பா முன்னமே யோசிச்சாரான்னு தெரில. ஆனா, இந்தப் பெயர் தான் வைக்கணும்னு வைச்சாராம். மகிழ்ச்சி. அது என்ன அரும்பாடு பட்டு சுமந்து பெத்துட்டு பேரு வைக்க சோதிடனையும் அகராதியையும் பக்கத்து வீட்டுக் காரனையும் ஆலோசனை கேட்கிறது?

எங்க அம்மா ஒரு பழமொழி சொல்லுவாங்க..”ஒன்னு மண்ணும் இல்லையாம்..புள்ளைக்குட்டி அஞ்சாறாம்”-னு 🙂 அதனால் என்னோட இந்த தொலைநோக்குக் கவலைய நிறுத்திக்கிறேன். எனக்கு கல்யாணம் ஆகி, புள்ளைக் குட்டி பிறக்கும் போது பார்த்துக்கிறேன் 😉

தொடர்புடைய இடுகை: தமிழர் பெயர்கள்

68 thoughts on “தமிழ்நாட்டில் குழந்தைகளின் பெயர்கள்”

  1. தமிழ்ல பெயர் வைக்கிறதைப் பற்றி நான் கதைக்கலாம் ஏனென்றால் என் பெயரில ஒரு எழுத்து மட்டும்தான் தமிழ் :-)அதால என்னை நக்கல் அடிக்கிறதுக்கென்றே ஒரு தமிழ் ஆர்வலர் கூட்டமிருக்குது.

    உங்கட அம்மா சொன்ன பழமொழிக்கு அர்த்தம் விளங்கேல்ல ஆனால் இந்தப் பெயர் வைக்கிறது பெரிய விசயம் தான்.அக்காக்கு முதல் பையன் பிறக்க முதலே நிறைப் பெயர்கள் செலக்ற் பண்ணி வைச்சம் ஆனால் அக்காவும் அத்தானும் கடைசில அவனுக்கு வைச்ச பெயர் “றினிஸ்”. தெரிஞ்ச அன்ரியொராள் தன் மகனுக்கு வச்ச பெயர் “சஷ்டிக்” .

  2. நிகழ்காலத்திலோ வருங்காலத்திலோ கூடிய சீக்கிரம் நமக்கு நிகழ வாய்ப்பு இல்லாத ஒன்று குறித்து ரொம்ப கற்பனை காணக் கூடாது. பேசிக்கொண்டிருக்கக் கூடாது. – இது தான் எங்க அம்மா சொன்ன பழமொழியோட சாரம்

  3. Dear Sir,

    My baby bour at 19th october 2008, 11.08 a.m

    i am sreaching so many names, my iyar told me

    my baby names starting name is la – lee- leu

    enough.

    please help my baby tamil names.

    Regards

    M. jayakumar

    9944466828

  4. //பிள்ளை பிறந்த பிறகு எழுத்துப் பார்த்து பெயர் வைக்கிறத விட பிள்ளை பிறக்கிறதுக்கு முன்னாடியே அம்மாவும் அப்பாவும் இந்தப் பேர் தான்னு யோச்சிச்சு வைச்சு பேர் வைச்ச பிள்ளைங்களையும் பார்த்து இருக்கேன். அந்த குழந்தைகள்ட்ட ஒரு சந்தோஷத்தையும் பார்த்திருக்கேன். //

    மகளுக்கு வைத்த பெயர் அவள் பிறக்க 4 வருடத்திற்கு முதலே நினைத்த பெயர் :). பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்று பார்க்காமலே, பெண்ணாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையிலும், ஆசையிலும் குழந்தைக்கு அதே பெயரை வைப்பது என்று முடிவாகி, பெண்ணாகப் பிறந்ததால், அதே பெயரை வைக்க முடிந்தது :).

    மகளிடம் இதைப் பற்றி சொல்லும்போது, தனது பெயரிலும், பெயர் வைத்த விதம்பற்றியும் அவள் முகத்தில் பெருமையையும், மகிழ்ச்சியையும், சிரிப்பையும் பார்க்க முடிகின்றது.

  5. Pingback: குழந்தையின் பெயர்! | உயிர்ப்பு
  6. வணக்கம்.
    நானும் என் மனைவியும் முன்னதாகவே பேசி என்ன பெயர் வைப்பது என்று முடிவுசெய்திருந்தோம். ஆண்குழந்தையாயின் “கன்னல்” எனவும் பெண்குழந்தையாயின் “கவின்” (என் மனைவி பெயர் கவிதா) எனவும் பெயர் வைக்க முடிவுசெய்திருந்தோம்.
    என் பெயர் கதிரவன் என்பதால் “பரிதி” எனவும் தன் தந்தை பெயர் இளங்கோ என்பதால் “இளம்” என்பதையும் சேர்த்து “கன்னல் இளம்பரிதி” என ஆண்குழந்தையாக இருந்தால் பெயர்வைக்கலாம் என என் மனைவி கூறினாள்.
    என் தாயார் பெயரான மணிமேகலை என்பதிலிருந்து “மணி” என்பதைச் சேர்த்து “கவின் மணிச்சுடர்” என பெண்குழந்தையாக இருந்தால் வைக்கலாம் என்று நான் கூறினேன்.
    ஆண்குழந்தை 16.04.2009 அன்று பிறந்தான். நண்பர்களுக்கு நான் அனுப்பிய குறுஞ்செய்தியிலேயே எங்களுக்கு “கன்னல் இளம்பரிதி” (ஆண் குழந்தை) பிறந்திருக்கிறான் என்றுதான் அனுப்பியிருந்தேன்.
    குழந்தைக்கு பெயர் வைக்கும்போது அனுபவித்து ஆராய்ந்து ரசித்து பெயர்வைக்கவேணடும்

  7. நானும் என் மனைவி குடும்பத்தாரும் என் மைத்துனருக்கு பெண் பார்ப்பது தொடர்பாக நெய்வேலி சென்றிருந்தோம். அங்கு உணவகத்தில் உணவருந்திவிட்டு நாங்கள் வெளியில் வரும்போது எதிரில் சுப. வீரபாண்டியன் அய்யா அவர்களைப் பார்த்தோம்.
    நானொரு தமிழ்விரிவுரையாளர் என்று என்னை நான் அறிமுகப்படுத்திக்கொணடு என் மனைவியையும் அவள் கையிலிருந்த என் மகனையும் பெயர்கூறி அறிமுகப்படுத்தினேன்.
    என் மகன் பெயர் “கன்னல் இளம்பரிதி” எனக்கேட்டதும் சுபவீ அவர்கள் மகிழ்ச்சியுற்று கேட்கும்போது இனிக்கிறதே என்று கூறி என் குழந்தையைத் தட்டிக்கொடுத்தார்.
    என் மனைவி “பெயர் சூட்டிய பொழுதினும் பெரிதும் மகிழ்ந்த கணம்” அது.

    நல்ல தமிழ்ப்பெயரைக் குழந்தைக்குச் சூட்டுங்கள்
    நானொரு தமிழனென்று அடையாளம் காட்டுங்கள்

  8. கதிரவன், நீங்கள் பெயர் வைத்த கதையே இனிக்கிறது. பரிதி வாழ்வில் சிறக்க என் வாழ்த்துகள்.

  9. Dear Sir,

    i had male baby one month before. i iyar told that my baby name start with Tha Thaa,raa, roo, ru.

    Pls guid me put the good Tamil name as per my iyar advice.

    Thanks,
    Velu

  10. Dear sir,

    kindly send me the name list in following letters, s.so,l

    thanks and regards,
    v.sakthivel

  11. dear sir my boy birth day date 13/11/2009/ name starting letter i want pu pls send my mail id one great name thank u

  12. Hai,

    My name is banu, am searching a muslima boy and girl baby name.. my frnd wife was having now 9months…. i want the name list for my frnd…..

    1. @yaggna magesh – சுதந்திரா – தமிழ்ச் சொல் இல்லீங்க

      1. Why its not a Tamil Name.. Because for freedom we are telling that as Suthanthiram.. Then what about this name?

        1. correct tamil word for freedom is viduthalai . unfortunately today we are using many non tamil words.

  13. My baby date of bith is 13.01.2010 at 9.30 AM
    Starting letters of name is be, ba ,ye, yo
    pls help me….

  14. My Baby DOB 27.02.2010 starting Letters is TA,TAA,TI,TU……. etc.. Please Help me Sir
    Thanks in Advance

  15. please help me my baby name for tamil,my baby Female 06/05/2010 9:04pm born

  16. please help me my baby name for tamil,my baby male
    my baby born time 8.10 pm
    by P.Raja Serugudi. Ungal nanban

  17. Hi , This is Raja from Erode. My sister blessed by god with boy baby. we are searching a unique tamil name for this little guy. the name should start from “Thee” or “Thaa”-(Nedil) . Could you please help me to find out a good name …

  18. hi, my baby ( female) born on 05.07.2010, the name will starts with sa, c.
    please help me or please send list tamil names to my email id

  19. Dear sir,

    We blessed with male baby at 12.02 pm in coimbatore on 17.05.2010 .
    Baby birth star : thiruvathirai 3rd padam
    Kindly help us for selecting name in thiruvathirai 3rd padam

    Regards,
    P.Senthilkumar

  20. Dear sir,

    Kindly send me the name list in following letters, V,Vo,Va,Ve,U,Uo
    Thanks and Regards,
    Thangamani

  21. sir please send me the baby(boy) name for these tamil
    letters . pae, poae, ja, jee

  22. Dear sir / madam, i would like to set the name for my sister’s son. The name should be start with ‘k’. Plz, send me good tamil names to my mail address.

  23. குறிப்பு: தூய தமிழ்ப் பெயர்களைத் தரும் இணையத்தளங்களை அறியத்தருவதும், தமிழ்நாட்டில் தமிழ்ப் பெயர்கள் குறைந்து வருவது குறித்த விழிப்புணர்வையும் பரப்புவதே இக்கட்டுரையின் நோக்கம். தயவு செய்து, உங்கள் குழந்தைக்குப் பெயரிடுவது குறித்த ஆலோசனைகளைக் கேட்க வேண்டாம். நாள், நட்சத்திரம் பார்க்காமல் மனதுக்கினிய பெயரை வைப்பதே சிறந்தது என்பதே என் நிலைப்பாடு. நன்றி.

  24. My baby birth date is 10.05.2011.
    The name starting letter is de, do, du, my, mi, me.

  25. ரவி,

    நல்ல பதிவு. தமிழில் நல்ல ஒலிப்புடன் கூடிய பெயர்கள் இல்லை என்ற தவறான எண்ணமே வடமொழி பெயர்கள் வைக்க காரணம் என்பது எனது கருத்து.

    என் குழந்தையின் பெயர் இனியா. அடுத்தொன்று பிறந்தால் இளையா என்று பெயர் வைக்கத் திட்டம். இவையெல்லாம் நல்ல ஒலிப்புடன் கூடிய எளிய பொருள் கொண்ட தமிழ் பெயர்கள் தான்.

    நாள் நட்சத்திரம் பார்த்து ‘ல’கர வரிசையிலும் ‘ர’கர வரிசையிலும் பெயர் வைக்க நினைப்பவர்கள் தமிழ் பெயர் வைக்க இயலாது. தமிழ் இலக்கணப்படி ல’கர வரிசையிலும் ‘ர’கர வரிசையிலும் பெயர்கள் ஆரம்பிப்பதில்லை (தமிழ்ப்படுத்தப்பட்ட பெயர்களும் ‘இல’, ‘இர’ என்ற துவக்கம் கொண்ட பெயர்களே)

    உங்கள் அம்மா சொன்ன பழமொழி தெலுங்கிலும் உள்ளது “ஆளு லேது சூளு லேது. கொடுக்கு பேரு சோமலிங்கன்டா” – இப் பழமொழியின் பொருளும் நீங்கள் சொன்னது தான்.

    1. வாங்க கோபி.

      //தமிழில் நல்ல ஒலிப்புடன் கூடிய பெயர்கள் இல்லை என்ற தவறான எண்ணமே வடமொழி பெயர்கள் வைக்க காரணம் என்பது எனது கருத்து. //

      தமிழில் நல்ல ஒலிப்பு இருக்கிறதா இல்லையா என்பதை விட, ஸ, ஷ, ஜ, ஹ, ஸ்ரீ ஒலிப்புகளை உயர்வாக, புதுப்பாணியாகக் கருதும் போக்கே முக்கியம் என நினைக்கிறேன்.

      //என் குழந்தையின் பெயர் இனியா. அடுத்தொன்று பிறந்தால் இளையா என்று பெயர் வைக்கத் திட்டம். இவையெல்லாம் நல்ல ஒலிப்புடன் கூடிய எளிய பொருள் கொண்ட தமிழ் பெயர்கள் தான்.//

      இனியா நல்ல பெயர். தமிழில் பெயர் சூட்டுபவர்களின் பட்டியலில் முதலில் இருப்பது இனியை வேராகக் கொண்ட சொற்கள் தான் 🙂 இளையா என்று யாரும் வைத்துப் பார்த்தது இல்லை. நல்ல தெரிவு 🙂

      //ஆளு லேது சூளு லேது. கொடுக்கு பேரு சோமலிங்கன்டா”//

      அடடா. இது நல்லாருக்கே 🙂

      1. நான் என் பெண் குழந்தைக்கு “இனியா” என்ற பெயர் சூட்டலாம் என்று எண்ணியுள்ளேன். ஆனால் இனியா என்பதற்கு மிக சரியான பொருள் தெரியவில்லை. தயவுகூர்ந்து தங்களால் பொருள் கூறமுடியுமா?

  26. enathu peyar thillai kumaran, enathu manaivin peyar thanigai nayagi, nen malukku thamiz peyaril(athe nerathil kuraintha ezhuthudan) Oviya enru peyar vaithullen , tharpothu oru magan piranthullan oviya enra thamiz peyar ponru, nalla peyar koriyathil nall ullngal vazhankiyavai pal pal, athil ungalukkaga sila kavin, kalaiyarasan, Aaruran, Egan, kavinko,kavikko aaha thamiz arumai. nanri.

    1. வணக்கம் தில்லைக் குமரன். ஓவியா அருமையான பெயர். நாங்களும் எங்கள் வருங்காலக் குழந்தைக்குத் தமிழ் பெயர் தேடிக் கொண்டிருக்கிறோம் 🙂

  27. Hi Ravi,I am into your blog while searching for Tamil boy baby names.This is a good article regarding naming child in Tamil.

    I also have strong desire to name my child in Tamil.Hope the following names are Tamil.

    Udhayan/Iniyan

    I will be happy if you too suggest some good tamil names.Thanks

    1. ரஞ்சித், இனியன் தமிழ்ப் பெயர் தான். உதயன் தமிழா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது குறித்து பேரா. செல்வக்குமாரிடன் வினவினேன். அவரது பதில் கீழே:

      உதயன் என்பது பொதுவாக வடமொழி என்பதே
      என் கருத்தாகவும் இருந்துவந்துள்ளது..
      ஆனால் செந்தமிழ் சொற்பிறப்பியல்
      அகரமுதலியில் வடமொழி என்னும் சுட்டு இல்லை.

      அங்கே தந்துள்ள குறிப்பையும் தொடர்பான்வற்றையும்
      எழுதுகின்றேன்.
      உதயம் என்பதற்கு 7 பொருள்கள் தந்துள்ளனர். சொற்பிறப்பு
      உது -> உதயம்

      இந்த உது என்னும் வேர்ச்சொல் மிகப்பல தமிழ்ச்சொற்களுக்கு
      வேராக உள்ளது (உ -> உந்து – உது-> உதி) .
      உது என்றால் மேலெழும்புதல் உது என்றால் (அது இது உது)
      (1) “சேய்மைக்கும், அண்மைக்கும் நடுவணானதைக் குறிக்கும் ஒரு
      சுட்டுப் பெயர்” , (2) “முன்னிலையாளனிடம் உள்ள பொருள்”,
      (3) “முன்னால்” எனப் பொருள் தருகின்றது.

      எனவே “தோற்றம்”, “தோன்றுதல்” , “பிறப்பு” (உதித்தல்) முதலியன
      உது = முன்னால் என்னும் அடியயக இருப்பதாகக் கொடுத்துள்ளனர்.

      வடமொழி சொற்பிறப்பியலையும், அங்குள்ள சொல் கிளைப்புகள்,
      இனமான மொழிகளில் உள்ள சொற்கலையும் ஒப்பிட்டால்தான்
      உறுதியாகச் சொல்ல முடியும். ஆனால் சொற்பிறப்பியல் அகராதி
      செய்தோர் அப்படி செய்திருப்பர் என்று நம்பலாம் (நாமும் தனிப்பட
      சரிபார்க்க வேண்டும் எனினும்).

      சமசுக்கிருதச் சொல்லின் வேர்நிலைகளைப் பின்னர் எனக்குத் தெரிந்தவாறு
      அலசி எழுதுகின்றேன்.

      இப்போதைக்குத் தமிழ் என்று கொள்ளலாம். ஆனால் தமிழ்
      இலக்கியங்களில் ஆளப்பட்ட வரலாறும் தெரியவில்லை.
      உது என்பதற்கு மலையாளம், தெலுங்கு , கன்னடம், துளு முதலான
      பல மொழிகளில் இருந்து ஈடான சொல் சுட்டியுள்ளனர்.

  28. மிக்க நன்றி.பேரா. செல்வகுமார் அவர்களுக்கும் மிக்க நன்றி.மிக தெளிவான பதில்.

  29. enathu makanukkau thikazhvan ena peyar vaikkalaam ena ninaikkiren ithu suthamaana thamil peyaraa?

  30. My baby born in 19th june 2012 11.20 am. Name to be started KA nedil . where as i choose name as KANISHK where all numerology calculator says it is a best name but i need to check as per tamil numerology. please guide a tamil numerology calculator with letters in tamil.

  31. vanakkam,
    en peyar anandhi enaku tamil patru miga adhigam anandhi enbadhu tamil peyara?
    enaku ju, jo, jae, ka(kuril), kaa(nedil) indha elukkalil baby boy peyar vendum thaangal thayavu koorndhu anupum padi thalmaiyudan kettukolhiren…. nandri ….. tamil vaalga

  32. ஆசிரியர் அவர்களுக்கு. . . . . , எனக்கு அழகிய தமிழ்மகள் பரணி நட்சத்திரத்தில் பிறந்துள்ளாள். அவளுக்கு “ல , லி , லு , லே , லோ ஆகிய எழுத்துகளில் பெயர் வைக்க ஆசைபடுகிறேன். ஆனால் மேற்கான் எழுத்துக்களில் பெண் குழந்தைக்கான பெயர்கள் குறைவாகவே உள்ளது. எனவே மேற்கான் எழுத்துக்களில் அழகிய பெயர்கள் [email protected] என்ற மின்னஞ்சலிற்கு தெரிவிக்கவும்

    1. மன்னிக்கவும், தமிழ் பெயர்கள் ல என்ற எழுத்தில் தொடங்குவதில்லை.

  33. அருமையான பதிவு !!

    எனது மகனுக்கு நிமலன் என்று பெயர் வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம். இந்த பெயற்குரிய பொருளை பகிரவும்.

Comments are closed.