Tag: விக்கிப்பீடியா

  • கூகுள் தானியங்கித் தமிழாக்கக் கருவி

    பிற மொழிகளில் இருந்து தமிழுக்கும் தமிழில் இருந்து பிற மொழிகளுக்கும் தானியக்கமாய் மொழிபெயர்க்கும் கருவி ஒன்றை கூகுள் வெளியிட்டுள்ளது. தமிழ்க் கணிமையைப் பொறுத்தவரை இது ஒரு மிகப்பெரிய சாதனை என்பதில் ஐயம் இல்லை. அதிலும் ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழிகளுக்கு மட்டுமல்லாமால் பல மொழிகளுக்கும் இடையே இரு வழியாக மொழிபெயர்க்கலாம் என்பது சிறப்பு. செருமன், நெதர்லாந்து மொழிகளைச் சோதித்துப் பார்த்தேன். கூடவே தமிழ்ச் சொற்களை உச்சரித்துக் காட்டும் கருவி, தமிழ் உரையை உரோம எழுத்துகளில் எழுதிக் காட்டும்…

  • விக்கிப்பீடியா

    (12 நவம்பர் 2009 புதிய தலைமுறை இதழில் வெளிவந்த விக்கிப்பீடியா அறிமுகம். என் நேரமின்மை காரணமாக, வெளிவந்த கட்டுரையின் இறுதிப்பகுதியை ஆசிரியர் குழு எழுதியது. இதழ் நடைக்கு ஏற்ப சில சிறிய மாற்றங்களும் உண்டு) புதுக்கோட்டை மாவட்டம் மாங்குடி அரசு நடுநிலைப் பள்ளி. காவிரி ஆற்றைப் பற்றி ஒரு கட்டுரைப் போட்டி. மாணவர்கள் தமிழ் விக்கிப்பீடியா ( http://ta.wikipedia.org ) என்ற இணையத்தளத்துக்குச் செல்கிறார்கள். காவிரி ஆற்றுடன் நிற்காமல் அதனுடன் தொடர்புடைய குடகு, மேற்குத் தொடர்ச்சி மலை,…

  • நவம்பர் 7 – கோவையில் தமிழ்க் கணிமை ஆர்வலர் சந்திப்பு

    கோவையில், நவம்பர் 7, 2009 சனிக்கிழமை அன்று தமிழ்க் கணிமை ஆர்வலர் சந்திப்பு நடைபெறுகிறது. குமரகுரு பொறியியல் கல்லூரி கணினி அறிவியல் துறையைச் சேர்ந்த முனைவர். முத்துக்குமார் இந்த ஒன்று கூடலை ஏற்பாடு செய்திருக்கிறார். உத்தமம் அமைப்பின் செயலாளார் திரு. வா. மு. செ. கவியரசன் அவர்கள் தலைமையேற்று உத்தமத்தின் செயல்பாடுகளை விளக்குவார். அடுத்து விக்கிப்பீடியா, தமிழ் இணையம், வலைப்பதிவுகள், தமிழ்மணம் முதலிய திரட்டிகள் பற்றி நண்பர்கள் விளக்குவோம். மற்ற கல்லூரிகளில் இருந்தும் தமிழார்வல மாணவர்கள், ஆசிரியர்கள்…

  • தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தம்

    1. தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தம் கொண்டு எழுதலாமா கூடாதா? எழுதலாம். கிரந்தம் தவிர்த்து தான் எழுத வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்த மாட்டார்கள். 2. தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தம் பயன்பாட்டில் உள்ளதா? தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்த எழுத்தில் தொடங்கும் கட்டுரைகள் பட்டியலைக் கீழே காணலாம். இவை தவிர, கட்டுரை உரைகளில் ஆயிரக்கணக்கான இடங்களில் கிரந்த எழுத்துகள் உள்ளன. இவை எல்லாவற்றையும் நீக்கி தமிழ் எழுத்துகளுக்கு மாற்றும் திட்டம் ஏதும் இல்லை. அதற்குத் தேவையும் இல்லை. சாத்தியமும் இல்லை.…

  • தமிழ் விக்கிப்பீடியா மீதான விமர்சனங்களும் பதில்களும்

    1. தமிழ் விக்கிபீடியாவில் இலங்கைத் தமிழ் நடை கூடுதலாகத் தென்படுகிறதே? தமிழ் விக்கிப்பீடியா தொடக்கம் முதல் பெருமளவு ஈழத்தமிழர்கள் ஆர்வத்துடன் பங்களித்து வருகிறார்கள். அவர்கள் நடையிலேயே அவர்கள் எழுதுவது இயல்பான ஒன்று. நாமும் கட்டுரை எழுதாமல், எழுதுவோரையும் எங்கள் நாட்டுத் தமிழ் நடையில் எழுதுங்கள் என்று கோருவது பண்பாடன்று.  எனினும், பன்னாட்டுத் தமிழருக்கும் புரிய வேண்டும் என்ற நோக்கில் அவர்களும் பெருமளவு பொதுவான சொற்களைப் பயன்படுத்தியே எழுத முயல்கிறார்கள். சில கலைச்சொற்கள், ஈழம் சார் சொற்களுக்கு மாற்றுச்…

  • தமிழ் விக்கிப்பீடியா பயிற்சி

    சனவரி 18, 2009 அன்று சென்னையில் கிருபாவின் அலுவலகத்தில் தமிழ் விக்கிப்பீடியா பயிற்சி வகுப்பு நடந்தது. நிகழ்ச்சி பற்றி விக்கி பயனர்களின் கருத்துகள் மா. சிவக்குமாரின் கருத்து * வடபழனி பகுதி உள்ளூர் அச்சு இதழில் வெளிவந்த செய்தியைப் பார்த்தே பலர் வந்திருந்தார்கள். அடுத்தடுத்த வலைப்பதிவு, விக்கி, இணையப் பட்டறைகளுக்கும் அச்சு, ஒளி, ஒலி ஊடகங்கள் மூலம் கூடுதலாக விளம்பரப்படுத்த வேண்டும். * கிருபா, விடுமுறை நாளில் மூடிக் கிடக்கும் தன்னுடைய அலுவலக இடம், கணினிகளையே இதற்குப்…

  • தமிழ் விக்கிப்பீடியர்கள்

    2005 மார்ச் முதல் தமிழ் விக்கிமீடியா திட்டங்களில் பங்களிக்கத் தொடங்கினேன். அதற்குப் பிறகு தமிழ் இணையத்தில் பல இடங்களில் சுற்றி வந்துவிட்டாலும், இன்று வரை 100% மன நிறைவு அளிக்கும் ஒரே திட்டம் தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் மட்டும் தான். தணியாத தமிழார்வத்துக்கு களமாக இருப்பது ஒரு காரணம். இன்னொரு முக்கியக் காரணம், தன்னலமற்ற, ஒத்த கருத்துடைய, தோழமை உணர்வு மிகுந்த, பண்பில் சிறந்த, நேர்மையான நண்பர்களுடன் பணியாற்றுவதே தனி இன்பம் தான். இவர்களில் சிலர் தமிழ்…

  • எளிய தமிழ்

    தகுந்த இடங்களில் புதிய பொருத்தமான சொற்களைப் பயன்படுத்துவதும் கற்றுக் கொள்வதும் தவிர்க்க இயலாதது. புல்லாங்குழல் என்று சொன்னால் கூடத் தான் குழந்தைக்குப் புரியாது. அதற்காக காலத்துக்கும், ஓட்டை போட்ட இசைக் கருவி / பீப்பீ என்றே அதற்குப் புரிகிற மாதிரி சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? நம்மில் பலரும் புதிய தமிழ்ச் சொற்களைக் கற்றுக் கொள்வதை பள்ளிக்கூடக் காலத்துடன் நிறுத்திக் கொள்கிறோம். இது தான் பிரச்சினை. இந்தக் குறைவான சொற் தொகையைக் கொண்டு எப்படி உலகின் எல்லா கருத்துக்களையும்…