Posted on May 20, 2007, 1:24 pm, by ரவிசங்கர், under
நாட்குறிப்பு.
நெதர்லாந்தில், இந்தியா குறித்து:
1. சாதின்னா என்ன? ஏன் சாதி இருக்கு? யார் சாதியை உருவாக்கினாங்க?
பதிலை முழுசா விளக்குவதற்குள் மண்டை காய்ந்து ஓடி விடுவார்கள்!
2. நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை எப்படி ஏத்துக்கிறீங்க? பெண்ணைத் தெரியாம எப்படி கூட வாழ்றது? திருமணத்துக்கு மதம், சாதி, மொழி-ன்னு என்னென்ன தடைகள் வரும்? நெருங்கிய சாதிப் பெண் என்றால் மணந்து கொள்ளலாமா? அது எப்படி அத்தை மகளை மணக்கிறீங்க?
நான் சொல்றது - நெருங்கிய சாதி என்ன, அத்தை மகளே ஆனாலும் எந்தப் பிரச்சினையும் இல்லாம [...]
Posted on April 16, 2007, 10:47 am, by ரவிசங்கர், under
நாட்குறிப்பு.
இன்று நம்மை நினைத்துக் கொள்பவர்கள் எத்தனை பேர்?
நம் வெற்றிக்கு வாழ்த்துக்கள் மட்டும் சொல்லி விருந்து கேட்காமல், அதைத் தன் வெற்றியாக கருதி அடுத்தவர்களிடம் சொல்லி மகிழ்பவர்கள் எத்தனை பேர்?
நம் இழப்புக்கு வருந்துபவர்கள் எத்தனை பேர்?
எப்படி இருக்கிறாய் என்று கேட்பதற்காக மெனக்கெட்டு அழைப்பவர்கள் எத்தனை பேர்?
அடுத்து நம்மை எப்போது பார்ப்போம் என்று நினைப்பவர்கள் எத்தனை பேர்?
நாம் கேட்காமலேயே தேவையறிந்து உதவுபவர்கள் எத்தனை பேர்?
கடனாகக் கொடுக்காமல், கொடுக்கும் பணம் நமக்கு உதவுமே என்று தருபவர்கள் எத்தனை பேர்? இலட்சக்கணக்கில் தந்த [...]
Posted on March 29, 2007, 12:08 pm, by ரவிசங்கர், under
நாட்குறிப்பு.
அன்புன்னா என்ன?
இந்தக் கேள்வி தோன்றின முதல் முறையே அன்பைத் தவற விட்டு ரொம்ப நேரமாயிடுச்சோன்னு தோணுது..
இந்தக் கேள்வி எனக்கு எப்ப முதன் முதல தோணுச்சுன்னு சரியா நினைவில்லை. ஆனா, அடிக்கடி வந்து போகும் கேள்வி இது. இதுக்கான பதில் புரிஞ்ச மாதிரியும் இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு. புரிஞ்சும் ஏத்துக்க முடியாத மாதிரியும் இருக்கு. புரியாட்டியும் தேடல் மட்டும் ஓயாம இருக்கு.
ஒரு நாள். பெரியம்மா வீட்டுக்குப் போயிருந்தேன். யாரோ யாருக்கோ “நாங்க அத செஞ்சோம், இத செஞ்சோம், [...]