Posts Tagged ‘வாசிப்பு’

புத்தகம் இரவல் தருவது குற்றமா?

புத்தகம் என்பதை எழுத்தாளன் - வணிகம் - காசு என்ற எல்லைக்குள் அடக்க இயலாது. அதை ஒரு அறிவு மூலமாகப் பார்க்க வேண்டும். காப்புரிமை என்ற பெயரில் மிகையாகப் பயமுறுத்தி பகிர்தல் என்ற மனித இயல்புக்கும் அறிவு பெறல் என்ற மனித உரிமைக்கும் எதிராகவும் குற்ற உணர்வைத் தூண்டும் வகையில் செயல்படுகிறோமா என்று சிந்தித்திப் பார்க்கலாம். நாம் படிக்கும் ஒவ்வொரு நூலையும் காசு கொடுத்து வாங்கித் தான் படிக்க வேண்டும் என்றால் அறிவுப் பரவலுக்கும் பெருந்தடையாகவும் இல்லாதவர்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராகவும் இருக்கும்.