தமிழ் இணைய அறிமுகப் பட்டறை: தன்னார்வலர்கள் தேவை

சூன் 23-27, 2010 நடக்கும் உலகத் தமிழ் இணைய மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழ்க் கணினி, இணைய நுட்பம் குறித்த கண்காட்சி நடைபெறுகிறது. இதில் தமிழ் இணையம் குறித்த அறிமுகம், பயிற்சி அளிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்த் தட்டச்சுப் பயிற்சி, தமிழ் இணைய அறிமுகம், தமிழில் இணைய அறிமுகம், வலைப்பதிவுகள், விக்கிப்பீடியா, கட்டற்ற மென்பொருள் இயக்கம் போன்ற அடிப்படைக் கருக்களில் பயிற்சி அளிக்கலாம். தமிழ் இணையத்தில் பால் ஆர்வமுள்ள நண்பர்களாக இந்த நிகழ்ச்சியைக் கூடிச் செய்து கலைவோம். [...]

தமிழ் விக்கிப்பீடியா பயிற்சி

சனவரி 18, 2009 அன்று சென்னையில் கிருபாவின் அலுவலகத்தில் தமிழ் விக்கிப்பீடியா பயிற்சி வகுப்பு நடந்தது. நிகழ்ச்சி பற்றி விக்கி பயனர்களின் கருத்துகள் மா. சிவக்குமாரின் கருத்து * வடபழனி பகுதி உள்ளூர் அச்சு இதழில் வெளிவந்த செய்தியைப் பார்த்தே பலர் வந்திருந்தார்கள். அடுத்தடுத்த வலைப்பதிவு, விக்கி, இணையப் பட்டறைகளுக்கும் அச்சு, ஒளி, ஒலி ஊடகங்கள் மூலம் கூடுதலாக விளம்பரப்படுத்த வேண்டும். * கிருபா, விடுமுறை நாளில் மூடிக் கிடக்கும் தன்னுடைய அலுவலக இடம், கணினிகளையே இதற்குப் [...]

சென்னை வலைப்பதிவர் பட்டறை திட்டமிடப்பட்டது எப்படி?

989 மடல்கள். இரண்டு மாத உழைப்பு, திட்டமிடல். நூற்றுக்கணக்கில் தொலைபேசி உரையாடல்கள். ஒவ்வொரு வாரமும் பட்டறை குறித்த திட்டமிடலுக்கான நேரடி சந்திப்புகள். அரங்கத்தை இறுதி செய்வது, குறுந்தகடு, நூல் அச்சிடல் வேலை என்று இவற்றுக்காக குறைந்தது 15 மனித உழைப்பு நாட்களாவது செலவு இடப்பட்டிருக்கும். இவற்றின் விளைவாகத் தான் பதிவர் பட்டறை சாத்தியமானது.