”ஏ..நீயும் புலியா?”, “உங்கிட்ட சாக்கிரதையா இருக்கணும் டோய்”, “அடுத்து எங்க தாக்குதல்?” “பிடிச்சு உள்ள போடப் போறாங்க”
இதன் உள்ளார்ந்த பொருளும் தொனியும் புரிதலும் இது தான் -
ஈழத் தமிழர்களுடன் பழகுபவர்கள் எல்லாரும் விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறார்கள். விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள். அவர்களுடன் பழகாமல் இருப்பது நல்லது. ஈழத் தமிழர்களுடன் பழகப் போய் ஏன் வம்பு? சும்மா, வீணா சண்டை போடுகிறார்கள்.
என்னை மிகவும் கவலை கொள்ள வைப்பதுவும் எரிச்சலடைய வைப்பதும் இது போன்ற தொனிகளில் வரும் மறுமொழிகள் தான்.
[Read more →]
Tags:ஈழத்தமிழர்·ஈழம்·தீவிரவாதம்·நாட்குறிப்பு·புலிகள்·விடுதலைப் புலி·விடுதலைப்புலிகள்
2007 ஆம் ஆண்டை “வலைப்பதிதல் ஆண்டு” என்று நாட்குறிப்பில் எழுதத்தக்க அளவு வலைப்பதியும் வேகம் கூடுகிறது!! 2007 தொடக்கத்தில் துறை சார் பதிவுகள் என்று ப்ளாகரில் எண்ணற்ற புதுப் பதிவுகள் தொடங்கி, பராமரிப்பில் விழி பிதுங்கி, தொடக்க ஆர்வம் குன்றி நிறைய பதிவுகளை அழித்து விட்டேன். இனி புதிதாய் ஒரு வலைப்பதிவையும் எங்கும் திறக்கும் ஆர்வம் இல்லை. இருக்கிற வலைப்பதிவுகள் போதும்
தனித்தளத்துக்கு நகர்வது, திரட்டிகளில் இருந்து விலகுவது வலைப்பதியும் வேகத்தைக் குறைக்கும் என்று நினைப்பு பொய்த்துப் போனது
திரட்டிகளில் இருந்த போது இருந்ததை விட மறுமொழிகள் எண்ணிக்கை குறைந்தது. ஆனால், அவற்றின் தரம் கூடியது. வருகையாளர் எண்ணிகையும் கூடியது.
[Read more →]
Tags:நாட்குறிப்பு·வலைப்பதிதல்·வலைப்பதிவு
இந்தத் தனிப்பதிவு போக, அப்பப்ப பிற தளங்களில், கூட்டுப் பதிவுகளில், நண்பர்களின் பதிவுகளில் எழுதுவதும் ஒலி உரையாடல்களில் பங்குபெறுவதும் உண்டு. அவற்றில் சிலவற்றை ஒரு குறிப்புக்காக இங்கு தொகுத்து வைக்கிறேன்.
அண்மைய இடுகைகள்
தமிழ் விக்சனரியில் ஒரு இலட்சம் சொற்கள்
தமிழாக்கத் தொனி குறித்த உங்கள் கருத்து தேவை
ஆன்மிகப் பதிவுகளால் தமிழ் இணையத்துக்கு நன்மை உண்டா?
பதிவர் சுதந்திரமும் போலித்தனமும்
தமிழ்99 - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
தமிழ் வலைப்பதிவுலகம்
2 நிமிடத்தில் செய்த திரட்டி
2680+ தமிழ் வலைப்பதிவுகள் பட்டியல், OPML வெளியீடு
பதிவுகளைத் திரட்ட பதிவரின் அனுமதி [...]
[Read more →]
Tags:நாட்குறிப்பு·வலைப்பதிதல்
நெதர்லாந்தில், இந்தியா குறித்து:
1. சாதின்னா என்ன? ஏன் சாதி இருக்கு? யார் சாதியை உருவாக்கினாங்க?
பதிலை முழுசா விளக்குவதற்குள் மண்டை காய்ந்து ஓடி விடுவார்கள்!
2. நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை எப்படி ஏத்துக்கிறீங்க? பெண்ணைத் தெரியாம எப்படி கூட வாழ்றது? திருமணத்துக்கு மதம், சாதி, மொழி-ன்னு என்னென்ன தடைகள் வரும்? நெருங்கிய சாதிப் பெண் என்றால் மணந்து கொள்ளலாமா? அது எப்படி அத்தை மகளை மணக்கிறீங்க?
நான் சொல்றது - நெருங்கிய சாதி என்ன, அத்தை மகளே ஆனாலும் எந்தப் பிரச்சினையும் இல்லாம [...]
[Read more →]
Tags:கேள்வி·கேள்விகள்·நாட்குறிப்பு·வாழ்க்கை·வினா
அஞ்சலிக்குப் போட்டியாய் ஒரு குட்டிப் பதிவரை இறக்கலாம்னு என் அக்கா பையனை ”தாஜா” பண்ணேன். பெரிய மனசு பண்ணி, ஒலிப்பதிவாவே போட்டுக் கொடுத்துட்டான்
குழலினிது யாழினிது என்பர் தன் அக்கா மகன் மழலைச்சொல் கேளா தவர் !
[Read more →]
Tags:ஒலிப்பதிவு·குழந்தைகள்·நாட்குறிப்பு
இந்த முறை ஊருக்குப் போனப்ப, மருதமலை அடில உள்ள ஒரு நாடிஜோசிய மையத்துக்கு அக்கா என்னை அழைச்சுக்கிட்டுப் போனாங்க. தம்பி ஆராய்ச்சி பண்ணாம இணையத்துலயே கிடக்குறானே, தேறுவானானு அவங்க கவலை..என்னடா வெளிநாட்டுல ஏதாச்சும் girl friend கிடைக்குமான்னு என் கவலை ஆக, திருமணக்காண்டம், வேலை காண்டம் இரண்டும் பார்க்குறதுன்னு முடிவு. ஏற்கனவே, அக்காவப் பத்தின விவரங்கள் எல்லாம் அந்த மையத்துல தெளிவா சொல்லி இருந்ததால, நம்மள பத்தி எப்படி சொல்லுறாருன்னு ஒரு பரபரப்பு.
போன உடன என் [...]
[Read more →]
Tags:கை ஜோசியம்·கை ஜோதிடம்·கைஜோசியம்·சாதகம்·ஜாதகம்·ஜோசியம்·ஜோதிடம்·நாடி ஜோசியம்·நாடி ஜோதிடம்·நாடிஜோசியம்·நாடிஜோதிடம்·நாட்குறிப்பு
இன்று நம்மை நினைத்துக் கொள்பவர்கள் எத்தனை பேர்?
நம் வெற்றிக்கு வாழ்த்துக்கள் மட்டும் சொல்லி விருந்து கேட்காமல், அதைத் தன் வெற்றியாக கருதி அடுத்தவர்களிடம் சொல்லி மகிழ்பவர்கள் எத்தனை பேர்?
நம் இழப்புக்கு வருந்துபவர்கள் எத்தனை பேர்?
எப்படி இருக்கிறாய் என்று கேட்பதற்காக மெனக்கெட்டு அழைப்பவர்கள் எத்தனை பேர்?
அடுத்து நம்மை எப்போது பார்ப்போம் என்று நினைப்பவர்கள் எத்தனை பேர்?
நாம் கேட்காமலேயே தேவையறிந்து உதவுபவர்கள் எத்தனை பேர்?
கடனாகக் கொடுக்காமல், கொடுக்கும் பணம் நமக்கு உதவுமே என்று தருபவர்கள் எத்தனை பேர்? இலட்சக்கணக்கில் தந்த [...]
[Read more →]
Tags:நாட்குறிப்பு·வாழ்க்கை
தமிழ்நாட்டில் இருந்த வரைக்கும் வெயில் பத்தி அலுப்பு தான் இருக்கும். ஆனா, ஐரோப்பிய வாழ்க்கைல வெயிலைப் பார்த்து தான் வாழ வேண்டியதா இருக்கு..இங்க வந்த புதுசில ”The weather is great, right?” னு யாராச்சும் சொன்னா ”சரி, அதுக்கென்ன இப்ப”-னு சலிப்பா இருக்கும். ஆனா, ஒரு முழு ஐரோப்பிய குளிர் காலத்துல மண்டை காஞ்சப்புறம் வெயிலோட அருமை இப்ப புரிய ஆரம்பிச்சிருச்சு. இத்தனைக்கும் நெதர்லாந்து வரலாற்றிலயே இந்த குளிர் காலம் தான் வெப்பம் கூடின ஆண்டாம். [...]
[Read more →]
Tags:நாட்குறிப்பு·வெயில்
2005 நவம்பர் முதல் 2006 ஜனவரி வரை ஜெர்மனியின் முன்சன் நகரில் உள்ள தமிழாலயப் பள்ளியில் ஞாயிற்றுக் கிழமை ஓய்வு நாளில் தமிழ்ப் பாடம் சொல்லித் தந்தது மறக்க முடியாத ஒரு அனுபவம். பெரும்பாலும் தமிழ்நாட்டுத் தமிழர்கள், அதுவும் நன்கு படித்த தமிழர்கள், ஈழத் தமிழர்களுடன் ஒப்புக்கு ஓரிரு சொற்கள் பேசுவதுடன் ஒதுங்கிக் கொள்வது தான் வழக்கம் என்றும், இப்படி ஒருவர் நேரடியாக உதவ வந்திருப்பது பெரு மகிழ்ச்சி என்றும் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் தெரிவித்தார்கள்.
இது போன்ற [...]
[Read more →]
Tags:அனுபவம்·கல்வி·ஜெர்மனி·தமிழ்·நாட்குறிப்பு·முன்சன்·மூன்சன்
அன்புன்னா என்ன?
இந்தக் கேள்வி தோன்றின முதல் முறையே அன்பைத் தவற விட்டு ரொம்ப நேரமாயிடுச்சோன்னு தோணுது..
இந்தக் கேள்வி எனக்கு எப்ப முதன் முதல தோணுச்சுன்னு சரியா நினைவில்லை. ஆனா, அடிக்கடி வந்து போகும் கேள்வி இது. இதுக்கான பதில் புரிஞ்ச மாதிரியும் இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு. புரிஞ்சும் ஏத்துக்க முடியாத மாதிரியும் இருக்கு. புரியாட்டியும் தேடல் மட்டும் ஓயாம இருக்கு.
அம்மா, அப்பா, வீடு-னு அழகான சின்ன வட்டத்தைத் தாண்டி பாசம் வைக்கத் தொடங்கின காலம். மூணாம் [...]
[Read more →]
Tags:அன்பு·காதல்·நாட்குறிப்பு·பாசம்·வாழ்க்கை