1. Project Tamils – உங்களுக்குத் தெரிந்த தமிழ், தமிழர் தொடர்புடைய இலாப நோக்கற்ற திட்டங்கள் பற்றிய தகவலைச் சேர்த்து உதவலாம். 2. சேகரம் – நூறு ஆண்டு பழமை மிக்க தமிழ் நூல்களின் அரிய தொகுப்பு. 3. பேயோன் – இவர் தற்காலத் தமிழ் எழுத்தாளர்கள், அறிவுப் போக்குகளைக் கிண்டல் செய்து எழுதுகிறார். தங்களை எழுத்தாளர்கள் என்றுச் சொல்லிக் கொள்பவர்களை விட இவரது எழுத்து மிகச் சுவையாக உள்ளது. தனது முதல் ஆயிரம் டுவீட்டுகளை ஒரு புத்தகமாகவே [...]
தொடுப்புகள் – August 24, 2008
1. தமிழில் கூகுள் செய்திகள் – தினத்தந்தி, மாலைமலர் போன்ற ஒருங்குறியில் இல்லாத தமிழ்த் தளங்களில் இருந்தும் செய்திகளைத் திரட்டித் தானியக்கமாகத் தொகுத்துத் தருகிறது. சில புதிய தமிழ்ச் செய்தித் தளங்களும் தென்படுகின்றன. 2. RSS Meme – வலையில் யார் எதை விரும்பிப் படித்துப் பகிர்கிறார்கள் என்று அறியலாம். இத்தளத்தின் This Week பகுதியில் உண்மையிலேயே நல்ல தொடுப்புகளைக் கண்டு கொள்ளலாம். 3. Down For Everyone or Just me – ஏதாவது தளம் [...]
தொடுப்புகள் – 8 பெப்ரவரி 2008
பல ஆங்கிலப் பதிவுகளில் Links for this week, Links for today என்று தொடுப்பு கொடுப்பதையே வேலையாக வைத்திருக்கிறார்கள். தொடுப்புப் பதிவுகள் என்று பதிவு வகையே இருக்கிறது. நாளைக்குப் பல பக்கங்களை பயர்பாக்ஸ் உலாவியில் சேர்த்து வைக்கிறேன். எல்லாவற்றையும் Del.icio.us போன்ற தளங்களில் ஏற்றிப் பகிர பொறுமையும் தேவையும் இருப்பதில்லை. எனவே, எனக்குப் பயன்பட்ட சுவையான, பயனுள்ள தகவல்களைத் தரும் தொடுப்புகளை அவ்வப்போது இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.