கில்லியில் இருந்த கால்வாசி வேகம். பொழுதுபோக்கு கூட இந்தப் படத்தில் இல்லை. இடைவேளையிலேயே எல்லாரும் நெளிய ஆரம்பித்து கைக்கடிகாரம் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். படம் முடிந்த பிறகு “என்னடா காக்கா, குருவின்னு படம் எடுக்கிறீங்க” என்று யாரோ சொல்லிக் கொண்டிருந்தார்.
The Bourne Ultimatum, The Bourne Supremacy, The Bourne Identity – Action படம்னாலே ஒன்னு Superman, Spider-man வகையறா ஜட்டிமேன் படங்கள் அல்லது James Bondன் சாகசப் படங்கள் போல தான் இது வரைக்கும் பார்த்து அலுத்துப் போய் இருந்தது. நண்பரின் மூலம் கிடைத்த திருட்டு டிவிடியைப் பார்த்து இந்தப் படத்துக்கு செம ரசிகனாகி The Bourne Supremacy, The Bourne Identityனு பாகம் 3, 2, 1னு தலைகீழா இந்த படத் தொடரைப் [...]
பள்ளிக்கூடம் – முதல்ல தங்கர் பச்சான் தன் படங்களைப் பத்தி உருகி உருகி பேசுறதைத் தவிர்க்கணும். அழகியின் பாதிப்பை விட்டு இன்னும் அவர் மீளவில்லை. அழகியைத் தவிர வேற எந்தப் படமும் பாதிப்பை ஏற்படுத்துவதாயும் இல்லை. இனிமே சினேகா பேச்சை நம்பக்கூடாது. இந்தப் படத்திலயும் புதுப்பேட்டை படத்திலயும் வாழ்நாள் கதாப்பாத்திரம் என்ற rangeல் build-up கொடுத்து இருந்தாங்க. அப்படி ஒன்னையும் காணோம் படத்தில. இன்னும் இரண்டு படம் இப்படி நடிச்சாருன்னா நரேன் பாரதிராஜாவின் மாப்பிள்ளை நாயகர் ராஜா [...]
மொழி – இப்படி மனச வருடுற மாதிரி இதமா ஒரு தமிழ்ப் படம் பார்த்து ரொம்ப நாளாச்சு !!! வழக்கமா, ரொம்ப hype செய்யப்படுற படங்கள் சொதப்பலா போயிடும். இல்ல, படம் நல்லா இருந்தாலும் மிகை எதிர்ப்பார்ப்பே படத்தைப் பத்தி குறைவா எடை போட வைச்சிடும். அக்கு வேறு ஆணி வேறா மொழி படத்தோட கதை, விமர்சனங்களைப் படிச்ச பின்னாலும், படம் பார்க்கும்போது எந்த விதத்திலும் bore அடிக்கல. ஓடையில் மிதந்து போற பரிசல் மாதிரி அழகா [...]