Tag: திரைப்பட விமர்சனம்

  • குருவி – திரை விமர்சனம்

    கில்லியில் இருந்த கால்வாசி வேகம். பொழுதுபோக்கு கூட இந்தப் படத்தில் இல்லை. இடைவேளையிலேயே எல்லாரும் நெளிய ஆரம்பித்து கைக்கடிகாரம் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். படம் முடிந்த பிறகு “என்னடா காக்கா, குருவின்னு படம் எடுக்கிறீங்க” என்று யாரோ சொல்லிக் கொண்டிருந்தார்.

  • கற்றது தமிழ்

    தமிழ் M.A (எ) கற்றது தமிழ் படம் பார்க்கும் போது என் பள்ளி வாழ்க்கை, தமிழுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு, தமிழ் படித்திருந்தால் நான் எப்படி இருந்திருப்பேன் போன்ற நினைவுகள் வந்து போயின. நம் வாழ்க்கை குறித்த நினைவுகளைக் கிளறி விட இயல்வது ஒரு கலைபடைப்பின் வெற்றி தான். இப்படி ஒரு படம் வந்திருக்காவிட்டால் இன்றைய சூழலில் தமிழ்ப் படிப்பு,  தமிழ்ப் பட்டதாரிகள் நிலை, படம் தொட்டுக் காட்டும் சமூக ஏற்றத் தாழ்வுகள் குறித்து இன்றைய சூழலில்…

  • The Bourne, Riding alone for thousands of miles, Ratatouille, The Prince and Me

    The Bourne Ultimatum, The Bourne Supremacy, The Bourne Identity – Action படம்னாலே ஒன்னு Superman, Spider-man வகையறா ஜட்டிமேன் படங்கள் அல்லது James Bondன் சாகசப் படங்கள் போல தான் இது வரைக்கும் பார்த்து அலுத்துப் போய் இருந்தது. நண்பரின் மூலம் கிடைத்த திருட்டு டிவிடியைப் பார்த்து இந்தப் படத்துக்கு செம ரசிகனாகி The Bourne Supremacy, The Bourne Identityனு பாகம் 3, 2, 1னு தலைகீழா இந்த படத் தொடரைப்…

  • பள்ளிக்கூடம் | பாவம் டிகாப்ரியோ

    பள்ளிக்கூடம் – முதல்ல தங்கர் பச்சான் தன் படங்களைப் பத்தி உருகி உருகி பேசுறதைத் தவிர்க்கணும். அழகியின் பாதிப்பை விட்டு இன்னும் அவர் மீளவில்லை. அழகியைத் தவிர வேற எந்தப் படமும் பாதிப்பை ஏற்படுத்துவதாயும் இல்லை. இனிமே சினேகா பேச்சை நம்பக்கூடாது. இந்தப் படத்திலயும் புதுப்பேட்டை படத்திலயும் வாழ்நாள் கதாப்பாத்திரம் என்ற rangeல் build-up கொடுத்து இருந்தாங்க. அப்படி ஒன்னையும் காணோம் படத்தில. இன்னும் இரண்டு படம் இப்படி நடிச்சாருன்னா நரேன் பாரதிராஜாவின் மாப்பிள்ளை நாயகர் ராஜா…

  • சிக்கோ

    சிவாஜி படத்தின் 107வது திரை விமர்சனம் படிச்சிக்கிட்டு இருந்தீங்கன்னா அத விட்டுட்டு, முதல் வேலையா, தி பைரேட் பே போய் சிக்கோ திரைப்படத்துக்கான டொரன்ட் கோப்புகளை உங்க கணினில பதிவிறக்கிப் படத்தைப் பாருங்க. கோப்புகளைப் பதிவிறக்கும் முன்னர் பிட்டொரன்ட் நிறுவிக்கங்க. மருத்துவ வசதி வணிக மயமாக்கப்படுவதால் சாதாரண மக்கள் எப்படி பாதிக்கப்படுறாங்கன்னு அமெரிக்காவை அடிப்படையா வைச்சு சொல்லி இருக்கிறார், இயக்குனர் மூர். இதை வெறும் ஒரு நாட்டினரின் மருத்துவ கவனிப்புப் பிரச்சினைன்னு பார்க்காம, மருத்துவம் – கல்வி…

  • நெதர்லாந்தில் சிவாஜி

    2005 பாதியில் ஐரோப்பா வந்தது முதல் இது வரை திரையரங்குக்குப் போய் தமிழ்ப் படம் பார்த்தது இல்லை. முன்சனை விட்டு வரும்போது தான் அங்க தமிழ்ப் படம் போடுவாங்கங்கிறது தெரியும். நெதர்லாந்தில், ரஜினி, கமல், விஜய், விக்ரம், அஜீத் போல பெரிய நடிகர்கள் படம் மட்டும் ஒரு காட்சி காட்டுவாங்கன்னு கேள்விப்பட்டு இருந்தோம். லைடன்ல இருந்து 30 நிமிட ரயில் பயண தூரத்தில் இருக்கும் பீவர்வைக்கில் சிவாஜி இன்னிக்கு ஒரு காட்சி போட்டு இருந்தாங்க. நெதர்லாந்து முழுக்க…