“ஆங்கிலத்தில் 26 எழுத்துகள் மட்டுமே உள்ளது. தமிழில் 247 எழுத்துகள் இருப்பதால் குழந்தைகள் கற்றுக் கொள்ளச் சிரமப்படுகிறார்கள்” என்று சிலர் எழுதுகிறார்கள்.
ஆங்கில எழுத்துமுறை இலகுவானதா? இல்லை.
ஆங்கிலத்தில் பெரிய எழுத்துகள் 26. இவற்றில் இருந்து மாறுபடும் சிறிய எழுத்து வடிவங்கள் 16. மொத்தம் 42 எழுத்துகள்.
எந்தெந்த இடங்களில் பெரிய எழுத்துகள் வரும், வராது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
chalk என்பதில் ch ச ஒலி தரும். அதுவே, character என்பதில் ch க ஒலி தரும். சில இடங்களில் [...]
எழுத்துச்சீர்மை பற்றிய பேரா. வா.செ.கு அவர்களின் உரையைக் கண்டேன்.
தமிழ் உயிர்மெய்யெழுத்துகளில் ஆ, ஐ, எ, ஏ, ஒ, ஓ, ஔ வரிசைகளை எழுத அந்தந்த மெய்யெழுத்துகளையும் அவற்றுக்கு முன்பும் பின்பும் சில குறியீடுகளையும் பயன்படுத்துகிறோம். இது போல், இ, ஈ, உ, ஊ வரிசைகளை எழுதுவதற்காகப் புதிய குறியீடுகளை அறிமுகப்படுத்துகிறார்.
இந்தச் சீர்திருத்தத்தை முன்வைப்பதற்கு முக்கிய காரணமாக தமிழகத்துக்கு வெளியே 15 இலட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்றும் இச்சீர்திருத்தம் அவர்கள் இலகுவாகத் தமிழ் கற்க உதவும் என்றும் சொல்கிறார். [...]
பார்க்க: Tamil Baby Names Websites
**
நண்பர் கார்த்திக், தமிழ்க் குழந்தைகள் பெயர்கள் தரவுத்தளம் ஒன்று உருவாக்கி உள்ளார். விரைவில் இன்னும் ஆயிரக்கணக்கான பெயர்களைச் சேர்ப்போம். உங்களுக்குத் தெரிந்த பெயர்களை இந்தப் படிவத்தில் தரலாம். நேரடியாகவும் Google Spreadsheetல் பெயர்களை உள்ளிடலாம்.
தற்போதைய தளம் ஒரு முன்னோட்டப் பதிப்பு மட்டுமே. அறியப்பட்ட வழுக்கள்:
* IE 6 உடன் தகராறு.
* Google chromeல் விருப்பப் புள்ளி அடிப்படையிலான வரிசைப்படுத்தல் சரி இல்லை.
* தற்போது தரவுத்தளத்தில் உள்ள தமிழல்லா பெயர்களை நீக்க வேண்டும்.
January 16, 2009
in தமிழ்
பத்தாம் வகுப்பு வரை படித்த உறவினர் ஒருவர். ஆவணம் ஒன்றில் கையொப்பமிட்டு வந்திருந்தார்.
“தமிழ்ல தான் கையெழுத்து போட்டேன். படிக்காத முட்டாள்னு நினைச்சிருப்பாங்க” என்றார்.
“படித்த அறிவாளிகளும்” தமிழில் கையொப்பம் இடத்தொடங்கினால் மற்றவர்களின் தாழ்வு மனப்பான்மை நீங்கும்.
என்ன செய்யலாம்?
* (ஏற்கனவே உள்ள ஆங்கிலக் கையொப்பத்தை மாற்ற இயலாதோர்) பணம் /அதிகாரம் தொடர்பற்ற இடங்களிலாவது தமிழிலேயே கையொப்பமிடலாம்.
* நம்முடைய கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களில், நம்மைச் சுற்றியுள்ள சிறுவர்களை, தமிழில் கையொப்பமிட ஊக்குவிக்கலாம். “தமிழனே தமிழ்ல கையெழுத்து போடாட்டி, வேற எவன் போடுவான்”னு என் [...]
January 15, 2009
in தமிழ்
பக்கத்து வீட்டு அக்கா பையன் Mummyனு கூப்பிடுறத பார்த்து எரிச்சலா இருந்திச்சு.
“அக்கா, தமிழ் அது இதும்பீங்க. பேர் எல்லாம் கூட இனியன்னு தமிழ்ல வைச்சீங்க. இப்ப ஏன் Mummyன்னு கூப்பிடப் பழக்கினீங்க?”
“இல்லப்பா, சுதீசு சொல்றதைப் பார்த்து இவனும் பழகிட்டான்.”
சுதீசு முதல் பையன். தத்துப் பிள்ளை. அக்காவின் நாத்தனாரும் அவர் கணவரும் தற்கொலை செஞ்சுக்கிட்டதால, இவங்க எடுத்து வளர்க்கிறாங்க.
“சரி, சுதீசும் அம்மான்னு கூப்பிடுறது?”
“அம்மான்னு சொன்னா அவங்க அம்மா நினைவு வந்து அழ ஆரம்பிச்சுடுறான். Mummyனு சொன்னா அவனுக்குப் பரவால [...]
திருமணம், புதுமனை புகுவிழா போன்ற வீட்டுச் சடங்குகள், கோயில் விழாக்களை முழுக்கத் தமிழ்ப்பண்கள் மட்டும் பாடி நடத்தித் தருவோர் குறித்த தரவுத் தளம் ஒன்றை உருவாக்க விரும்புகிறோம். உங்களுக்குத் தெரிந்தவர்கள் பற்றி மறுமொழிகளில் குறிப்பிட்டு உதவுங்கள்.
கீழ்க்காணும் இருவரை நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.
சென்னை
ந. ஒளியரசு.
16/25, குளக்கரைத் தெரு.
சைதாப் பேட்டை
செல்பேசி: +9198403 23811
–
சிவத்திரு. சத்யவேல் முருகனார்
செல்பேசி: +919444042770 தொலைப்பேசி: +914422442915
–
திவாகரன்,
ஒளிதரு கயிலை, வளசரவாக்கம்,
செல்பேசி: 9840856050
–
கோவை
கார்த்திகேய குருக்கள்
கோவை
செல்பேசி: +919843582424
December 10, 2008
in தமிழ்
பார்க்க: Tamil Baby Names Websites
05.12.2008 தினமலர் கோவை பதிப்பில் பிறந்த நாள் வாழ்த்து பெற்ற குழந்தைகள் பெயர்கள்:
ஹிர்த்திக் ராஜ், பிரசன்னவர்மா, ராகுல், சம்யுக்தா, கிருத்திகாவர்ஷா, நவீன்கோபி, தாரிகா, ஹரிகிருஷ்ணன், யோகேஷ்குமார், கார்த்திகா, விஜயபாரதி, தருண், நவீன், ஹிரன்விகாஷ், சர்வேஸ்,ஸ்ரீஇமி, கார்த்திகா, நித்திலன், ரித்விக், மதன், கவுதம், வினுதர்ஷினி, முகிலா, பரத்ராம், சுமையா, பிரநீஷ், பிரகாஷ், ரஞ்சித், அமிர்வர்சினி, ரணீட்டா, உமயாள்தர்சினி, அகிலேஷ், சுவேதா, வசுந்தரா, சுபஸ்ரீ, கீர்த்தனா, ரித்திக், யோகேஸ்வரி, விகாஸ், கவின், முஹமதுஷைத், தனகவுரி, கார்த்திகாதேவி, [...]
செப்டம்பர் 17, 2008 இதழில் ஆனந்த விகடன் எழுதிய சரோசா திரைப்பட விமர்சனத்தை NHM Lister கொண்டு ஆய்ந்ததில்,
தனித்துவமான மொத்த சொற்கள்: 346
தனி்த்துவமான மொத்த ஆங்கிலச் சொற்கள்: 69
ஆங்கிலக் கலப்பு விழுக்காடு: 19.94% (ஐந்தில் ஒரு சொல்!)
கலந்துள்ள சொற்கள்:
Underplay, out, acting, action, english, innings, editing, episode, over, factory, group, climx, commitment, colorful, comedy, comedian, good night, cool, chemical, successful, car, cinema, serial, serious, second, treatment, dull, [...]
counter, filter, reader போன்று -er இல் முடியும் ஆங்கிலச் சொற்களையும் இன்ன பல சொற்களையும் எண்ணுவான், வடிகட்டுவான், படிப்பான் என்று -ஆன் விகுதி போட்டு தமிழாக்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது. இதைத் தவிர்க்கலாம்.
இத்தகையை சொற்களுக்கு -இ விகுதி உதவலாம். சுருக்கமாகவும் மேற்கண்ட குறைகள் இல்லாமலும் இருக்கும். எ.கா: Counter – எண்ணி, Washer – துவைப்பி, கழுவி.
பல நாடுகள், சமயங்கள் தோன்றுவதற்கு முன்பே தமிழ் தோன்றியது. பல நாட்டினரும் பல சமயத்தினரும் தமிழ் பேசுகின்றனர். ஒரே பிறப்பில் நாட்டையும் சமயத்தையும் ஒருவர் மாற்றிக் கொள்ள முடியும். ஆனால், தாய்மொழியை மாற்றிக் கொள்ள இயலாது. எனவே, நாடுகள், சமயங்களைக் காட்டிலும் மொழி பெரிது என்று கருதாவிட்டாலும், அவற்றுக்குத் தருவதற்கு ஈடான மதிப்பை மொழிக்கும் தர வேண்டும்.