Tag: தமிழ்

  • தமிழ் உரையாடல்

    இற்றை: இம்முயற்சி தொடர்பான தகவல் http://tamilirc.wordpress.com/ தளத்தில் தொடர்ந்து வெளிவரும். செப்டம்பர் மாத உரையாடலின் படி இங்கு உள்ளது. தமிழ் மொழி வளர வேண்டும் என்று பலர் உழைக்கிறார்கள். இவர்களிடையே ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லாமல், என்ன செய்கிறார்கள் என்று மற்றவர் அறியாமல் இருக்கிறார்கள். அதே வேளை, தமிழ் ஆர்வம் உடைய பலருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள். இவர்கள் அனைவரையும் இணைக்கும் பாலமாக ஓர் உரையாடலை முன்னெடுக்க விரும்புகிறேன். இது தங்கள் எண்ணங்கள்,…

  • தமிங்கில ஊர்கள்

    தற்போது ஊர்ப் பெயர்களின் ஆங்கில முன்னொட்டை இட்டு எழுதும் வழக்கம் பெருகி வருகிறது. எடுத்துக்காட்டுக்கு, மேலூர் அருகில் இருக்கும் அம்மாப்பட்டி முன்பு மே. அம்மாப்பட்டி. இப்பொழுது M. அம்மாப்பட்டி. தமிழ்நாட்டில் தமிழ் பெயரில் உள்ள ஊருக்கு எதற்கு ஆங்கில முன்னொட்டு? ஏன் இந்தப் போக்கு? இட நெருக்கடியில் பெயர் எழுத வேண்டிய பேருந்து அறிவிப்புப் பலகைகள், கடித முகவரிகள், மற்ற இடங்களில் சுருக்கி எழுத வேண்டிய தேவையின் காரணமாகப் பெயரைச் சுருக்குகிறார்கள். ஆட்களின் பெயர்ச்சுருக்கங்களை எழுதும் போது…

  • ஞ்ஜ

    ஞ்ஜ என்று எழுதுவது தேவையற்ற கிரந்தச் சேர்ப்பு மட்டுமல்ல. உச்சரிக்கவே முடியாத எழுத்துப் பிழையும் கூட.

  • தமிழ் மோதிரம்

    சென்னை. புகழ் பெற்ற நகைக் கடை ஒன்று. பெயர் பொறித்து ஒரு மோதிரம் வாங்கலாம் எனச் சென்று இருந்தோம். முன்கூட்டியே சில குறிப்பிட்ட வடிவங்களில் பெயர் எழுதி வைத்திருந்த மாதிரிகளைக் காட்டினார்கள். ஒன்றில் கூட தமிழ் எழுத்தில்லை. “தமிழ்ல பேரு எழுதித் தருவீங்களா?” “இல்லீங்க. தமிழ்ல செய்ய முடியாது”. “ஓ.. சரி, எந்தக் கடைல தமிழ்ல எழுதித் தருவாங்கன்னு சொல்லுங்க. அங்க போறோம்.” “இல்லீங்க.. இப்பல்லாம் தமிழ்ல வர்றது இல்லீங்க. தமிழ்ல design பண்ணுறதுல சிக்கல் இருக்குங்க”…

  • எழுத்துப் பிழை

    எழுத்துப் பிழை

    விக்கியில் உழன்று உழன்று உலகமே ஒரு விக்கி உருண்டையாகி விட்டது. எழுத்துப் பிழைகள் எங்கு கண்ணில் பட்டாலும் திருத்தக் கை துடிக்கிறது 🙂 இந்த எழுத்துப் பிழைகள் சொல்லும் செய்தி என்ன? 🙂

  • தமிழில் பெயர்ப் பலகைகள்

    பொருளகம், தங்கும் விடுதி, பெரு அங்காடி, காலணியகம், இனிப்பகம், உணவகம், மின்னணுப் பொருளம், எழுது பொருளகம், கணினி பயிற்சி மையம்.. இப்படிச் சென்னையின் சில கடைகளில் புதிய தமிழ்ப் பெயர்ப் பலகைகள் தென்படுகின்றன. என்னடா, இது தமிழ்நாடு தானா இல்லை இலங்கை, சிங்கப்பூரா என்று குழப்பமாகப் போய் விட்டது 🙂 தமிழில் பெயர் எழுத வேண்டும் என்று முன்பே அரசு உத்தரவு இருந்தாலும், இப்போது செம்மொழி மாநாட்டை முன்னிட்டு அந்த உத்தரவைத் தீவிரமாக நடைமுறைப்படுத்துகிறார்களாம். நல்ல மாற்றம்.…

  • நவம்பர் 7 – கோவையில் தமிழ்க் கணிமை ஆர்வலர் சந்திப்பு

    கோவையில், நவம்பர் 7, 2009 சனிக்கிழமை அன்று தமிழ்க் கணிமை ஆர்வலர் சந்திப்பு நடைபெறுகிறது. குமரகுரு பொறியியல் கல்லூரி கணினி அறிவியல் துறையைச் சேர்ந்த முனைவர். முத்துக்குமார் இந்த ஒன்று கூடலை ஏற்பாடு செய்திருக்கிறார். உத்தமம் அமைப்பின் செயலாளார் திரு. வா. மு. செ. கவியரசன் அவர்கள் தலைமையேற்று உத்தமத்தின் செயல்பாடுகளை விளக்குவார். அடுத்து விக்கிப்பீடியா, தமிழ் இணையம், வலைப்பதிவுகள், தமிழ்மணம் முதலிய திரட்டிகள் பற்றி நண்பர்கள் விளக்குவோம். மற்ற கல்லூரிகளில் இருந்தும் தமிழார்வல மாணவர்கள், ஆசிரியர்கள்…

  • நோக்கியா செல்பேசியில் தமிழில் எழுதுவது எப்படி?

    நோக்கியாவின் அடிப்படை செல்பேசி வகைகள் சிலவற்றில் தமிழில் எழுதலாம். தமிழ் விசைப்பலகையை முடுக்க குறுஞ்செய்தி எழுதும் பெட்டித் தெரிவுகளில் writing language – > தமிழ் என்று தெரிவு செய்யுங்கள். பல செல்பேசிகளில் தமிழ் எழுத்துகள் அச்சிடப்படாமல் இருக்கலாம். எனவே, விசை எண்  மற்றும் விசையில் உள்ள எழுத்து வரிசைகளைக் கீழே காணலாம். 1 – புள்ளி, ஆய்தம். 2 – அ, ஆ, இ, ஈ, உ, ஊ (உயிரெழுத்துகள் முதல் பகுதி) 3 –…

  • தமிழ்நாட்டில் ஆங்கிலம் தெரியாதவர்கள்

    ஆங்கிலம் தெரிந்தாலும் தமிழை விரும்பிப் பேசும், ஆங்கிலம் தெரியாமலேயே வாழ்க்கையில் வெற்றி பெற்ற எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஓரிருவரையாவது நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தால் உரையாடல் நன்றாக இருந்திருக்கும். ஆங்கிலம் தெரிந்து கொள்வது தான் வெற்றிக்கு வழி என்பது போல ஒருவர் தட்டுத்தடுமாறி அழுது கொண்டே ஆங்கிலம் பேசுகிறார். அவரை எல்லாரும் கைத்தட்டி உற்சாகப்படுத்துகிறார்கள். நிகழ்ச்சி முடிந்தது. ம்.

  • தமிழ் விக்கிப்பீடியா மீதான விமர்சனங்களும் பதில்களும்

    1. தமிழ் விக்கிபீடியாவில் இலங்கைத் தமிழ் நடை கூடுதலாகத் தென்படுகிறதே? தமிழ் விக்கிப்பீடியா தொடக்கம் முதல் பெருமளவு ஈழத்தமிழர்கள் ஆர்வத்துடன் பங்களித்து வருகிறார்கள். அவர்கள் நடையிலேயே அவர்கள் எழுதுவது இயல்பான ஒன்று. நாமும் கட்டுரை எழுதாமல், எழுதுவோரையும் எங்கள் நாட்டுத் தமிழ் நடையில் எழுதுங்கள் என்று கோருவது பண்பாடன்று.  எனினும், பன்னாட்டுத் தமிழருக்கும் புரிய வேண்டும் என்ற நோக்கில் அவர்களும் பெருமளவு பொதுவான சொற்களைப் பயன்படுத்தியே எழுத முயல்கிறார்கள். சில கலைச்சொற்கள், ஈழம் சார் சொற்களுக்கு மாற்றுச்…