Posts tagged as:

தமிழ் எழுதி

தட்டச்சு என்பது ஒரு மனப்பழக்கம். இந்த கூகுள் தமிழ் எழுதியில் எழுதிப் பழகி விட்டால், பிற எழுதிகளைப் பயன்படுத்த உங்களுக்கு கை வராது. ஆர்க்குட், ப்ளாகர் தவிர்த்த பிற தளங்களில் தமிழில் எழுதுவது உங்களுக்குச் சிரமமாகும். அதன் விளைவாக, கூகுள் தமிழ் எழுதி பக்கத்தை நாடத் தொடங்குவீர்கள். நேரடியாக எல்லா தளங்களிலும் இலகுவாகத் தமிழில் எழுதுவதை விடுத்து வீணே கூகுள் தமிழில் எழுதியில் இருந்து வெட்டி ஒட்டத் தொடங்குவீர்கள். இதனால், கூடுதல் கூகுள் சார்பு நிலையை அடைவீர்கள். அல்லது, பிற தளங்களில் எழுத வேறு மென்பொருள்கள், வேறு தட்டச்சு முறைகளைப் பயில வேண்டும். இதனால் உங்கள் மூளை குழம்பும்.

{ 37 comments }

பலரிடமும் நீங்கள் எந்த விசைப்பலகையில் கணினியில் தமிழில் எழுதுகிறீர்கள் என்று கேட்டால், “எ-கலப்பை” அல்லது “ஒருங்குறித் தமிழ்” என்று பதில் வருகிறது. குறியேற்றம் வேறு, மென்பொருள் வேறு, விசைப்பலகை வேறு என்ற புரிதல் வியக்கத்தக்க அளவில் மிகக் குறைவாகவே இருக்கிறது.
இது குறித்து தெளிவாக, விரிவாகப் புரிந்து கொள்ள மயூரனின் கட்டுரையைப் படிக்கப் பரிந்துரைக்கிறேன்.
தற்போதைக்கு, இது குறித்து எளிமையாக விளக்க ஒரு குட்டிக் கதை / உவமை இருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்துப் பார்த்தேன்
குறிப்பு [...]

{ 2 comments }

பார்க்க வேண்டிய பக்கங்கள்:
1. கணினியில் தமிழ் எழுத்துக்கள் தெரிய வைப்பது எப்படி?
2. தமிழில் எழுத மென்பொருள்கள்
3. கணிச்சுவடி
4. தமிழ்த் தட்டச்சுப் பயிற்சிப் பாடம்
நான் பரிந்துரைக்கும் முறை:
1. NHM writer பதிவிறக்கி, தமிழ் 99 விசைப்பலகையைப் பயன்படுத்துங்கள். NHM writer பயன்படுத்த NHM Writer Manual உதவும். வேறு எந்த விசைப்பலகை வடிவத்தையும் நான் பரிந்துரைப்பதில்லை. பார்க்க – சிறந்த தமிழ் விசைப்பலகை எது?
கீழே இருக்கிறது தான் தமிழ் 99 விசைப்பலகை அமைப்பு. படத்தை பெரிய அளவில் பார்க்க [...]

{ 10 comments }