Posts tagged as:

தமிழ்நாடு

ஆங்கிலம் தெரிந்தாலும் தமிழை விரும்பிப் பேசும், ஆங்கிலம் தெரியாமலேயே வாழ்க்கையில் வெற்றி பெற்ற எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஓரிருவரையாவது நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தால் உரையாடல் நன்றாக இருந்திருக்கும். ஆங்கிலம் தெரிந்து கொள்வது தான் வெற்றிக்கு வழி என்பது போல ஒருவர் தட்டுத்தடுமாறி அழுது கொண்டே ஆங்கிலம் பேசுகிறார். அவரை எல்லாரும் கைத்தட்டி உற்சாகப்படுத்துகிறார்கள். நிகழ்ச்சி முடிந்தது. ம்.

{ 0 comments }

ஒவ்வொருவர் அறியாமை, அரசியல், கொள்கைக்கு ஏற்பவும் மொழியைப் பயன்படுத்துகிறார்கள். அதிகாரப்பூர்வம் என்று ஒன்று தெளிவாக வரையறுக்கப்படுவதில்லை. அத்தகைய அதிகாரம் ஒன்று இருந்தாலும் நம்முடைய கொள்கைகளைப் புறந்தள்ளி அதை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை.

{ 10 comments }

தாய்மொழியைக் கட்டாயமாகக் கற்பிக்கலாமா என்று உரையாடிக் கொண்டிருக்கும் உலகின் ஒரே கேடு கெட்ட சமூகம் தமிழ்ச் சமூகமாகத் தான் இருக்க வேண்டும்.

{ 11 comments }

நேத்து கல்லூரி நண்பன் ஒருத்தன் கிட்ட பேசினேன். என்னோட பதிவுகளைப் படிச்சு பிடிச்சுப் போய், “ரவிசங்கர், இனி நாம் தூய தமிழிலேயே பேசுவோம், சரியா?” அப்படின்னு சொல்லி கொஞ்ச நேரம் “தூய” தமிழில் பேசப் பார்த்தான். அதைத் “தூய” தமிழ்னு சொல்லுறத விட உரைநடைத் தமிழ் / மேடைப் பேச்சுத் தமிழ் / மேடை நாடகத் தமிழ் / பழங்காலத் திரைப்படத் தமிழ் – னு சொல்லலாம்.
அவன் கிட்ட நான் பகிர்ந்துகிட்ட கருத்துக்களும் அதுக்கு அப்புறம் மனசில [...]

{ 10 comments }

ஐரோப்பியப் பெரு நகரங்களில் ஆங்கிலத்திலும் உரையாடி சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், “உனக்கு ஆங்கிலம் தெரியாதா” என்று யாரும் அதிகாரம் செய்ய முடியாது. “தயவுசெய்து ஆங்கிலத்தில் பேசுவீர்களா” என்று பணிவுடன் தான் கேட்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர் தான் வேறு ஆங்கிலம் பேசக்கூடிய கடைக்குச் செல்ல வேண்டி இருக்கும். இல்லை, அத்தகையை கடைகளைத் தேடி ஓய்ந்து கடைசியில் உள்ளூர் மொழியைக் கற்றுக் கொண்டு விடுவார். ஆங்கிலம் என்பது சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மட்டுமே பயன்படுத்தலாம். ஒரே ஊரில் பல ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டு உள்ளூர் மொழியை மதிக்காமல், கற்காமல் இருப்பது உள்ளூர்க்காரர்களுக்கான அவமானம் தான்.

{ 13 comments }

தமிழ்நாட்டில் தமிழின் நிலை, தமிழ் வளர்ச்சி குறித்த செய்திகளுக்கான தொடுப்புகளை இங்கு சேகரித்து வைக்க நினைக்கிறேன்.

{ 3 comments }

Englishland

November 26, 2007

குறிப்பு: amma not equal to அம்மா என்ற படிமத்தைச் சொடுக்கி இங்கு வருபவர்கள், சிறந்த தமிழ் விசைப்பலகை எது? என்ற தமிழ்99 விசைப்பலகை விளக்கக் கட்டுரைக்குச் செல்லவும். தவிர்க்க இயலாத காரணங்களால் பக்கம் வழ மாறியதற்கு வருந்துகிறேன்.

தமிழ்நாட்டில் தமிழர் தத்தம் பெயர்ச்சுருக்கங்களை ஆங்கிலத்திலேயே எழுதுகிறோம்.
தமிழ்நாட்டில் தமிழர் ஆங்கிலத்தில் தான் கையெழுத்து இடுகிறோம்.
பிற மொழி, ஆங்கிலம் கலக்காமல் தமிழில் மட்டும் பேசத் தெரியாது. ஆனால், பலரும் ஒரு தமிழ்ச் சொல்லும் கலக்காமல் நுனி நாக்கு ஆங்கிலம் பேசுகிறோம். [...]

{ 16 comments }

சாலையில் போகிற வண்டியில் புகை வந்தால், சாலையோர மரத்தில் புளியம்பழம் பறிப்பதை விட்டு விட்டு வண்டியை நிறுத்தி எட்டிப் பாருங்கள். வண்டியில் குண்டு இருந்து வெடித்து நீங்கள் செத்தால் 1 இலட்சம் கிடைக்கும்.
ஆளில்லா ரயில் சந்திப்பில் உங்கள் வாகனம் ரயிலோடு மோதி செத்தால், நீங்கள் அரசு ஊழியராயிருக்கும் பட்சத்தில், 2 இலட்சம் கிடைக்கும். இல்லாவிட்டால், 1 இலட்சம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
CNN, BBC, நம்ம ஊர் தொலைக்காட்சிகள் எல்லாம் மாய்ந்து மாய்ந்து காட்டுவதற்குத் தகுந்தவாறு யாராவது கொலைகாரனை [...]

{ 6 comments }

என்றாவது, தமிழ் வளர்ச்சித் துறை தொடர்புடைய தமிழக அரசு அமைச்சர் / அதிகாரி கண்ணில் படலாம் என்ற பேராசையில், தமிழக அரசுக்கு சில வேண்டுகோள்கள்.
* தமிழ்நாடு அரசு இணையத்தளத்தின் அனைத்துத் தகவல்களையும் முழுக்கத் தமிழில் தாருங்கள். TSCII வடிவில் இருந்தாலும், கூடவே ஒருங்குறித் தமிழிலும் ஒரு பதிப்பு தாருங்கள். இதன் மூலம் தமிழக அரசுத் தகவல்களை கூகுள் போன்ற தேடுபொறிகளின் மூலம் தேட இயலும்.
* தமிழ்நாடு அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி பாட நூல்கள் அனைத்தையும் ஒருங்குறி [...]

{ 3 comments }

நல்ல, தூய தமிழ்க் குழந்தைப் பெயர்கள் தரும் இணையத்தளங்கள்:
1. http://peyar.yemkay.com – நண்பர்களும் நானும் சேர்ந்து உருவாக்கும் வலை 2.0 தமிழ்ப் பெயர் தரவுத்தளம்.
2. TamilNation.org தரும் 800 தூய தமிழ்ப் பெயர்கள்.
3. தமிழீழ விடுதலைப் புலிகள் தொகுத்த ஆயிரக்கணக்கான தூய தமிழ்க் குழந்தைப் பெயர்கள்.
4. BabyNames.LookTamil
5. Thamizhagam.NET

**
தமிழர் பெயர்களில் பிற மொழித் தாக்கம்:
முந்தா நேத்து காலையில தூங்கிட்டிருந்தப்ப அண்ணன் அழைச்சார். அண்ணனுக்கு முதல் குழந்தை பிறந்திருக்கு.
“தம்பி, பையனுக்கு பேர் வைக்கணும். ர-வுல ஆரம்பிக்கிற நல்ல பேரா [...]

{ 23 comments }