November 3, 2009
in தமிழ்
கோவையில், நவம்பர் 7, 2009 சனிக்கிழமை அன்று தமிழ்க் கணிமை ஆர்வலர் சந்திப்பு நடைபெறுகிறது.
குமரகுரு பொறியியல் கல்லூரி கணினி அறிவியல் துறையைச் சேர்ந்த முனைவர். முத்துக்குமார் இந்த ஒன்று கூடலை ஏற்பாடு செய்திருக்கிறார்.
உத்தமம் அமைப்பின் செயலாளார் திரு. வா. மு. செ. கவியரசன் அவர்கள் தலைமையேற்று உத்தமத்தின் செயல்பாடுகளை விளக்குவார். அடுத்து விக்கிப்பீடியா, தமிழ் இணையம், வலைப்பதிவுகள், தமிழ்மணம் முதலிய திரட்டிகள் பற்றி நண்பர்கள் விளக்குவோம். மற்ற கல்லூரிகளில் இருந்தும் தமிழார்வல மாணவர்கள், ஆசிரியர்கள் வருகிறார்கள். மாணவர்கள் [...]
February 18, 2008
in தமிழ்
கணினியில் நம் மொழியில் எழுதவும் படிக்கவும் இயல்வது ஒரு அடிப்படை விசயமல்லவா? இதையே இத்தனை பத்தாண்டுகளாகச் செய்து கொண்டிருக்கிறோமே? இதுவா தமிழ்க்கணிமை என்று சாருவிடம் புலம்பிக் கொண்டிருந்தேன். ஆனால், இது விசயத்தில் அவரது பார்வையும் சொற்களும் நம்பிக்கை அளித்தன. அப்படி என்ன சொன்னார்?
நான் அறிந்த சில இணையத் தமிழ் நுட்ப ஆர்வலர்கள் பெயரைப் பதிந்து வைக்கிறேன்.
(எந்த வரிசையிலும் இல்லை)
1. முகுந்த் – தமிழா! அமைப்பின் முனைப்பான பங்களிப்பாளர்களில் ஒருவர். இவர் உருவாக்கிய எ-கலப்பை பல தமிழர்கள் கணினியில் எளிதாகத் தமிழ் எழுத உதவுகிறது.
2. மாகிர் – தமிழூற்று – தமிழர்களின் அறிவுச் சுரங்கம் என்ற பெயரில் தமிழிணையம் சார்ந்து பல நுட்பப் பணிகள் ஆற்றி வருகிறார். தமிழ் இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், விக்கி இயக்கங்கள் தொடர்பில் பயனுள்ள தேடு கருவிகள், [...]