ரவி

தமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு

ரவி random header image

பிற மொழியாளர் கண்டுபிடிப்புகளுக்குத் தமிழ்ப் பெயர் தரலாமா?

August 16th, 2008 · 20 Comments · தமிழ்

“பிற மொழியாளர் கண்டுபிடிப்புகளுக்கு அவர்கள் இட்ட பெயரே தர வேண்டும். அதுவே அவர்களுக்குத் தரும் மதிப்பு. தமிழில் பெயர் தருவது அவர்கள் அறிவைத் திருடுவது போல. கண்டுபிடிக்க வக்கில்லாத நாம் ஏன் பெயரை மட்டும் தமிழில் வைக்க வேண்டும்” என்பது போன்ற சிந்தனைகளைச் சில இடங்களில் கண்டேன்.
இச்சிந்தனை தவறு.
* கண்டுபிடிப்பின் பெயரில் கண்டுபிடித்தவர் பெயர், வணிக உரிமை பெற்ற பெயர் இருந்தால் மட்டுமே தமிழாக்கக்கூடாது. எடுத்துக்காட்டுக்கு, Diesel எல்லா மொழிகளிலும் Diesel தான். ஏனெனில், Diesel என்பது [...]

[Read more →]

Tags:

ஆன்

August 1st, 2008 · 17 Comments · தமிழ்

counter, filter, reader போன்று -er இல் முடியும் ஆங்கிலச் சொற்களையும் இன்ன பல சொற்களையும் எண்ணுவான், வடிகட்டுவான், படிப்பான் என்று -ஆன் விகுதி போட்டு தமிழாக்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது. இதைத் தவிர்க்கலாம்.

இத்தகையை சொற்களுக்கு -இ விகுதி உதவலாம். சுருக்கமாகவும் மேற்கண்ட குறைகள் இல்லாமலும் இருக்கும். எ.கா: Counter - எண்ணி, Washer - துவைப்பி, கழுவி.

[Read more →]

Tags:·

ஏன் பாடநூல் கலைச்சொற்களை அப்படியே பின்பற்றத் தேவையில்லை?

April 3rd, 2008 · No Comments · தமிழ்

பீடபூமி என்ற சொல்லுக்குப் பதில் மேட்டுநிலம் என்ற சொல்லை ஆளலாமா என்றொரு உரையாடல் தமிழ் விக்கிப்பீடியாவில் நிகழ்ந்தது.
“பீடபூமி என்ற சொல் பாடநூல் வழக்கில் இருப்பதால் இச்சொல்லையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்; ஒவ்வொரு கலைச்சொல்லிலும் குற்றம் கண்டுபிடித்து மாற்றிக் கொண்டிருந்தால் மாணவர்கள் குழம்ப நேரிடும்” என்று  ஒரு பக்க வாதம் இருந்தது.
குழப்பங்களைத் தவிர்க்க கலைச்சொற்களில் ஒருங்கிணைவு அவசியம் என்றாலும் எல்லா இடங்களிலும் பாடநூல் கலைச்சொற்களை மாற்றாமல் அப்படியே பயன்படுத்தத் தேவையில்லை.
ஏன்?
1. தற்போதும் கூட தமிழ்நாடு, இலங்கை, மலேசியா ஆகிய [...]

[Read more →]

Tags:··········

வாழ்த்துகள்

April 3rd, 2008 · 5 Comments · தமிழ்

இன்னைக்கு அக்கா கிட்ட இருந்து “காலை வணக்கம்” என்று “தமிழில்” மடல் வந்தது.

இப்படி காலை வணக்கம், மதிய வணக்கம்னு சொல்றது சரியா? ஏன்னா அது good morning என்பதன் நேரடித் தமிழாக்கமே தவிர, நம் பண்பாட்டில் இப்படி நேரத்தோடு சேர்த்து வணக்கம் சொல்வது இல்லையே? நெருங்கிய உறவுகளுக்குள் வணக்கம் சொல்லும் வழக்கமும் இல்லை. தவிர, good morning என்ற வாழ்த்து தரும் பொருளும் வணக்கம் என்ற சொல் தரும் பொருளும் வேறு வேறு அல்லவா?

[Read more →]

Tags:·····

இடைமுகப்புத் தமிழாக்கம்

March 27th, 2008 · 2 Comments · தமிழ்

தளங்கள், மென்பொருள்களைத் தமிழாக்குகையில் அவற்றின் தொனி எப்படி இருக்க வேண்டும் என்ற உரையாடல் தமிழ் விக்சனரி குழுமத்திலும் கணிமை வலைப்பதிவிலும் நடக்கிறது.
இந்த உரையாடல்களில் இருந்து இது ஒரு நோக்குப் பிரச்சினை என்று புரிகிறது. இவை நாம் கணினிக்குத் தரும் கட்டளைகள் என்று சிலரும், கணினி தம்மை நோக்கி அறிவுறுத்துவனவாக சிலரும் உணர்கிறார்கள். 
* இவை உயிரற்ற கணினிக்கு இடும் கட்டளைகள் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், கணினி தம்மைப் பார்த்துச் சொல்வதாக நினைக்கும் ஒவ்வொருவரிடமும் போய் “இது கணினிக்கு இடும் [...]

[Read more →]

Tags:··

எளிய தமிழ்

March 19th, 2008 · 3 Comments · தமிழ்

தகுந்த இடங்களில் புதிய பொருத்தமான சொற்களைப் பயன்படுத்துவதும் கற்றுக் கொள்வதும் தவிர்க்க இயலாதது.

புல்லாங்குழல் என்று சொன்னால் கூடத் தான் குழந்தைக்குப் புரியாது. அதற்காக காலத்துக்கும், ஓட்டை போட்ட இசைக் கருவி / பீப்பீ என்றே அதற்குப் புரிகிற மாதிரி சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? நம்மில் பலரும் புதிய தமிழ்ச் சொற்களைக் கற்றுக் கொள்வதை பள்ளிக்கூடக் காலத்துடன் நிறுத்திக் கொள்கிறோம். இது தான் பிரச்சினை. இந்தக் குறைவான சொற் தொகையைக் கொண்டு எப்படி உலகின் எல்லா கருத்துக்களையும் எடுத்துரைப்பது?

கணினிக்குப் புதியவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் கூட log in, password போன்ற சொற்கள் புதிதாகவே இருக்கும். ஆங்கிலத்தில் ஒவ்வொரு நாளும் புதுச் சொற்களைக் கற்றுக் கொள்வதற்கும், பொருள் தெரியாத போது அகரமுதலிகளைப் புரட்டுவதற்கும் பழக்கப்படுத்திக் கொள்வது போல் தமிழுக்கும் செய்வதே தீர்வு.

[Read more →]

Tags:······

மக்கா சொற்கள்

March 19th, 2008 · No Comments · தமிழ்

தமிழ் வேர் உள்ள சொற்கள் பல்வேறு விதமாக கிளைத்துப் பெரும்பயன் தரவல்லது. கடன்பெறும் சொற்கள் அப்படிப்பட்டன அல்ல. மண்ணில் போட்ட பிளாஸ்டிக் போல் துருத்திக்கொண்டு நிற்கும்.

நியூ என்பது எளிய சிறிய சொல்தானே, ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது? புது என்றால் அது மேலும் “புத்” என்று சுருக்கம் கொண்டு புத்+ஆண்டு = புத்தாண்டு, புத்துணர்வு, புத்தூக்கம், புத்திணக்கம், புத்தெழுச்சி என்று எத்தனையோ சொற்கள் ஆக்கலாம். புதிய கிளர்சியூட்டும் பொருள்கள் கிட்டும். நியூ உணர்ச்சி, நியூ ஊக்கம் , நியூ ஆண்டு என்றெல்லாம் சொல்லிப்பாருங்கள், எப்படிச் செத்துக் கிடக்கும் உணர்வுகள் என்று. மேலும் தமிழ் வேர்ச்சொற்கள் வளர்சியூட்டும் விரிவு தரும், கடன் சொற்கள் இயல்பான வளர்ச்சியை முடக்கும்

[Read more →]

Tags:··

வேர்ட்பிரெசு தமிழாக்கம் தந்த படிப்பினைகள்

March 14th, 2008 · 10 Comments · wordpress

டிசம்பர் 2007ல் வேர்ட்பிரெஸ் தமிழாக்கத்துக்கான ஒரு பெருமெடுப்பிலான அழைப்பு விடுத்த ஒரு சில நாள்களிலேயே 3000க்கும் மேற்பட்ட சரங்களைத் தமிழாக்கினோம். அதில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்கள்

[Read more →]

Tags:········

பெயர்ச்சொல் தமிழாக்கம்

March 8th, 2008 · 3 Comments · தமிழ்

நாட்டுப் பெயர்கள் தவிர, ஊர்ப்பெயர்கள், மொழிகளின் பெயர்கள் என்று பல இடுகுறிப் பெயர்களும் கூட உள்ளூர் ஒலிப்பு, பேசப்படும் மொழியின் இலக்கணம் ஆகியவற்றுக்கு ஏற்ப இசைந்தும் திரிந்தும் ஒலிப்பது இயல்பே. இதில் நகைக்கவும் கண்டிக்கவும் ஒன்றும் இல்லை. முன்னை விட உலகின் பல பகுதிகளிலும் தமிழர்கள் பரவி வாழும் இந்த வேளையில் அந்தந்த உள்ளூர் வழக்கங்களை நேரடியாகத் தமிழுக்குக் கொணர்வதே தமிழை வளப்படுத்தவும் அவ்வூர் வழக்கங்களைச் சிறப்பிக்கவும் உதவும். நேரடியாக அந்தந்த மொழியினருடன் தொடர்பு கொள்ள இயலும் போது இடையில் ஆங்கிலம் எதற்கு?

[Read more →]

Tags:·

ஏன் ஒரு ஆங்கிலச் சொல்லை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி தமிழாக்கக்கூடாது?

February 1st, 2008 · 7 Comments · தமிழ்

ஆங்கிலத்தில் இருந்து பெயர்க்கும் போது மட்டும் பல சூழல்களில் இருக்கும் ஒரு சொல்லின் மூலத்தை ஆய்ந்து பார்த்து எல்லா இடங்களிலும் ஏன் அதைப் பிடித்துத் தொங்க வேண்டும்? என்னைக் கேட்டால் இதுவும் ஒரு வகை ஆங்கில அடிமைச் சிந்தனை தான். ஆங்கிலேயன் என்ன சொல் பயன்படுத்தினான், எதற்குப் பயன்படுத்தினான் என்பதை அச்சு பிசகாமல் மதிப்பளித்துப் பின்பற்றித் தமிழாக்குவது போல் இருக்கிறது. ஏன் இந்தத் தமிழ்ச் சொல் என்று யாராவது வினவினால், குறிப்பிட்ட ஆங்கிலச்சொல்லைக் குறிப்பிட்டு விளக்காமல் நம் தமிழாக்கத்தை நியாயப்படுத்த முடியாது. இங்கு ஆளப்படும் தமிழ்ச் சொல் என்பது ஆங்கிலச் சொல்லுக்கு ஒரு மாற்று போல் இருக்கிறதே தவிர, தமிழர்களின் சுதந்திரமான சிந்தனைக்கு வித்திடுவதாகத் தெரியவில்லை.

[Read more →]

Tags:······