ரவி

தமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு

ரவி random header image

பிரெஞ்சு அசின்

February 13th, 2008 · 7 Comments · திரை

நேற்று பிரெஞ்சு திரைப்படம் அமேலி பார்த்தேன். அருமையா இருக்கு. அதில் வரும் நாயகி Audrey Tautou பார்வையற்ற ஒருவருக்கு உதவும் காட்சி கீழே:

இதே போல் கஜினி படத்தில் அசின் பார்வையற்ற ஒருவருக்கு உதவும் காட்சி.
மாற்றுத் தலைப்பு: திரைப்படம் சுடுவது எப்படி?

[Read more →]

Tags:······

கற்றது தமிழ்

November 26th, 2007 · 4 Comments · தமிழ், திரை, நாட்குறிப்பு

நான்காம் வகுப்பு படித்தபோது அப்பா சிறுவர் மலரை அறிமுகப்படுத்தித் தந்தார். அதன் பின், பாப்பா மலர், அம்புலி மாமா, தினகரன் வசந்தன், தினமணிக் கதிர், தினமணிச் சுடர், வாரமலர் என்று தொடங்கி எட்டாம் வகுப்பு படித்தபோது மு.வ.வின் 400 பக்க மண் குடிசை நாவலைப் படித்து முடித்த போது அப்பாவே ஆச்சர்யப்பட்டுப் போனார். அவ்வளவு bore அடிக்கும் நாவல் அது அது தான் நான் படித்த முதல் நாவல். அதன் பிறகு மு.வ, நா.பா, கல்கி, [...]

[Read more →]

Tags:·······

The Bourne, Riding alone for thousands of miles, Ratatouille, The Prince and Me

October 16th, 2007 · 2 Comments · திரை

The Bourne Ultimatum, The Bourne Supremacy, The Bourne Identity - Action படம்னாலே ஒன்னு Superman, Spider-man வகையறா ஜட்டிமேன் படங்கள் அல்லது James Bondன் சாகசப் படங்கள் போல தான் இது வரைக்கும் பார்த்து அலுத்துப் போய் இருந்தது. நண்பரின் மூலம் கிடைத்த திருட்டு டிவிடியைப் பார்த்து இந்தப் படத்துக்கு செம ரசிகனாகி The Bourne Supremacy, The Bourne Identityனு பாகம் 3, 2, 1னு தலைகீழா இந்த படத் [...]

[Read more →]

Tags:·····

பள்ளிக்கூடம் | பாவம் டிகாப்ரியோ

August 18th, 2007 · 23 Comments · திரை, நாட்குறிப்பு

பள்ளிக்கூடம் - முதல்ல தங்கர் பச்சான் தன் படங்களைப் பத்தி உருகி உருகி பேசுறதைத் தவிர்க்கணும். அழகியின் பாதிப்பை விட்டு இன்னும் அவர் மீளவில்லை. அழகியைத் தவிர வேற எந்தப் படமும் பாதிப்பை ஏற்படுத்துவதாயும் இல்லை.
இனிமே சினேகா பேச்சை நம்பக்கூடாது. இந்தப் படத்திலயும் புதுப்பேட்டை படத்திலயும் வாழ்நாள் கதாப்பாத்திரம் என்ற rangeல் build-up கொடுத்து இருந்தாங்க. அப்படி ஒன்னையும் காணோம் படத்தில. இன்னும் இரண்டு படம் இப்படி நடிச்சாருன்னா நரேன் பாரதிராஜாவின் மாப்பிள்ளை நாயகர் ராஜா மாதிரி [...]

[Read more →]

Tags:·······

சிக்கோ

June 28th, 2007 · 6 Comments · சமூகம், திரை

சிவாஜி படத்தின் 107வது திரை விமர்சனம் படிச்சிக்கிட்டு இருந்தீங்கன்னா அத விட்டுட்டு, முதல் வேலையா, தி பைரேட் பே போய் சிக்கோ திரைப்படத்துக்கான டொரன்ட் கோப்புகளை உங்க கணினில பதிவிறக்கிப் படத்தைப் பாருங்க. கோப்புகளைப் பதிவிறக்கும் முன்னர் பிட்டொரன்ட் நிறுவிக்கங்க.
மருத்துவ வசதி வணிக மயமாக்கப்படுவதால் சாதாரண மக்கள் எப்படி பாதிக்கப்படுறாங்கன்னு அமெரிக்காவை அடிப்படையா வைச்சு சொல்லி இருக்கிறார், இயக்குனர் மூர். இதை வெறும் ஒரு நாட்டினரின் மருத்துவ கவனிப்புப் பிரச்சினைன்னு பார்க்காம, மருத்துவம் - கல்வி போன்ற [...]

[Read more →]

Tags:······

நெதர்லாந்தில் சிவாஜி

June 16th, 2007 · 10 Comments · திரை

2005 பாதியில் ஐரோப்பா வந்தது முதல் இது வரை திரையரங்குக்குப் போய் தமிழ்ப் படம் பார்த்தது இல்லை. முன்சனை விட்டு வரும்போது தான் அங்க தமிழ்ப் படம் போடுவாங்கங்கிறது தெரியும். நெதர்லாந்தில், ரஜினி, கமல், விஜய், விக்ரம், அஜீத் போல பெரிய நடிகர்கள் படம் மட்டும் ஒரு காட்சி காட்டுவாங்கன்னு கேள்விப்பட்டு இருந்தோம். லைடன்ல இருந்து 30 நிமிட ரயில் பயண தூரத்தில் இருக்கும் பீவர்வைக்கில் சிவாஜி இன்னிக்கு ஒரு காட்சி போட்டு இருந்தாங்க. நெதர்லாந்து முழுக்க [...]

[Read more →]

Tags:········

மொழி - திரை விமர்சனம்

March 25th, 2007 · 10 Comments · திரை

மொழி - இப்படி மனச வருடுற மாதிரி இதமா ஒரு தமிழ்ப் படம் பார்த்து ரொம்ப நாளாச்சு !!!
வழக்கமா, ரொம்ப hype செய்யப்படுற படங்கள் சொதப்பலா போயிடும். இல்ல, படம் நல்லா இருந்தாலும் மிகை எதிர்ப்பார்ப்பே படத்தைப் பத்தி குறைவா எடை போட வைச்சிடும். அக்கு வேறு ஆணி வேறா மொழி படத்தோட கதை, விமர்சனங்களைப் படிச்ச பின்னாலும், படம் பார்க்கும்போது எந்த விதத்திலும் bore அடிக்கல. ஓடையில் மிதந்து போற பரிசல் மாதிரி அழகா நகருது [...]

[Read more →]

Tags:·····

திரும்பத் திரும்ப பார்க்கும் திரைப்படங்கள்

March 1st, 2007 · 2 Comments · திரை, நாட்குறிப்பு

சின்னப் வயசுல விரும்பினாலும் விரும்பாட்டியும் விதி, சம்சாரம் அது மின்சாரம் பட கதைவசன ஒலிநாடாக்கள் வீட்டிலோ பக்கத்து வீட்டிலோ ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும்..
நிறைய படங்கள் நல்லா இருந்தாலும் சில படங்கள் தான் அலுக்காம திரும்பத் திரும்ப அலுக்காம பார்க்க முடியுது.. வளந்த வயசுல ரஜினி படங்கள் அப்படி அலுக்காமல் பார்த்தது.. சன் தொலைக்காட்சி புண்ணியத்தில் பாட்ஷா படத்த நிறைய தடவை பார்த்திருக்கேன். கில்லி, பிதாமகன், காக்க காக்க இதெல்லாம் திரையரங்கிலயே மூணு முறைக்கு மேல பார்த்தது.
தமிழ்ப்படம் எல்லாம் [...]

[Read more →]

Tags:···