ஆங்கிலத்தில் இருந்து பெயர்க்கும் போது மட்டும் பல சூழல்களில் இருக்கும் ஒரு சொல்லின் மூலத்தை ஆய்ந்து பார்த்து எல்லா இடங்களிலும் ஏன் அதைப் பிடித்துத் தொங்க வேண்டும்? என்னைக் கேட்டால் இதுவும் ஒரு வகை ஆங்கில அடிமைச் சிந்தனை தான். ஆங்கிலேயன் என்ன சொல் பயன்படுத்தினான், எதற்குப் பயன்படுத்தினான் என்பதை அச்சு பிசகாமல் மதிப்பளித்துப் பின்பற்றித் தமிழாக்குவது போல் இருக்கிறது. ஏன் இந்தத் தமிழ்ச் சொல் என்று யாராவது வினவினால், குறிப்பிட்ட ஆங்கிலச்சொல்லைக் குறிப்பிட்டு விளக்காமல் நம் தமிழாக்கத்தை நியாயப்படுத்த முடியாது. இங்கு ஆளப்படும் தமிழ்ச் சொல் என்பது ஆங்கிலச் சொல்லுக்கு ஒரு மாற்று போல் இருக்கிறதே தவிர, தமிழர்களின் சுதந்திரமான சிந்தனைக்கு வித்திடுவதாகத் தெரியவில்லை.
ஏன் ஒரு ஆங்கிலச் சொல்லை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி தமிழாக்கக்கூடாது?
February 1st, 2008 · 7 Comments · தமிழ்
Tags:ஆங்கிலம்·கலைச்சொல்லாக்கம்·தமிங்கிலம்·தமிழர்·தமிழாக்கம்·தமிழ்·தமிழ்ச் சிந்தனை
ஏன் ஆங்கிலச் சொற்களைத் தமிழாக ஏற்றுக் கொள்ளக்கூடாது?
February 1st, 2008 · 10 Comments · தமிழ்
Video என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சலனப்படம், அசைபடம், நிகழ்படம், காணொளி, விழியம், ஒளியம் என்று எண்ணற்ற சொற்கள் தமிழ் இணையத்தில் புழங்கி வருகின்றன. இப்படிப் பட்ட சொற்களைப் பயன்படுத்தாது ஏன் வீடியோ என்பதையே தமிழ்ச் சொல்லாக ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று மயூரன் தமிழ் விக்சனரி குழுமத்தில் கேட்டிருந்தார். இதை video என்ற ஒரு சொல் குறித்த உரையாடலாக இல்லாமல், பொதுவாக, ஏன் மக்கள் பெரிதும் புழங்கும் ஆங்கிலச் சொற்களைத் தமிழாக ஏற்றுக் கொள்ளக்கூடாது என்ற உரையாடலைத் துவக்கி [...]
Tags:tanglish·ஆங்கிலம்·கலைச்சொல்லாக்கம்·தமிங்கிலம்·தமிழாக்கம்·தமிழ்
ஒருங்குறி X Unicode X யுனித்தமிழ்
July 7th, 2007 · 17 Comments · தமிழ்
எந்தக் குழுமத்தில் நுழைந்தாலும் அதை மேம்படுத்தலாம் என்று நோக்கில் சில குறைகளைக் குழும நிர்வாகிகளின் கவனத்துக்குக் கொண்டு வருவதுண்டு. சில மேம்படுத்தப்படும். பல சமயம், “சும்மா, குற்றம் மட்டும் கண்டுபிடிக்கிறான்” என்ற அவப்பெயர் வந்து சேரும். சில சமயம் கருத்து முரண்படும். அப்படி கருத்து முரண்பட்ட ஒரு மடல் உரையாடல் கீழே.
–
நான்: உங்கள் குழுமத்தில் யுனித்தமிழ் என்ற சொல்லைக் கையாள்கிறீர்களே? யுனித்தமிழ் என்று சொன்னால், இசைத்தமிழ், நாடகத் தமிழ் போல் அதையும் ஒரு தமிழாகக் கருதிக் குழப்பிக் [...]
Tags:ஒருங்குறி·கலைச்சொல்லாக்கம்·தமிழாக்கம்·யுனிகோடு
Puncture ஒட்டும் கடைக்குத் தமிழில் என்ன பேர்?
March 25th, 2007 · 4 Comments · தமிழ்
இது சயந்தன் எனக்கு சொன்ன கதை !
1990களில் தமிழீழத்தில் உள்ள கடைகளுக்கு எல்லாம் தமிழ்ப் பெயர் வைக்குமாறு விடுதலைப் புலிகள் வலியுறுத்திய காலமாம். bakery - வெதுப்பகம் ஆனது. bank - வைப்பகம் ஆனது. இந்த வரிசையில், tyreல் உள்ள துளை (puncture) ஒட்டும் கடைக்கு ஒருவர் தமிழ்ப் பெயர் எழுதி வைத்தாராம். அது என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? சயந்தன் அந்தப் பெயரை சொன்ன போது விழுந்து விழுந்து சிரித்தேன்
அந்தப் பேர்..
…
..
..
.
.
….
….
…
ஒட்டகம் !
ஹா..ஹா..அந்தக் [...]
Tags:கலைச்சொல்லாக்கம்·தமிழாக்கம்·தமிழ்
தமிழ்க் கலைச்சொல்லாக்கக் குழுமம்
November 7th, 2006 · 13 Comments · தமிழ்
bug, format, subtitle, screensaver, video, ring tone - இது போன்ற சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் என்ன? இவற்றை எங்கு அறிந்துகொள்வது? இல்லை, யாரைக் கேட்டால் விடை தெரியும்?
இது போன்று அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் அறிய உருவாக்க ஒரு கலைச்சொல்லாக்கக் குழுமம் உருவாக்கி இருக்கிறோம்.
குழும முகவரி: http://groups.google.com/group/tamil_wiktionary
இக்குழுமத்தின் நோக்கமாக ஏற்கனவே புழக்கத்தில் உள்ள கலைச்சொற்களை அறிவது, தேவைப்பட்டால் அவற்றை மேம்படுத்துவது, புழக்கத்தில் உள்ள பொதுச்சொற்களில் இருந்து கலைச்சொற்களை உருவாக்குவது, நுட்பப் [...]
Tags:அகரமுதலி·அகராதி·கலைச்சொல்லாக்கம்·குழுமங்கள்·தமிழாக்கம்·தமிழிணையம்·தமிழ் அகரமுதலி·தமிழ் அகராதி·தமிழ்ச் சொற்கள்
விக்சனரி (பன்மொழி - தமிழ் இணைய அகரமுதலி)
September 6th, 2006 · 16 Comments · தமிழ்
இணையத்தில் ஒரு முழுமையான ஆங்கிலம் - தமிழ் - ஆங்கிலம் அகரமுதலி இல்லாமல் இருப்பது பெரும் குறையாக இருந்து வருகிறது. ஆங்கிலம் நன்றாக அறிந்தவர்கள் Dictionary.com போன்ற தளங்களை பயன்படுத்த இயலும் என்றாலும், அவர்களுக்கும் ஓர் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்னவென்று அறிவதில் சிரமம் உள்ளது. எளிய பள்ளிப்படிப்பு படித்த தமிழ் மட்டும் நன்கு அறிந்தோரும், ஆங்கிலம் பேசா நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களும் இணையத்தை பயன்படுத்துவது அதிகரித்து வரும் வேளையில் ஆங்கிலச் [...]
Tags:அகரமுதலி·அகராதி·கலைச்சொல்லாக்கம்·தமிழாக்கம்·தமிழிணையம்·தமிழ் அகரமுதலி·தமிழ் அகராதி·தமிழ்ச் சொற்கள்