ரவி

தமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு

ரவி random header image

ஒருங்குறி X Unicode X யுனித்தமிழ்

July 7th, 2007 · 17 Comments · தமிழ்

எந்தக் குழுமத்தில் நுழைந்தாலும் அதை மேம்படுத்தலாம் என்று நோக்கில் சில குறைகளைக் குழும நிர்வாகிகளின் கவனத்துக்குக் கொண்டு வருவதுண்டு. சில மேம்படுத்தப்படும். பல சமயம், “சும்மா, குற்றம் மட்டும் கண்டுபிடிக்கிறான்” என்ற அவப்பெயர் வந்து சேரும். சில சமயம் கருத்து முரண்படும். அப்படி கருத்து முரண்பட்ட ஒரு மடல் உரையாடல் கீழே.

நான்: உங்கள் குழுமத்தில் யுனித்தமிழ் என்ற சொல்லைக் கையாள்கிறீர்களே? யுனித்தமிழ் என்று சொன்னால், இசைத்தமிழ், நாடகத் தமிழ் போல் அதையும் ஒரு தமிழாகக் கருதிக் குழப்பிக் [...]

[Read more →]

Tags:···

ஒருங்குறி குறியாக்கத்தில் தமிழில் தோன்றும் வழுக்கள்

April 16th, 2007 · 4 Comments · தமிழ், விமர்சனம்

இன்று ஒருங்குறி குறியாக்கத்தில் அமைந்த தமிழ்த் தளம் ஒன்றில் Firefox உலாவியில் உள்ள தேடல் (CTRL+F) வசதி கொண்டு தேடுகையில் பின்வரும் வழுவைக் கண்டேன்.
தேடல் வழு
உண்ட என்று தேடினால் உண்டு, உண்டான் உண்ட் என்ற எல்லா உண்+டகர வரிசைச்சொற்களையும் காட்டுகிறது. ஒருங்குறி குறியாக்கத்துக்கு  டா, டு, டி இவையெல்லாம் வேறு வேறு எழுத்துக்கள் என்று தெரியவில்லை. இது என்ன பெரிய பிழையா என்று நினைக்கலாம். ஆனால், ஆங்கிலத்தில் t,d p,b போன்ற வேறு வேறு [...]

[Read more →]

Tags:···

ஒருங்குறி, எ-கலப்பை, விசைப்பலகை - ஒரு குட்டிக் கதை

April 16th, 2007 · 2 Comments · கணினி, தமிழ்

பலரிடமும் நீங்கள் எந்த விசைப்பலகையில் கணினியில் தமிழில் எழுதுகிறீர்கள் என்று கேட்டால், “எ-கலப்பை” அல்லது “ஒருங்குறித் தமிழ்” என்று பதில் வருகிறது. குறியேற்றம் வேறு, மென்பொருள் வேறு, விசைப்பலகை வேறு என்ற புரிதல் வியக்கத்தக்க அளவில் மிகக் குறைவாகவே இருக்கிறது.
இது குறித்து தெளிவாக, விரிவாகப் புரிந்து கொள்ள மயூரனின் கட்டுரையைப் படிக்கப் பரிந்துரைக்கிறேன்.
தற்போதைக்கு, இது குறித்து எளிமையாக விளக்க ஒரு குட்டிக் கதை / உவமை இருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்துப் பார்த்தேன்
குறிப்பு ஒன்றை [...]

[Read more →]

Tags:·······