December 14, 2009
in கணினி
(10 திசம்பர் 2009 புதிய தலைமுறை இதழில் வெளிவந்த கட்டுரை. ஆசிரியர் குழுவின் சிற்சில மாற்றங்களுடன்)
உபுண்டு
- அ. ரவிசங்கர்
உங்களுக்கு மோட்டார் பைக்குகள் பிடிக்குமா? பைக்குகளை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மாட்டத் தெரியுமா? ஆனால், மோட்டார் பைக் விற்கும் நிறுவனமோ “நீங்கள் பைக்குகளைப் பிரித்துப் பார்க்கக்கூடாது. ஏதாவது பிரச்சினை என்றால் எங்களிடம் தான் வர வேண்டும். பழைய பைக்குகளைச் சீர் செய்ய மாட்டோம். திரும்பத் திரும்ப புது பைக்குகள் வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும். [...]
உபுண்டு என்பது லினக்சை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஒரு கட்டற்ற இயக்குதளம். விண்டோஸ் மென்பொருளை காசு கொடுத்தோ திருட்டுத் தனமாகவோ விரும்பியோ வேறு வழியில்லாமலோ பயன்படுத்துபவர்கள் உபுண்டுவுக்கு மாறலாம்
உபுண்டு முற்றிலும் இலவசம். இணையத்தில் பதிவிறக்கலாம். பைசா செலவின்றி நம் வீடு தேடியும் உபுண்டு இறுவட்டு வரும்.
ஆறு மாதத்துக்கு ஒரு முறை, உபுண்டு புதிய பதிப்புகளை வெளியிடுகிறது. இதனால், புதிய நுட்பங்களின் பலன்கள் நமக்கு உடனுக்குடன் கிடைக்கும்.
விண்டோசை வைத்திருப்பவர்களும் கூடுதலாக தனி வகிர்வில் உபுண்டு நிறுவிக் கொள்ளலாம். வெறும் [...]