ரவி

தமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு

ரவி random header image

நான் ஒரு விடுதலைப்புலியா?

April 8th, 2008 · 16 Comments · ஈழம்

”ஏ..நீயும் புலியா?”, “உங்கிட்ட சாக்கிரதையா இருக்கணும் டோய்”, “அடுத்து எங்க தாக்குதல்?” “பிடிச்சு உள்ள போடப் போறாங்க”

இதன் உள்ளார்ந்த பொருளும் தொனியும் புரிதலும் இது தான் -

ஈழத் தமிழர்களுடன் பழகுபவர்கள் எல்லாரும் விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறார்கள். விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள். அவர்களுடன் பழகாமல் இருப்பது நல்லது. ஈழத் தமிழர்களுடன் பழகப் போய் ஏன் வம்பு? சும்மா, வீணா சண்டை போடுகிறார்கள்.

என்னை மிகவும் கவலை கொள்ள வைப்பதுவும் எரிச்சலடைய வைப்பதும் இது போன்ற தொனிகளில் வரும் மறுமொழிகள் தான்.

[Read more →]

Tags:······

போரியற் கலைச்சொற்கள்

February 18th, 2008 · 2 Comments · ஈழம், தமிழர், தமிழ்

கடாரம் வென்றான், இமயத்தில் புலிக்கொடி நாட்டினான் என்றெல்லாம் பழம்பெருமை பேசும் தமிழ் இலக்கியங்களில் மன்னனின் பெருமையையும் வெற்றியையும் மட்டும் விவரிக்காமல் படை வீரர்கள் பார்வையில் இருந்து அவர்கள் வலியையும் வாழ்க்கையையும் பதிந்த தடங்கள் ஏதும் உளவா?

[Read more →]

Tags:·····

இலங்கைத் தமிழ் X இந்தியத் தமிழ்

October 16th, 2007 · 8 Comments · தமிழ்

ஒரு குறிப்புக்காக, இலங்கைத் தமிழ் X இந்தியத் தமிழ் வேறுபாடுகளைக் குறித்து நான் கற்றுக் கொள்பவற்றை இங்கு தொடர்ந்து பதிந்து வைக்க இருக்கிறேன். இலங்கைத் தமிழ் என்று நான் குறிப்பது பெரும்பாலும் யாழ்ப்பாணத் தமிழாக இருக்கலாம். இல்லை, வேறு ஒரு இலங்கை வட்டாரத் தமிழாகவும் இருக்கலாம்.
வீட்டில் நிண்டிட்டு போங்கோ | இருந்துட்டுப் போங்க
மழை துமிச்சுக்கொண்டு இருக்கு | தூறிக்கிட்டு இருக்கு
சத்தி வருது | வாந்தி வருது
பஞ்சியா இருக்கு | சோம்பலா இருக்கு
வடிவா இருக்கு | அழகா / [...]

[Read more →]

Tags:····

நெதர்லாந்தில் மாவீரர் நாள் கூட்டம்

December 9th, 2006 · 12 Comments · நாட்குறிப்பு, நெதர்லாந்து

நெதர்லாந்து உத்ரெட் நகர விளையாட்டு அரங்க கூடத்தில் டிசம்பர் 9, 2006 அன்று நன்பகல் 2.30 முதல் மாலை 8 மணி வரை மாவீரர் நாள் நினைவெழுச்சிக் கூட்டம் நடந்தது.
இலங்கைத் தமிழர்கள், அவர்களது செயற்பாடுகள், பண்பாடு, மாவீரர் நாள் குறித்து அறிந்து கொள்ளும் ஆவலில் இக்கூட்டத்துக்குச் சென்றேன்.
அரங்கம் முழுக்க 3 மணி அளவில் நிறைந்திருந்தது. எப்படியும் 1500 பேருக்கு குறையாமல் கூடி இருப்பார்கள். ஜெர்மனி மாவீரர் நாள் கூட்டத்தில் 10,000க்கும் மேற்பட்டோர் கூடி இருந்தார்களாம் !! ஆனால், [...]

[Read more →]

Tags:····