Tag: இரங்கல்

  • சிந்தாநதி

    வலைப்பதிவர் சிந்தாநதி காலமாகியுள்ளார். நல்ல மனிதர்களும் இறப்பார்களோ 🙁 தமிழ் வலைப்பதிவர் உதவிப் பக்கம், சென்னை தமிழ் வலைப்பதிவர் பட்டறை 2007, தமிழ் 99 விழிப்புணர்வுத் தளம், சற்றுமுன் என்று பல கூட்டு முயற்சிகளில் அவருடன் இணைந்து பங்காற்றினேன். இந்த எல்லா முயற்சிகளிலும் இவருடைய ஈடுபாடு அளப்பரிது.  தமிழ்99 தள வடிவமைப்பு, தமிழ்99 விசைப்பலகை ஒட்டி வடிவமைப்பு என்று பெரும் பங்களித்தார். தமிழ்க் கணிமை, வலைச்சரம், தமிழ்ப் புத்தகச் சந்தை, வலைமொழி என்று அவருடைய முனைப்புகள் பட்டியல் நீள்கிறது.…