ரவி

தமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு

ரவி random header image

tamil X thamil X thamiz X thamizh X tamiz X tamizh

July 23rd, 2008 · 1 Comment · இணையம்

தமிழ்123.com , தமிழ்abc.com , தமிழ்அனக்கோண்டா.me என்றெல்லாம் தளப் பெயர் வைப்பவர்கள் தமிழை thamiz, thamil, tamizh, thamizh, tamiz என்றெல்லாம் விதம் விதமாக எழுதாமல் tamil என்றே எழுதுவது நலம்.
* tamil என்று எழுதுவது சுருக்கமாக, நினைவு வைக்க இலகுவாக, குழப்பமின்றி இருக்கிறது. தளங்களுக்குப் பெயரிடுவதில் இது முக்கியம்.
* தளப் பெயரை எழுத்தில் பார்க்காதவர்கள் தன்னிச்சையாக tamil என்று தொடங்கும் முகவரிக்கே செல்வர். அத்தளம் செயல்பாட்டில் இல்லாவிட்டால் வெற்றுப் பக்கத்தைப் பார்ப்பார்கள். உங்கள் தளம் பிரபலமானால், [...]

[Read more →]

Tags:··

தமிழ் இணையத்தை அறிமுகப்படுத்துவது எப்படி?

March 7th, 2008 · 2 Comments · தமிழ்

தமிழ் இணையத்தை அறிமுகப்படுத்த தமிழ் வலைப்பதிவுகளில் இருந்தோ அவற்றைத் திரட்டிக் காட்டும் தளங்களில் இருந்தோ தான் தொடங்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லையே? உண்மையில், தமிழ் இணையத்தில் தமிழ் வலைப்பதிவுகள், அவற்றின் வாசகர்கள் ஒரு சிறு பகுதி தான். வலைப்பதிவுகளைப் பற்றி அறியாமல் இயங்குவோரும், அறிந்தும் ஒன்றாமல் இயங்குவோரும் பலர். எனவே, தமிழ் வலைப்பதிவுகளின் நிலையை எண்ணி, தமிழ் இணையம் குறித்த அறிமுகத்தைத் தள்ளிப் போட வேண்டாம்.

[Read more →]

Tags:··

வலை 2.0

April 17th, 2007 · No Comments · இணையம்

வலை 2. 0 (Web 2.0) என்பதை நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கலாம்.
வலை 2.0 என்னவென்று எளிமையாகப் புரிந்து கொள்வதற்கு வலை 1.0 என்னவென்பதை புரிந்து கொள்வது நல்லது. தினமலர் போன்ற தளங்களில் நீங்கள் பார்வையிட மட்டுமே முடியும். அத்தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை மாற்றவோ, பக்கம் காட்சிப்படுத்தப்படும் வரிசையையோ நீங்கள் மாற்ற முடியாது. இப்படி, நாம் பார்க்கும் இணையத்தளங்களின் மீது நமக்கு ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் passive readerஆக இருப்பது போன தலைமுறையான வலை 1.0 இணையத்தளங்களின் குணமாகும்.
ஆனால், [...]

[Read more →]

Tags:·

கணினிக்குப் புதியவர்களுக்கு தெரியாத தளங்கள், மென்பொருள்கள்

February 18th, 2007 · 16 Comments · இணையம், கணினி

கணினி நிறுவித்தந்த நண்பர் விட்டுச் சென்ற காலஞ்சென்ற மென்பொருள்களை மட்டுமே சிலர் பயன்படுத்திக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். ஏழெட்டு ஆண்டு கணினி பயன்படுத்திவிட்டும் கூட மிகத் தாமதமாக நல்ல மென்பொருள்களை அறிந்து நானே வருத்தப்பட்டிருக்கிறேன். அப்படி சிலருக்கு தெரியாதிருக்கக்கூடிய நல்ல மென்பொருள்களுக்கான இணைப்புகள் கீழே:
1. உலாவி - சிறந்த உலாவல் அனுபவம், பாதுகாப்பு, பயன்பாட்டு எளிமை ஆகியவற்றுக்கு Firefox உலாவி பயன்படுத்துங்கள்.
2. Office மென்பொருள் - Open Office பயன்படுத்துங்கள். இதை பயன்படுத்திப் [...]

[Read more →]

Tags:·········