இணையத்தில் எழுதும் அனைவரும் தமிழை, அதன் இலக்கணத்தை முறையாகக் கற்றுத் தேர்ந்தவர்கள் அல்லர். எனவே, கூகுள் காட்டும் முடிவுகளை வைத்து ஒரு சொல் எவ்வாறு எல்லாம் எழுதப்படுகிறது, இணையத்தில் ஒருங்குறியில் எழுதுவோரிடம் எச்சொல் அதிகம் புழங்குகிறது என்று அறியலாமே ஒழிய எது சரியான சொல் என்று முடிவு செய்ய இயலாது. பல சமயங்களில் அதிகம் புழங்கும் சொற்கள் சரியானவையாகவும் இருக்க வாய்ப்புண்டு என்றாலும் 100% இப்படிச் சொல்ல இயலாது.
கூகுளுக்குத் தமிழ் தெரியாது
April 10th, 2008 · No Comments · தமிழ், வலைப்பதிவு
Tags:இணையத் தமிழ்·ஊடகம்·கூகுள்·கூகுள் தமிழ்·தமிழ்
இணையத் தமிழ் நுட்ப ஆர்வலர்கள்
April 27th, 2007 · 6 Comments · தமிழ்
நான் அறிந்த சில இணையத் தமிழ் நுட்ப ஆர்வலர்கள் பெயரைப் பதிந்து வைக்கிறேன்.
(எந்த வரிசையிலும் இல்லை)
1. முகுந்த் - தமிழா! அமைப்பின் முனைப்பான பங்களிப்பாளர்களில் ஒருவர். இவர் உருவாக்கிய எ-கலப்பை பல தமிழர்கள் கணினியில் எளிதாகத் தமிழ் எழுத உதவுகிறது. எந்த சர்ச்சையிலும் அடிபடாத திறமூல தமிழ்ப் பதிவுகள் திரட்டியை தனி உழைப்பில் நடத்தி வருகிறார்.
2. மாஹிர் - தமிழூற்று - தமிழர்களின் அறிவுச் சுரங்கம் என்ற பெயரில் சத்தமில்லாமல் தமிழிணையம் சார்ந்து பல [...]
Tags:ஆர்வலர்கள்·இணையத் தமிழ்·தமிழிணையம்·தமிழ் இணையம்
இணையத் தமிழ் உள்ளடக்க உருவாக்கம் - தமிழ்நாடு அரசு கவனிக்குமா?
April 18th, 2007 · 3 Comments · தமிழ்
என்றாவது, தமிழ் வளர்ச்சித் துறை தொடர்புடைய தமிழக அரசு அமைச்சர் / அதிகாரி கண்ணில் படலாம் என்ற பேராசையில், தமிழக அரசுக்கு சில வேண்டுகோள்கள்.
* தமிழ்நாடு அரசு இணையத்தளத்தின் அனைத்துத் தகவல்களையும் முழுக்கத் தமிழில் தாருங்கள். TSCII வடிவில் இருந்தாலும், கூடவே ஒருங்குறித் தமிழிலும் ஒரு பதிப்பு தாருங்கள். இதன் மூலம் தமிழக அரசுத் தகவல்களை கூகுள் போன்ற தேடுபொறிகளின் மூலம் தேட இயலும்.
* தமிழ்நாடு அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி பாட நூல்கள் அனைத்தையும் ஒருங்குறி [...]
Tags:இணையத் தமிழ்·தமிழிணையம்·தமிழ் இணையம்·தமிழ்நாடு·தமிழ்நாடு அரசு
தமிழ் அகரமுதலிகள்
April 15th, 2007 · No Comments · எப்படி, தமிழ்
இணையத்தில் தமிழில் எழுதப் புகும் பலருக்கும் வரும் முதற் தடை - ஆங்கிலச் சொற்களுக்கு இணையான துல்லியமான தமிழ்ச் சொற்கள் தெரியாமை, தமிழ்ச் சொற்களின் பலுக்கல்* (Pronunciation) அறியாமை.
இதற்கான ஒரே தீர்வு - தமிழ் அகரமுதலிகளைப் பயன்படுத்துவது தான் !!
கீழ்வரும் வரிசையில் அகரமுதலிகளைப் பயன்படுத்துவது வேலையை சுளுவாக்கும்.
1. ஆங்கில வழியத்தில் படித்து தமிழில் துறை சார் சொற்கள் அறியாதோர் பயன்படுத்த வேண்டியது தமிழ் இணையப் பல்கலை அகரமுதலி நிலைகாட்டி (cursor), செருகி (plug) போன்று ஏற்கனவே உருவாக்கப்பட்டு [...]
Tags:அகரமுதலி·அகரமுதலிகள்·அகராதி·அகராதிகள்·இணையத் தமிழ்·தமிழ்·தமிழ் அகரமுதலி·தமிழ் அகராதி