Tag: அகராதி

  • விக்சனரியின் முக்கியத்துவம்

    தமிழ் விக்சனரியில் ஒரு இலட்சம் சொற்கள் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து இணையத்தில் உள்ள பிற தமிழ் அகரமுதலிகளையும் விக்சனரியில் சேர்க்கும் முயற்சியில் இருக்கிறோம். இது குறித்து உதவுமாறு உத்தமம் மடற்குழுவில் கேட்டிருந்தோம். அதை ஒட்டி நிகழ்ந்த உரையாடலில் விக்சனரியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டி வந்ததால் இங்கு ஆவணப்படுத்தி வைக்கிறேன்.

  • தமிழ் அகரமுதலிகள்

    * ஆங்கில வழியத்தில் படித்து தமிழில் துறை சார் சொற்கள் அறியாதோர் பயன்படுத்த வேண்டியது தமிழ் இணையப் பல்கலை அகரமுதலி . இதனால், சொற்களைத் திரும்ப கண்டுபிடிக்கும் அசட்டுத்தனத்தையும் பொருத்தமற்ற சொற்களை புதிதாக உருவாக்கும் பிழையையும் தவிர்க்கலாம். *  இலக்கியத்தில் உள்ள பழங்காலத் தமிழ்ச் சொற்கள், போன சில நூற்றாண்டுகளில் தமிழில் புழங்கிய பிற மொழிச் சொற்கள் குறித்து அறிய  சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி விலை மதிப்பற்ற ஒரு களஞ்சியம்.  * வலைப்பதிவு (blog), திரட்டி (aggregator) போன்ற அண்மைய கால…

  • தமிழ்க் கலைச்சொல்லாக்கக் குழுமம்

    ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்கள் அறிய, உருவாக்க ஒரு கலைச்சொல்லாக்கக் குழுமம் உருவாக்கி இருக்கிறோம். குழும முகவரி: http://groups.google.com/group/tamil_wiktionary இக்குழுமத்தின் நோக்கம்: ஏற்கனவே புழக்கத்தில் உள்ள கலைச்சொற்களை அறிவது, தேவைப்பட்டால் மேம்படுத்துவது,  புதிய கலைச்சொற்களை உருவாக்குவது.  இக்குழுமம் கட்டற்ற தமிழ் அகரமுதலியான விக்சனரிக்குத் துணையாகவும் இயங்குகிறது.  இக்குழுமத்தில் அலசி ஆராயப்பட்டு ஓரளவு கருத்தொத்ததாக வரும் சொற்கள் தமிழ் விக்சனரியில் பரிந்துரைகளாகச் சேர்க்கப்படுகின்றன. இதன் மூலம் இவை பொதுப் பயன்பாட்டு வர ஏதுவாகிறது. இந்தக் குழுமம் மூலம் சொற்களை ஆக்குபவர்கள்…

  • விக்சனரி (பன்மொழி – தமிழ் இணைய அகரமுதலி)

    கட்டற்ற பன்மொழி – தமிழ் – பன்மொழி அகரமுதலி ஒன்றை உருவாக்கும் முயற்சியாக 2004 முதல் தமிழ் விக்சனரி தளம் செயல்படுகிறது. டிசம்பர் 2008 நிலவரப்படி ஒரு இலட்சத்துக்கும் கூடுதலான சொற்களுக்கு பொருள் சேர்த்துள்ளோம். ஒரு சொல் பெயர்ச்சொல்லா வினைச்சொல்லா என்பது முதலிய குறிப்புகள், ஒரு சொல்லை எப்படி பயன்படுத்துவது என்பதற்கு எடுத்துக்காட்டுச் சொற்றொடர்கள், பலுக்கல் ஒலிக்கோப்புகள், பொருத்தமான படங்கள், அச்சொல்லுக்கான பிற மொழி விக்சனரி இணைப்புகள் ஆகியவை தரப்படுகின்றன. நீங்கள் அறிய விரும்பும் சொல்லை Googleல் இருந்தே…