கூகுள் தானியங்கித் தமிழாக்கக் கருவி

பிற மொழிகளில் இருந்து தமிழுக்கும் தமிழில் இருந்து பிற மொழிகளுக்கும் தானியக்கமாய் மொழிபெயர்க்கும் கருவி ஒன்றை கூகுள் வெளியிட்டுள்ளது. தமிழ்க் கணிமையைப் பொறுத்தவரை இது ஒரு மிகப்பெரிய சாதனை என்பதில் ஐயம் இல்லை. அதிலும் ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழிகளுக்கு மட்டுமல்லாமால் பல மொழிகளுக்கும் இடையே இரு வழியாக மொழிபெயர்க்கலாம் என்பது சிறப்பு. செருமன், நெதர்லாந்து மொழிகளைச் சோதித்துப் பார்த்தேன். கூடவே தமிழ்ச் சொற்களை உச்சரித்துக் காட்டும் கருவி, தமிழ் உரையை உரோம எழுத்துகளில் எழுதிக் காட்டும் [...]

Google Adsense

கூகுள் ஆட்சென்சு மூலம் விளம்பரங்கள் தந்ததில் இது வரை கற்றவை: * கூகுள் தமிழ் வலைப்பதிவுளுக்கு விளம்பரம் தருவதில்லை. ஒரு ஆங்கில வலைப்பதிவைக் காட்டி ஒப்புதல் வாங்கி, அதே ஆட்சென்சு நிரலைத் தமிழ் வலைப்பதிவிலும் இட்டு விளம்பரங்கள் காட்டலாம். * வலைப்பதிவு முழுக்க தமிழ்ச் சொற்களே இருந்தால் பொருத்தமான விளம்பரங்கள் வருவதில்லை. இடுகையின் பெயர், முகவரி, குறிச்சொற்கள், உள்ளடக்கத்தில் பொருத்தமான ஆங்கிலச் சொற்களைத் தந்தால் விளம்பரங்களின் தரம் கூடுகிறது. * தளப் பெயர் ரொம்ப முக்கியம். என் [...]

கூகுளுக்குத் தமிழ் தெரியாது

இணையத்தில் எழுதும் அனைவரும் தமிழை, அதன் இலக்கணத்தை முறையாகக் கற்றுத் தேர்ந்தவர்கள் அல்லர். எனவே, கூகுள் காட்டும் முடிவுகளை வைத்து ஒரு சொல் எவ்வாறு எல்லாம் எழுதப்படுகிறது, இணையத்தில் ஒருங்குறியில் எழுதுவோரிடம் எச்சொல் அதிகம் புழங்குகிறது என்று அறியலாமே ஒழிய எது சரியான சொல் என்று முடிவு செய்ய இயலாது. பல சமயங்களில் அதிகம் புழங்கும் சொற்கள் சரியானவையாகவும் இருக்க வாய்ப்புண்டு என்றாலும் 100% இப்படிச் சொல்ல இயலாது.

கூகுள் தமிழ் எழுதி பயன்படுத்தாதீர் !

தட்டச்சு என்பது ஒரு மனப்பழக்கம். இந்த கூகுள் தமிழ் எழுதியில் எழுதிப் பழகி விட்டால், பிற எழுதிகளைப் பயன்படுத்த உங்களுக்கு கை வராது. ஆர்க்குட், ப்ளாகர் தவிர்த்த பிற தளங்களில் தமிழில் எழுதுவது உங்களுக்குச் சிரமமாகும். அதன் விளைவாக, கூகுள் தமிழ் எழுதி பக்கத்தை நாடத் தொடங்குவீர்கள். நேரடியாக எல்லா தளங்களிலும் இலகுவாகத் தமிழில் எழுதுவதை விடுத்து வீணே கூகுள் தமிழில் எழுதியில் இருந்து வெட்டி ஒட்டத் தொடங்குவீர்கள். இதனால், கூடுதல் கூகுள் சார்பு நிலையை அடைவீர்கள். அல்லது, பிற தளங்களில் எழுத வேறு மென்பொருள்கள், வேறு தட்டச்சு முறைகளைப் பயில வேண்டும். இதனால் உங்கள் மூளை குழம்பும்.