November 25, 2007
in கவிதை
நீ கடல் நான் நதி
உன்னைத் தேடி நான் வருவேன்.
நீ கடல் நான் நதி
உனைக் காணும் வரைத் துடித்திருப்பேன்.
நீ கடல் நான் நதி
உனைச் சேரவே என் ஒவ்வொரு பிறப்பும்.
நீ கடல் நான் நதி
உன்னைச் சேரும் வழி நானறிவேன்.
நீ கடல் நான் நதி
என் கடமைகள் முடித்து உனைச் சேர்வேன்.
நீ கடல் நான் நதி
உனைச் சேர்ந்து புதிதாய்ப் பிறப்பேன்.
நீ கடல் நான் நதி
யாருக்கு யார் பிறந்தோம்?
நீ கடல் நான் நதி
நான் உனைச் சேர வழிவிட்டொதுங்கும் ஊரு.
நீ கடல் நான் நதி
எனை யாரும் [...]
February 23, 2007
in கவிதை
விழித்துக் கொண்டே இருக்கிறேன்,
கனவுகளில் நீ வரும்போது,
உறங்கிவிடக்கூடாது என்பதற்காக.
–
உன்னை
நல்ல குடும்பத்துப் பெண் என நினைத்திருந்தேன்.
எப்படி அனுமதிக்கின்றனர் உன் பெற்றோர்?
இப்படி இருட்டிய பின்னும்
கனவில் வர?
–
கும்மிருட்டு நிரம்ப பயம் எனக்கு.
உன் படுக்கையறை விளக்கை அணைக்காதே.
வருவதாய் இருக்கிறேன் இன்றிரவு,
உன் கனவில்.
–
உன் ஒன்றுவிட்ட சித்தப்பனுக்கெல்லாம்
பயந்து பயந்து
உன்னை சந்தித்தது போதும்.
கொஞ்சமாவது உறங்கிப் பழகு.
கனவில் வருகிறேன்.
February 22, 2007
in கவிதை
சொல்லாமல் ஊருக்குப் போன நீ
சொல்லிக் கொண்டு
செத்தாவது போயிருக்கலாம்.
–
உகாண்டாவில் வெயில் அதிகம்.
கவுண்டம்பாளையத்தில் வழிப்பறி.
மூன்றாம் உலக நாடுகளில் வறுமை.
எதன் பொருட்டு பார்க்க வந்தேன் என வினவும் உன் அம்மாவிடம்
வேறு என்ன சொல்லச் சொல்கிறாய்?
மனசு வலிக்குதுன்னா?
–
விரட்ட விரட்டத் திரும்ப வரும்
உன் நாய்க்குட்டியை விட
வெட்கங் கெட்டதாயும்
உண்மையானதாகவும்..
உன் நினைவுகள் !
–
தாமதமாய் வரும் மழைக்கும் கூட
வலிக்குமோ என பச்சை காக்கும் புல்வெளி
என் நேசம்.
–
கதீஜா சுஜாதா எல்லாம்
__தா என்றே வாசிக்கிறேன்..
என்ன நினைவு இருக்கக்கூடும் உனக்கு?
ரவிசங்கர் ஓர் இசை மேதை
என்பது தவிர.
–
காதல் தோல்வியென்றால்
தாடி வளர்ப்பதில் எல்லாம்
உடன்பாடில்லை எனக்கு.
வேண்டுமானால் வளர்க்கலாம்,
மூளையை.
–
இன்றோ [...]
February 21, 2007
in கவிதை
வண்டுகள் எல்லாம் உன்னை மொய்த்தால்
என்ன செய்யும் பூ
வாடாமல்?
–
சிகப்போ மஞ்சளோ
ஒற்றை ரோஜா வேண்டாம் சஹா!
குறைந்தது நான்கு பூக்களாவது வேண்டும் -
என்னோடு சந்தோஷப்பட!
February 21, 2007
in கவிதை
நான் உன்னை பார்க்கிறேன்.
நீ என்னை பார்க்கிறாய்.
நம்மை யாருமோ யாரையும் நாமோ
பார்த்ததாக நினைவில்லை.
சொல்லலாம் தான்..
“ஏதாச்சும் பேசே” என்று..
என்றாலும், எத்தனை முறை தான் இதையே சொல்வது?
“கோயிலுக்குப் போ” – பாட்டி;
“கடைக்குப் போ” – அம்மா;
“collegeக்குப் போ” – அப்பா;
சொல்லலாம் தான்..
என்றாலும், யாருமே சொல்லாமல்
யாருன்னை என் முன்னால் போகச் சொன்னது?
மீன் போல் துள்ளுகிறாய்.
மான் போல் ஓடுகிறாய்.
குயில் போல் கதைக்கிறாய்.
அன்னம் போல் நடக்கிறாய்.
சொல்லலாம் தான்..
நேற்றுவரை நானும்
விலங்கு தானே!
நிலா – மலர் – புறா
அழகென்று
சொல்லலாம் தான்..
அப்பொழுது தானே நன்றாக இருக்கும் -
அதைவிட அழகு நீ [...]
வெட்டிப் பேச்சு வேண்டாம்.
“என் Tiffin Boxல் தயிறும் ஊறுகாயும்;
உன்னிடம் என்ன?”
என்றதெல்லாம் போதும்!
வேண்டுமானால் கேள்.
கடைசியாக சாப்பிட்ட தேதி சொல்கிறேன்.
“உன் தங்கை அப்படியா,
என் தம்பி இப்படியதாக்கும்..”
என்றதெல்லாம் போதும்!
இப்பொழுது அவர்கள் கூட
இந்தப் பேச்சை தாண்டிவிட்டார்கள்.
“சும்மா, ஒன்னுமில்லை, ம்ஹூம்..”
என்றதெல்லாம் போதும்!
மிச்சமேதும் இல்லை என்னிடம் -
ஈரிதழால் பேச.
மேலே கொஞ்சம் கீழே கொஞ்சம்
பார்த்து மருகிப் பின் “அப்புறம்..”
என்றதெல்லாம் போதும்!
மிச்சமேதும் இல்லை உன்னிடம் -
பார்வையால் பருக.
கிளம்பிப் போய்த் திரும்ப வந்து
Hairpin இத்யாதிகள் எடுத்துக்கொண்டு
“மறந்தே போய்ட்டேண்டா”
என்றதெல்லாம் போதும்!
எத்தனை நாட்கள் சேகரிப்பது?
உன் நினைவுகளையும் வாசத்தையும் மட்டும்.
நீ எப்படி இங்கு வந்தாய்
நான் [...]
February 20, 2007
in கவிதை
உன்னை எறும்பு கடிக்கும் தருணங்களில்,
சிரித்துக் கொண்டிருக்கும் என்னைப் பார்த்து
காரணம் கேட்பாய்.
மக்குப் பெண்ணே!
உனக்கே தெரிய வேண்டாமா?
You are so sweet!
–
எடுத்துக் காண்பிக்கும்
ஒவ்வொரு புகைப்படத்திலும்
உன் தோழிகள் பெயரைச் சொல்லும்
வெட்டி வேலையை விட்டு விடு.
நேரிலோ புகைப்படத்திலோ
நான்
உன்னை மட்டுமே பார்க்கிறேன்.
–
ஒரே பிள்ளையான உன்னை
ஒழுங்காகக் கூட வளர்க்காமல்
என்ன முறித்தனர் உன் பெற்றோர்?
பெண் வளர்க்கச் சொன்னால்
தேவதையை வளர்த்திருக்கிறார்கள் !
–
“என்னை மறந்துவிடு.
இனி பேசாதே.
இது நடக்காது.
பிரிவது தான் நல்லது..”
இன்னும் ஆயிரம் பொய் கூட சொல்.
ஓர் உண்மை சொல்கிறேன்.
“காதலித்துக் கொண்டே இருப்பேன்”.
–
Excuse me
வரலாமா
போர்வைக்குள்.
–
சொல்வது கேள்.
“முத்தம்” !
–
February 19, 2007
in கவிதை
என் வீட்டிலிருந்து உன் வீட்டுக்கு
- ஓடி வந்தால் 20 நிமிடங்கள்
- Cycleஐ விரட்டினால் 8 நிமிடங்கள்
- கோபியின் Scooterல் 4 நிமிடங்கள்
இருந்தாலும்,
ரயிலோ விமானமோ விடச்சொல்லி
மனு கொடுத்ததில்
கூச்சமில்லை எனக்கு.
சிரிக்காமல் மனுவைப் பெற்றுக் கொண்ட அதிகாரியும்
ஒருவேளை காதலித்திருந்தால் தெரியும் -
வெட்கங்கெட்டு உன்னகம் பாயும்
என் மனதுக்கு மட்டும்
இன்னும் வரையறுக்கப்படவில்லை.
போவதற்கான குறைந்தபட்ச நொடிகளும்
வந்து சேர்வதற்கான அதிகபட்ச யுகங்களும்.
–
முதலில் http://ravikavithaigal.blogspot.com/2007/02/blog-post_7411.html என்ற முகவரியில் பதிப்பிக்கப்பட்டது.
February 17, 2007
in கவிதை
ஒழுங்கு மரியாதையாய்
- ஒரு முறை நான் கேட்ட -
உன் பத்தாம் வகுப்புப் புகைப்படத்தையே தந்திருக்கலாம்.
ஒரு நாளுக்கு ஒரு முறையோ பத்து முறையோ
கட்டிலுக்கு அடியில் உள்ள பெட்டியை திறந்து பார்ப்பதில்
ஒரு கஷ்டமும் இருந்திருக்காது எனக்கு.
படிய வாரிய கூந்தலுடன்
ரயிலேறும் வரை நிதானித்த அழகிய மௌனமும்
ஆரத்தழுவிய முத்தத்தில் கலைந்திருக்காது.
February 17, 2007
in கவிதை
முடிதிருத்தும் அண்ணன்
ஆச்சரியப்பட்டு இருக்க வேண்டும்.
குட்டிம்மா பதுவிசாய்ப் போவாள்.
எட்டிப் பிடித்து,
இருக்கையில் அமர்ந்து கொள்வாள்.
அவர் கேட்பார் “ஷாலினி cutting வெட்டட்டா”
இவள் சொல்வாள்:
‘ம், அப்படியே shavingம்’
முடிதிருத்தும் அண்ணன்
ஆச்சரியப்பட்டுத்தான் போவார்.
குட்டிம்மா என்றால் குறும்பு.
“அண்ணா… Monkey அண்ணா”
கூவிக்கொண்டே வருவாள்
குட்டிம்மா.
பின், என் காதுக்கு மட்டும் சொல்வாள்
“Monkey ன்னா கொரங்கு !
ஒனக்குத் தெரியாதா?”
குட்டிம்மாவை கண்டா
அடிடா ராமா பல்டி !
குட்டிம்மா முன் யாரும்
‘Biscuit’ என்று சொல்லக்கூடாது.
‘Biscuit’ என்றால் அணுக்கரு !
அணுக்கருவை இரண்டாகப் பிளப்பாள் (அதாவது, உடைப்பாள்)
இப்பொழுது “சக்தி பிறக்கிறது” என்பாள்.
நான் “எப்படி?” என்பேன்.
இப்படி:
குட்டிம்மாவின்
வாயில் கொஞ்சமும்
வயிற்றில் கொஞ்சமும்
அணுக்கரு
பிளந்து கட்டிக் கொண்டு [...]