Category: ஊடகம்

  • ஆனந்த விகடனும் தமிங்கிலமும்

    செப்டம்பர் 17, 2008 இதழில் ஆனந்த விகடன் எழுதிய சரோசா திரைப்பட விமர்சனத்தை NHM Lister கொண்டு ஆய்ந்ததில், தனித்துவமான மொத்த சொற்கள்: 346 தனித்துவமான மொத்த ஆங்கிலச் சொற்கள்: 69 ஆங்கிலக் கலப்பு விழுக்காடு: 19.94% (ஐந்தில் ஒரு சொல்!) கலந்துள்ள சொற்கள்: Underplay, out, acting, action, english, innings, editing, episode, over, factory, group, climx, commitment, colorful, comedy, comedian, good night, cool, chemical, successful, car, cinema,…

  • மக்கள் தொலைக்காட்சி

    மக்கள் தொலைக்காட்சிக்கும் பிற தமிழ் தொலைக்காட்சிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் சில மேலே உள்ள படத்தில் புலப்படுகின்றன: நிகழ்ச்சிக்கான பெயர்கள் போடும்போது 1. கிரந்த எழுத்துக்களைக் காணோம். 2. இராசா என்று இலக்கணப்படி எழுதுகிறார்கள். ராசா என்று எழுதுவதில்லை. 3. அனைவரின் பெயர்களுக்கான தலை எழுத்துக்களும் தமிழிலேயே இருக்கின்றன. கா. குமார் என்று எழுதுகிறார்கள். K. குமார், கே. குமார் என்று எழுதுவதில்லை. 4. Post production போன்ற பொறுப்புகளைக் கூட பின் தயாரிப்பு என்றே எழுதுகிறார்கள். ஆங்கிலத்தை மருந்துக்கு…

  • புத்தகம் இரவல் தருவது குற்றமா?

    புத்தகம் என்பதை எழுத்தாளன் – வணிகம் – காசு என்ற எல்லைக்குள் அடக்க இயலாது. அதை ஒரு அறிவு மூலமாகப் பார்க்க வேண்டும். காப்புரிமை என்ற பெயரில் மிகையாகப் பயமுறுத்தி பகிர்தல் என்ற மனித இயல்புக்கும் அறிவு பெறல் என்ற மனித உரிமைக்கும் எதிராகவும் குற்ற உணர்வைத் தூண்டும் வகையில் செயல்படுகிறோமா என்று சிந்தித்திப் பார்க்கலாம். நாம் படிக்கும் ஒவ்வொரு நூலையும் காசு கொடுத்து வாங்கித் தான் படிக்க வேண்டும் என்றால் அறிவுப் பரவலுக்கும் பெருந்தடையாகவும் இல்லாதவர்களின்…

  • பட்டிமன்றம் நடத்துவது எப்படி?

    பெண் பேச்சாளர்களுக்கு பட்டுப்புடவை, மினுக்கும் அணிகலன்கள் தேவை இல்லை. ஒத்திகை பார்த்த அசட்டுக் கும்மிச் சிரிப்புகள், குட்டிக் கதைகள் தேவை இல்லை. திரைப்படப் பாட்டு தேவை இல்லை. கண்ணீர் சிந்த வைக்கும் அழுகாட்சிக் கதைகள், அடித்தொண்டையில் கத்தும் பாசாங்குப் பேச்சு தேவை இல்லை. இப்படியும் அமைதியாக, ஆரவாரம் இன்றி பட்டிமன்றம் நடத்தலாம். மக்களின் வாழ்க்கையைப் பேசலாம். சமூகச் சூழல் தான் எப்படி எல்லாம் ஊடகப் போக்கை மாற்றுகிறது? பி.கு: சாலமன் பாப்பையா, திண்டுக்கல் லியோனி, விசு கவனத்துக்கு.

  • ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி?

    இன்றைய சமையல் குறிப்பில், 50 பக்க அளவில் சுவையான ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: – பளப்பளா என்று திரைப்பட நட்சத்திரங்களின் படங்கள் – எவ்வளவு வேண்டுமானாலும். இது மிகவும் முக்கியம். இது இல்லாமல் விகடன் மட்டுமல்ல இதைப் போன்ற குமுதம், குங்குமம் எதையுமே கிண்ட முடியாது என்பதைக் கருத்தில் கொள்ளவும். – சாமியார், இலக்கியவாதி என்று கைக்கு கிடைக்கும் வேறு எதுவும். பக்க எண் வாரியாகக் குறிப்புகள்: 1. முதற்பக்க…