ஈழத் துயருக்குத் தீர்வு வேண்டி தீக்குளித்த முத்துக்குமாரின் அறிக்கை:
விதியே விதியே என்செய்ய நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை..
அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே…
வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் [...]
”ஏ..நீயும் புலியா?”, “உங்கிட்ட சாக்கிரதையா இருக்கணும் டோய்”, “அடுத்து எங்க தாக்குதல்?” “பிடிச்சு உள்ள போடப் போறாங்க”
இதன் உள்ளார்ந்த பொருளும் தொனியும் புரிதலும் இது தான் -
ஈழத் தமிழர்களுடன் பழகுபவர்கள் எல்லாரும் விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறார்கள். விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள். அவர்களுடன் பழகாமல் இருப்பது நல்லது. ஈழத் தமிழர்களுடன் பழகப் போய் ஏன் வம்பு? சும்மா, வீணா சண்டை போடுகிறார்கள்.
என்னை மிகவும் கவலை கொள்ள வைப்பதுவும் எரிச்சலடைய வைப்பதும் இது போன்ற தொனிகளில் வரும் மறுமொழிகள் தான்.
கடாரம் வென்றான், இமயத்தில் புலிக்கொடி நாட்டினான் என்றெல்லாம் பழம்பெருமை பேசும் தமிழ் இலக்கியங்களில் மன்னனின் பெருமையையும் வெற்றியையும் மட்டும் விவரிக்காமல் படை வீரர்கள் பார்வையில் இருந்து அவர்கள் வலியையும் வாழ்க்கையையும் பதிந்த தடங்கள் ஏதும் உளவா?