நூல் இனி – தமிழ் மின்னூல்கள் சந்தை

ஒரு புதிய முயற்சியில் இறங்கி இருக்கிறேன்.

நூல் இனி – தமிழ் மின்னூல்கள் சந்தை.

http://noolini.com/ பாருங்கள்.

இது வரை பதிப்பாகியுள்ள இலட்சக்கணக்கான தமிழ் நூல்களும் மின்வடிவில் நிலைபெற வேண்டும். வாசகர்கள் – எழுத்தாளர்கள் ஆகிய இருவருக்கும் கட்டற்ற களத்தைத் தருவதன் மூலம் தமிழ் வழி அறிவூக்கச் செயற்பாடுகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதே இம்முயற்சிக்கான உந்துதல்.

புதிய எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துக்கான ஆதரவைச் சோதிப்பதற்கான களமாக இதனைப் பயன்படுத்தலாம். அச்சில் உள்ள நூல்கள் உலகம் முழுக்க தங்கள் சந்தையை விரிவாக்கலாம். பதிப்பு நின்று போன நூல்கள் மின்பிறவி எடுக்கலாம். நேரடி நூல் விற்பனை மூலமாக அன்றி அதனை முன்வைத்த மற்ற அறிவுச் செயற்பாடுகள் மூலம் பணம் ஈட்டலை நோக்கியே உலக பதிப்புலகப் போக்கு செல்கிறது.

உங்கள் ஆதரவைத் தேடி 🙂