முதல் 10 உலக மொழிகள்

உலகின் முதல் 10 மொழிகளைப் பத்தின விரிவான ஆய்வுக்கட்டுரைய இங்க பார்க்கலாம். மொழியியல் ஆர்வம் உள்ளவங்க கண்டிப்பா படிக்க வேண்டிய ஆய்வு. பேசும் மக்கள் எண்ணிக்கைய அடிப்படையா வைச்சா சீனம் தான் முதல் இடத்துல இருக்கணும் (சீனம்கிறது ஒரு மொழி இல்லீங்க. எழுத்து மட்டும் தான் ஒன்னு. ஆனா, நிறைய வெவ்வேறு பொருள், உச்சரிப்பு உள்ள சீனப் பகுதியில் உள்ள மொழிகள் எல்லாத்தையும் மொத்தமா சீனம்னு சொல்லிடுறாங்க.இந்த மொழிகளை வட்டார வழக்குன்னு கூட சொல்ல முடியாது. அதுக்கும் மேல வேறுபட்டவை). ஆனா, உலக அளவில் வணிகம், அறிவியல், அரசியல் என்று பல துறைகள்ல செல்வாக்கு செலுத்துற மொழிகள் அடிப்படையில் இந்தப் பட்டியலைத் தந்திருக்காங்க.

1. ஆங்கிலம்
2. பிரெஞ்சு
3. எஸ்பான்யோல் (spanish)
4. உருசிய மொழி
5. அரபு
6. சீனம்
7. டாயிட்ச் (german)
8. ஜப்பானிய மொழி
9. போர்த்துகீசிய மொழி
10. உருது / இந்தி.

பேசும் மக்கள் எண்ணிக்கைல மட்டும் தமிழ் 18ஆவது இடத்தில் இருக்கு. தமிழ் உலக மொழியாகுறதுக்கான வாய்ப்பு அடுத்த பல நூற்றாண்டுகளுக்குத் துளியும் இல்லை ! எனவே இந்தப் பட்டியல்ல தமிழுக்கு என்ன இடம்னு கவலைப்பட வேண்டாம். தகுதிச் சுற்றுக்கே நமக்கு இடம் இல்லை. உலக அளவில தமிழ் எந்த ஒரு துறைக்கான மொழியாகவும் இல்லை. ஒரு இனம் பேசும் மொழியா மட்டும் தான் இருக்கு. அந்த இனத்திலயும் திரைப்படம், இலக்கியம், ஆன்மிகம், சமையல், சோதிடம் அப்படின்னு ஒரு மிகச்சிறிய வட்டத்துக்குள்ள தான் தமிழ் இருக்கு. தமிழ்நாட்டில் தமிழ் முதல் மொழிங்கிற நிலை வந்தாலே பெரிய விசயம்.

மத்தபடி, இந்த உலக மொழிகள் குறித்த தமிழ் விக்கிபீடியா கட்டுரை இங்கு.


Comments

12 responses to “முதல் 10 உலக மொழிகள்”

  1. Esperanto செயற்கையாக இருவாக்கப்பட்ட மொழியல்லவா? அது ஸ்பானிஷ் அல்ல..

  2. தவறை சுட்டிக் காட்டியதற்கு நனறி, சுதர்சன். இப்ப திருத்திட்டேன்

  3. ஜெ.மயூரேசன் Avatar
    ஜெ.மயூரேசன்

    நல்ல தகவல்..!!
    ஹிந்திக்கு உலக அந்தஸ்து.. அத்தோடு ஒட்டிக்கொண்டு உருதுவும்!!! தமிழ் பாவம் 🙁

  4. மயூ, இது அரசியல், வணிக முக்கியத்துவ அடிப்படையில் உருவான செல்வாக்குப் பட்டியல். தமிழ் இருக்கும் என்று எதிர்ப்பார்க்க முடியாது தான் 🙁

  5. kashwini Avatar
    kashwini

    nalla karutu nam molzhi thai molzhi

  6. Mrinalini Avatar
    Mrinalini

    As Tamilian’s what can we do to bring this up?

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      மிருணாளினி, நீங்கள் அறிந்தவற்றைப் பற்றி நல்ல தமிழில் எழுதுங்கள். தமிழை அறிவு பெறும் மொழியாகவும் பொருளீட்டு மொழியாகவும் மாற்றுவதன் மூலமே அதனை வளர்க்க முடியும்.

  7. Mrinalini Avatar
    Mrinalini

    I cannot find Tamil on G – Translate…your view(s)?

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      இந்திய மொழிகளில் இந்திக்கு மட்டுமே இத்தகைய வசதி உள்ளது. தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளுக்கு தானியக்க மொழிமாற்றிகளைக் கொண்டு வர கூகுள், மைக்ரோசாப்டு உள்ள பல நிறுவனங்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளன. இது போன்ற மொழிமாற்றிகளை உருவாக்க, தமிழ் – ஆங்கிலம் (அல்லது குறிப்பிட்ட மொழி) ஆகிய மொழிகளில் ஈடாக மொழிபெயர்க்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஆவணங்கள் தேவை. இந்த ஆவணங்களை ஆய்வதன் மூலம் என்ன சொல்லுக்கு என்ன பொருள் என்று மொழிமாற்றிகள் கற்றுக் கொள்ள இயலும். தமிழுக்கு அது போன்ற ஆவணங்கள் கிடைக்கும் நிலை இல்லாததால் தமிழுக்கான மொழிமாற்றி உருவாவதில் தாமதம் நிலவுகிறது. சில நிறுவனங்கள் தாமே இது போன்ற ஆவணங்களை உருவாக்கவும் முயன்று வருகின்றன.

  8. wow nalla irukku

  9. Raja raja rajan Avatar
    Raja raja rajan

    “…திரைப்படம், இலக்கியம், ஆன்மிகம், சமையல், சோதிடம் அப்படின்னு ஒரு மிகச்சிறிய வட்டத்துக்குள்ள தான் தமிழ் இருக்கு…”

    எவ்வளவு தவறான புரிதல். தமிழில் இல்லாத அறிவியல், வானியல், புவியியல், வேதியல், வாழ்வியல், மருத்துவ , சித்தாந்த, சமூக குறிப்புகள்… வேறு எந்த மொழியிலும் இல்லை என்பது உங்களுக்கு தெரியாதா?

    மற்ற நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்த வாய்ப்புகள் இல்லாது போனதால் தமிழ் உலக மொழியாக பரவ இயலவில்லை. அதனால், தமிழுக்கு தகுதி இல்லை என்று கூறுவது எத்தனை பேதமை?

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      தமிழ் இலக்கியத்தில் பல்வேறு துறை சார் செய்திகள் உள்ளன. ஆனால், இன்றைய வெகு மக்கள் காட்சி, அச்சு ஊடகங்களில் எந்த அளவு அறிவுத் துறைகள் முன்னிறுத்தப்படுகின்றன? இதைத் தான் குறிப்பிட்டிருந்தேன். தமிழர்கள் மற்ற நாடுகள் மீது அரசியல் / பொருளாதார வல்லாண்மை செய்ய வாய்ப்பு இல்லாததால் உலக மொழியாக நியாயமான வழி இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், தமிழ்நாட்டிலேயே தமிழைக் கொண்டு அனைத்து விசயங்களையும் செய்ய முடியாதிருப்பது ஏற்புடையதா?