தமிழ் இன்று

இற்றை:

முதலில் விலையில்லாமல் வெளியிடப்பட்ட தமிழ் இன்று மின்னூல் 1000 தரவிறக்கங்கள் கண்டதை அடுத்து, இன்னும் 15 கட்டுரைகளைச் சேர்த்து புதிய மேம்படுத்திய மின்னூல் ஒன்றை விற்பனைக்கு விட்டுள்ளேன். தமிழ் நூல்களை மின்வடிவாக்கும் முயற்சியின் முதற்படி இந்நூல் வெளியீடு. உங்கள் ஆதரவைத் தேடுகிறேன். நன்றி.

பார்க்க: noolini.com

***

இந்த வலைப்பதிவில் உள்ள சில கட்டுரைகளைத் தொகுத்து தமிழ் இன்று என்ற பெயரில் என் முதல் மின்னூலை வெளியிட்டுள்ளேன்.

பொன்னியின் செல்வனையே கைப்பேசியில் படித்து முடித்தவர்களைத் தெரியும். அப்படிப்பட்டவர்களுக்குச் சம கால தமிழ் மின்னூல்கள் வாசிக்கக் கிடைப்பதில்லை. இந்தப் பின்னணியில், கையடக்கக் கருவிகளில் தமிழ் நூல் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் கட்டற்ற நூல்களை உருவாக்க வேண்டும் என்ற நண்பர் சீனிவாசனின் Free Tamil Ebooks திட்டம் மிகவும் பிடித்திருந்தது. எனது வலைப்பதிவு இடுகைகளை கட்டற்ற உரிமத்தில் தர வேண்டும் என்று வெகுநாட்களாக நினைத்திருந்தாலும், இத்திட்டமே அதற்கான தூண்டுகோல். எனது கட்டுரைகளை மின்னூல் வடிவில் இட்டுப் பார்த்த போது பெற்ற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இதே போல் இன்னும் பலரும் தங்கள் நூல்களை கட்டற்ற உரிமத்திலும் மின்னூல் வடிவத்திலும் தர முன்வருவது பெரும் புரட்சியாக இருக்ககும்.

நூலைப் பதிவிறக்க இங்கு செல்லுங்கள். பதிவிறக்கும் முன் நோட்டமிட, இங்கு செல்லுங்கள்.

பார்க்க: தமிழ் மின்னூல்களைப் படிப்பதற்கான வழிகாட்டி

நன்றி

* மின்னூல் உருவாக்கத்துக்கு Pressbooks.com உதவும் என்ற குறிப்பினைத் தந்துதவிய நண்பர் K. S. Nagarajanக்கு நன்றி.

* Free Tamil Ebooks என்ற திட்டத்தை முன்னெடுக்கும் சீனிவாசனுக்கு நன்றி. மின்னூல் உருவாக்கம் தொடர்பான பல்வேறு தொழில்நுட்ப ஐயங்களைத் தீர்த்து வைத்ததுடன், குறிப்பிட்ட தளத்தையும் நூலையும் சோதித்துப் பார்த்து வெளியிடுவதற்கும் முழு உதவி நல்கினார்.


Comments

3 responses to “தமிழ் இன்று”

  1. அன்பு இரவி, மின்புத்தகத்தைப் பதிவிறக்கி சில கட்டுரைகளை வாசித்தும் பார்த்தேன். ஒரு புத்தகத்திற்கான தகுதிகள் அனைத்தும் இருக்கின்றன.

    நூலாசிரியருக்கு வாழ்த்துகள்.

  2. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    நன்றி, சாய் ராம். அப்ப இரண்டாம் பாகத்தை வெளியிடலாம்கிறீங்க 🙂

    சோதனை முயற்சி என்பதாலும் மின்னூல் என்பதாலும் பெரும்பாலும் சிறிய கட்டுரைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து வெளியிட்டிருந்தேன்.

  3. அருமையான முயற்சி ரவி. இது போன்ற தங்களின் மற்ற மின்னூல் கட்டுரைகளின் வெளியீடு பரவலாக பல வாசகர்களை சென்றடைய வாழ்த்துக்கள்.