தமிழர்கள் Form, Friend, Fan, Firefox, Frame, Fried rice, Figure, Photo, Phenol போன்ற எண்ணற்ற ஆங்கிலச் சொற்களை அன்றாட வாழ்வில் புழங்குகிறோம். ஆனால், மற்ற இந்திய, இலத்தீன-கிரேக்க-ஐரோப்பிய மொழிகளைப் போல் F ஒலியைத் தமிழில் எழுதிக் காட்ட இயலாதது பெரும் குறை.
தொல்காப்பியம், நன்னூல் எழுதியோர் வெளிநாடு சென்ற கடவுச்சீட்டு ஆதாரங்கள் கிடைக்கவில்லை. எனவே, அக்காலத்தில் F அறிமுகம் ஆகாமல் இருந்திருக்கலாம். எனினும், காலம் காலமாக அடுப்பு, சுருட்டு பற்ற வைத்து நெருப்பை அணைக்கும் போது, [...]
Entries from August 2008
F
August 26th, 2008 · 47 Comments · தமிழ்
Tags:கிரந்த எழுத்து·கிரந்த எழுத்துகள்·கிரந்தம்·நையாண்டி
தொடுப்புகள் - August 24, 2008
August 24th, 2008 · 9 Comments · தொடுப்புகள்
1. தமிழில் கூகுள் செய்திகள் - தினத்தந்தி, மாலைமலர் போன்ற ஒருங்குறியில் இல்லாத தமிழ்த் தளங்களில் இருந்தும் செய்திகளைத் திரட்டித் தானியக்கமாகத் தொகுத்துத் தருகிறது. சில புதிய தமிழ்ச் செய்தித் தளங்களும் தென்படுகின்றன.
2. RSS Meme - வலையில் யார் எதை விரும்பிப் படித்துப் பகிர்கிறார்கள் என்று அறியலாம். இத்தளத்தின் This Week பகுதியில் உண்மையிலேயே நல்ல தொடுப்புகளைக் கண்டு கொள்ளலாம்.
3. Down For Everyone or Just me - ஏதாவது தளம் படுத்துவிட்டால் உங்களுக்கு [...]
Tags:தொடுப்புகள்
பிற மொழியாளர் கண்டுபிடிப்புகளுக்குத் தமிழ்ப் பெயர் தரலாமா?
August 16th, 2008 · 20 Comments · தமிழ்
“பிற மொழியாளர் கண்டுபிடிப்புகளுக்கு அவர்கள் இட்ட பெயரே தர வேண்டும். அதுவே அவர்களுக்குத் தரும் மதிப்பு. தமிழில் பெயர் தருவது அவர்கள் அறிவைத் திருடுவது போல. கண்டுபிடிக்க வக்கில்லாத நாம் ஏன் பெயரை மட்டும் தமிழில் வைக்க வேண்டும்” என்பது போன்ற சிந்தனைகளைச் சில இடங்களில் கண்டேன்.
இச்சிந்தனை தவறு.
* கண்டுபிடிப்பின் பெயரில் கண்டுபிடித்தவர் பெயர், வணிக உரிமை பெற்ற பெயர் இருந்தால் மட்டுமே தமிழாக்கக்கூடாது. எடுத்துக்காட்டுக்கு, Diesel எல்லா மொழிகளிலும் Diesel தான். ஏனெனில், Diesel என்பது [...]
Tags:தமிழாக்கம்
ஆன்
August 1st, 2008 · 17 Comments · தமிழ்
counter, filter, reader போன்று -er இல் முடியும் ஆங்கிலச் சொற்களையும் இன்ன பல சொற்களையும் எண்ணுவான், வடிகட்டுவான், படிப்பான் என்று -ஆன் விகுதி போட்டு தமிழாக்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது. இதைத் தவிர்க்கலாம்.
இத்தகையை சொற்களுக்கு -இ விகுதி உதவலாம். சுருக்கமாகவும் மேற்கண்ட குறைகள் இல்லாமலும் இருக்கும். எ.கா: Counter - எண்ணி, Washer - துவைப்பி, கழுவி.
Tags:தமிழாக்கம்·தமிழ்