பேச்சு ஆங்கிலத்தை ( Spoken English ) வளர்த்துக் கொள்வதற்கான எளிய குறிப்புகள்: 
* 30 நாட்களில் பேச்சு ஆங்கிலம், Repidex, விவேகானந்தா கல்வி நிலையம் போன்றவற்றை நாடாதீர்கள். முறைப்படி இலக்கண விதிகளை நினைவு வைத்துப் பேச வேண்டி இருப்பது, உங்களை மனம் தளரச் செய்யலாம். நீங்கள் பேசிப் பழகப் பழக நாளடைவில் இலக்கணம் தானாக வரும்.
* பேச முற்படும் முன் நிறைய ஆங்கிலப் பேச்சுகளைக் கேட்டுக் கொண்டே இருங்கள். எடுத்துக்காட்டுக்கு, கிரிக்கெட் வர்ணனை, தொலைக்காட்சிச் செய்திகள். பொருள் புரியாவிட்டாலும் ஓசைகள், சொற்களுக்குப் பழக்கப்பட உதவும்.
* உங்களுக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாவிட்டால், விளம்பர வாசகங்கள், கடைகளின் தட்டிகள், படம் போட்ட சிறுவர் கதை நூல்கள் போன்றவற்றை வாசிக்கத் தொடங்கலாம். HINDU போன்ற உயர் தர ஆங்கில இதழ்கள், அகரமுதலிகளை எடுத்த எடுப்பிலேயே புரட்டுவது மட்டும் ஆங்கிலம் பேச உதவாது.
* தமிழ் தெரியாத பிற மொழி நண்பர்களிடம் பேச்சு கொடுத்துப் பழகுங்கள். இந்தச் சூழ்நிலைகளில் உங்கள் பேச்சுப் பிழைகளைப் பொருட்படுத்த மாட்டார்கள். நீங்கள் பேசுவது அவருக்குப் புரிந்தாலே வெற்றி தான்.
* சரியோ தவறோ பேசத் தொடங்குங்கள். பேசவே தொடங்காமல் ஆங்கிலம் தெரியவில்லையே என்று வருந்துவதில் பயனில்லை. நீங்கள் எவ்வளவு கூடுதலாகவும் அடிக்கடியும் வெவ்வேறு விசயங்களைப் பேசிப் பழகுகிறீர்களோ அவ்வளவு விரைவில் பேச்சு ஆங்கிலம் கைக்கூடும்.
* நன்கு தெரிந்தவர்களிடம் குறை ஆங்கிலத்தில் பேசக் கூச்சமாக இருந்தால், முன் பின் தெரியாத இடங்களில் ஆங்கிலத்தில் பேசுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டுக்கு, ஒரு வாடிக்கையாளர் சேவையைத் தொலைபேசியில் அழைக்கும் போது ஆங்கிலத்தில் பேச வாய்ப்பு இருந்தால் பேசிப் பாருங்கள்.
ஆங்கிலம் மட்டுமல்ல எந்த ஒரு மொழிக்கும் இந்தக் குறிப்புகள் பொருந்தும். உங்களுக்கு வேறு ஏதும் குறிப்புகள் தெரிந்தால் சொல்லுங்கள்.
{ 2 trackbacks }
{ 52 comments… read them below or add one }
ஆங்கில நாடொன்றின் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வேலைக்கு சேருங்கள்..
(Ielts அது இதுன்னும் ஆங்கில நாட்டில் படிக்க சென்ற பிறகும் வாயில் இயல்பாய் நுழையாமல் இருந்த ஆங்கிலம்.. அப்படியான ஒரு பெற்றோல் ஸ்டேசனில்தான்.. எனக்குள் நுழைந்து இயல்பாக பேச வைத்தது. கூச்சத்தை போக்கியது.
சயந்தன் – நல்ல யோசனை.
//நன்கு தெரிந்தவர்களிடம் குறை ஆங்கிலத்தில் பேசக் கூச்சமாக இருந்தால், முன் பின் தெரியாத இடங்களில் ஆங்கிலத்தில் பேசுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.//
என்று இதைத் தான் கூறினேன். சிங்கப்பூர் போன்ற ஆங்கிலம் பேசும் நாடுகளுக்குப் போகும் கல்வியறிவற்றவர்கள் கூட வேறு வழியின்றி தட்டுத் தடுமாறி பேசக் கற்று விடுவார்கள். உள்நாட்டில் இருப்பவர்கள் தான் தயங்கித் தயங்கி இத்தகைய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.
நல்ல ஆலோசனைகள் ரவி.
நீங்க சொன்னபடி, நான் அதிகமாக ஆங்கிலம் பேசக் கற்றுக்கொண்டது சிங்கள நண்பர்களுடன் ஆங்கிலம் பேசத் தொடங்கியதும்தான். நாங்கள் பேச ஊடகமாக ஆங்கிலத்தையே நாட வேண்டியிருந்தது.
இதைவிட ஹரி போட்டர் போண்ற புத்தகங்களை வாசிப்பதும் ஆங்கிலம் அறிய உதவும்
ஆங்கில வழி கற்றாலும் தமிழில தான் பள்ளியில் உரையாடுவோம். வீட்டில கேட்கவே வேண்டாம் அப்பா டி.ஆர் ஸ்டைல பேசுவார். நான் எஸ்கேப். நல்ல பயிற்சியுடன் சூழல் அமையும் போது தானா நல்ல ஆங்கிலம் பேசலாம். ரவி – சுவிஸ் மொழியில எதாவது பேசி காட்டுங்க
//ஆங்கில வழி கற்றாலும் தமிழில தான் பள்ளியில் உரையாடுவோம்//
தமிழ்நாட்டில் 95% ஆங்கிலப் பள்ளிகள் இப்படித்தான்னு நினைக்கிறேன். எங்க உயிரியில் ஆசிரியர் சொல்லுவாங்க, “என்ன தான் ஆங்கில வழியம்னாலும் தமிழ்ல விளக்காட்டி பசங்களுக்கு முழுசா மனசில பதியாது”ன்னு.
swiss மொழியா? அப்படி ஒன்னும் இல்லியே? நான் இருக்கிறது நெதர்லாந்துல. நெதர்லாந்து மொழியும் உருப்படியா தெரியாது
hi how are you . i read your messages.iallso this propllam .
தினமும் ஒரு மணி நேரமாவது BBC Radio/TV நிகழ்ச்சிகளைக் கேட்டால் போதும், ஆங்கிலத்தில் சிறிது நாளில் சக்கைப் போடு போடலாம்
hai friends i am lakshmi sundar, i have completed b.com with computer application but i am not speak in english fluency. plz help i speak english fluency
நல்ல பதிவு..
எனது தந்தையின் நண்பர்.. ஒரு ஆங்கில முனைவர் கூட இவ்வகை உத்திகளையே கூறினார்.
எந்த மொழியை நாம் கற்க விரும்புகிறோமோ அந்த மொழியை நாம் கேட்பதில்.. பார்ப்பதில்.. படிப்பதில் என எல்லா இடங்களிலும் புழங்கச் செய்ய வேண்டும்.
உதாரணமாக.. தொலைக்காட்சியில் பிபிசி, டிஸ்கவரி அல்லது அனிமல் ப்ளேனட் பார்ப்பது, பேசுவதிலும் கூட நமது மொழி தெரியாத ஒருவரை நண்பராக்கிக் கொண்டு வேறு வழியே இன்றி ஆங்கிலத்தில் பேசியாக வேண்டிய கட்டாயத்தை உருவாக்கிக் கொள்வது..
சின்ன சின்ன படம் போட்ட காமிக்ஸ் புத்தகங்களை வாசிக்கப் பழகுவது.. இப்படி எல்லா இடத்திலும் நீக்கமற அந்த மொழி நிறைந்திருந்தால் நிச்சயம் நன்றாகவே அம்மொழியை விரைவில் கற்க முடியும் என்று நான் அனுபவத்தில் உணர்ந்த ஒன்று..
நீங்களும் முயற்சித்துத் தான் பாருங்களேன்..!
பாராட்டுகள் அன்பரே..!
shankar ganesh, நிறைய பேர் bbc radio / tv பற்றி சொல்லுறாங்க. முன்பு அப்பப்ப பார்ப்பேன். இனி நானும் அடிக்கடி பார்க்க / கேட்க முயல்வேன். நன்றி.
பூமகள் – உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.
i try this
sir
சொல்லுங்க பெருமாள்…
u r looking smart.. i like u
good frendship we can achive enithing to knowlean this site thanks
this arcles is increase my confident about speeking english. i can speeking in english at nearast.
please say any one spoke method (practical)
hai rose . i am anand like ur friend . i give some advice to u . first u must speak english in false way , then u listern correct way to speak. so first speak ur,s kknowladge words . and learn others .
anandbluestar87@gmail.com
i will try this method
hi, iam revathi from bangalore i go to veta class for 15 days . but i don’t speak to english. so please help me sir….
hai revathi how r u ? iam from salem. your must have learn four things to speak in english 1. writing skill 2.spoken skill 3. listening skill
if you need talk an english as fluency means you should open your mouth n talk to your friends or yourself standing infron mirror than only you can talk . I think of waste of english class . Everythin in your hand .. so try in when you are free…
YOUR ADVICE IS USEFUL SO THANKS FOR YOU
DEAR SIR
YOUR ADVICE IS VERY USEFUL FOR ME. SO THANKS FOR YOU
my name is marudaiyan.i go to veeta class.but i cannot speak english
இது வரை இந்தப்பகுதிக்கு வந்ததே இல்லை. அருமையான யோசனைகள். நானும் பின்பற்றி பார்க்கிறேன்
இது வரை இந்தப்பகுதிக்கு வந்ததே இல்லை. அருமையான யோசனைகள். நானும் பின்பற்றி பார்க்கிறேன்
we need
dear sir,
i am working in tirupur.i want to speak in english.but i can’t speak it .pls help me sir.
ippdiye pesi practice pannungka.eng vanthidum.ok.
i’l try this method.
hai friends, i would like to more learn english subject….
Hi friends
i like very much for this discussion , i am Engineering completed student but basically i am tamil medium , so my english very low level ,this discussion very usefull for me , Mr. Ravi your work is very good
Keep develop
வாழ்க வளமுடன்
தொடர்ந்து முயலுங்கள் ஆங்கிலம் பேசுவது இலகு தான், நண்பரே ( tamil astrology தளத்தில் இருந்து வரும் மறுமொழிகள் பெயரின்றி seo காரணங்களுக்காக வருவது போல் தோன்றுகிறது. இவற்றை வெளியிட யோசிக்க வேண்டி உள்ளது. தயவு செய்து உங்கள் பெயரில் மறுமொழிகள் இட வேண்டுகிறேன். நன்றி )
I am kapilan. i studyied english so i dont come to speke
i want lean english more. i am tamil teacher but interst to learn in english
this is good idea ,i will try this
this is good
i am selvi written from rajasthan already i trying to speaking english but now i get some ideas from your side thank all of you! bye……….
hai , i am sathya. i will try your tips
hai! iam meena. yours tips very good. i am can spoke
i want speek engilsh pls
yes ur correct. i have a experience like this. before i dont know to speak english. but now i manage. because now i am working in kuwait. here most of the people speak english, arabic like this . i dont know the arabic so i try to speak to english now i speak litlle bit.
I am sambasivam, I study in law college i bangalore, I want in english speak so please help me sir
இது என்னுடைய சிறிய முயற்சி . ஆங்கிலம் கற்க விரும்புபவர்கள் தயவு செய்து பார்க்கவும்
http://educations-educations.blogspot.com/
i want simple english sentence
I am Anbu, I Working Mahundra Logestic pvt ltd, I want in english speak so please help me sir
if anybody speak with you in english first of all you can understand the meaning. so plz read the new paper daily 15 to 20 min. keep a dictionary in your hand it helps know the new words.
good i have proudly for tamilans . valka tamil
Those who are interested to speak,read and write good English can contact me.
You have done an excellent job
.please keep it up.
When I learn how to type in Tamil in computer I will write to you in Tamil too.
have a nice day every day.
God bless you and your friends and your contacts
my email is gnr1932@gmail.com
i want speak in english
tks for ur idia yes ican do something in english and what about the we will learn other books