கிரந்தம் தவிர்த்துத் தமிழில் எழுதுவது தற்போதும் பெரு ஊடகங்களிலும் வழக்கில் உள்ளதே. சில சொற்களைக் கிரந்தம் தவிர்த்தும் சிலவற்றில் கிரந்தம் தவிர்க்காமலும் எழுதுவதற்கு போதிய தமிழாக்க முயற்சிகளும் பழக்கமும் இல்லாததே காரணம். எனவே, கிரந்தம் தவிர்த்து எழுதுவதை ஏதோ புதிய நடைமுறையாகக் கருதத் தேவை இல்லை.
Entries from May 2008
கிரந்த எழுத்துகளைத் தவிர்த்து எழுவது எப்படி?
May 22nd, 2008 · 7 Comments · தமிழ்
Tags:grantha·grantha script·grantham·கிரந்த எழுத்து·கிரந்தம்·தனித்தமிழ்
தன்னார்வத் தமிழ் இணையத் திட்டங்களுக்கு பங்களிப்பு குறைவாக இருப்பது ஏன்?
May 21st, 2008 · 14 Comments · இணையம்
எட்டு கோடித் தமிழர் இருக்கிற போது ஏன் இந்த ஒற்றைப் படை நிலை?
முதலில் ஒன்றை அறிவோம். இந்தக் குறைவான எண்ணிக்கை தமிழ் இணையத் திட்டங்களுக்கு மட்டும் உள்ள நிலை இல்லை. மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டால், சமூகத்தில் நிகழ்வாழ்க்கையில் மேற்கொள்ளப்படும் பல கூட்டு முயற்சி, தன்னார்வல, இலாபநோக்கற்ற திட்டங்களுக்கும் கூடப் பங்களிப்பு குறைவே. ஆக, நிகழ் உலகத்தில் பங்களிப்புக் குறைவுக்கு காரணமாக இருக்கும் பணமின்மை, நேரமின்மை, மனமின்மை, திறனின்மை போன்ற அத்தனைக் காரணங்களும் இணையத்துக்கும் பொருந்தும்.
Tags:tamil internet·இணையத் திட்டங்கள்·கூட்டு முயற்சித் திட்டங்கள்·தமிழிணையக் கூட்டு முயற்சித் திட்டங்கள்·தமிழிணையத் திட்டங்கள்·தமிழிணையம்·தமிழ் இணையம்
தனித்தமிழ் விசைப்பலகைகள்
May 19th, 2008 · 12 Comments · தமிழ்
ஒருங்குறியில் அமைந்த பாமினி, அஞ்சல், தமிழ்99 விசைப்பலகைகளுக்கு NHM Writer ல் பயன்படுத்தக்கூடிய தனித்தமிழ் xml கோப்புகள் செய்து பார்த்தேன்.
Tags:keyboard·nhm writer·tamil keyboard·tamil typing·xml·கிரந்தம்·தட்டச்சு·தனித்தமிழ்·தனித்தமிழ் விசைப்பலகைகள்·தமிழ்·தமிழ் விசைப்பலகைகள்·மென்பொருள்·விசைப்பலகை·விசைப்பலகைகள்
இந்தி மொழிக் கல்வி
May 6th, 2008 · 17 Comments · தமிழ்
இந்தி ஒரு தேசிய மொழி இல்லை. இந்தியாவுக்குத் தேசிய மொழி என்று ஏதும் இல்லை. ஒருவர் இந்தி கற்று தான் இந்தியன் என்று நிரூபிக்க வேண்டுமா? ஒழுங்காக வரிகள் கட்டி, சட்டத்தை மதித்து நடந்தால் போதாதா? தமிழ்நாட்டில் இருந்து இந்தி தெரியாத இளைஞர்கள் இந்தியப் படைகளில் சேர்ந்து நாட்டுக்குப் பங்களிப்பதில்லையா?
Tags:hindi·hindi education·hindi in tamilnadu·இந்தி·இந்தி மொழிக் கல்வி·இந்திக் கல்வி·தமிழ்நாட்டில் இந்தி·ஹிந்தி
குருவி - திரை விமர்சனம்
May 1st, 2008 · 37 Comments · திரை
கில்லியில் இருந்த கால்வாசி வேகம். பொழுதுபோக்கு கூட இந்தப் படத்தில் இல்லை. இடைவேளையிலேயே எல்லாரும் நெளிய ஆரம்பித்து கைக்கடிகாரம் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். படம் முடிந்த பிறகு “என்னடா காக்கா, குருவின்னு படம் எடுக்கிறீங்க” என்று யாரோ சொல்லிக் கொண்டிருந்தார்.
Tags:kuruvi·kuruvi cinema review·kuruvi movie review·review·குருவி·திரை விமர்சனம்·திரைப் பார்வை·திரைப்பட விமர்சனம்·திரைப்பார்வை