புதிய தனித்தள வேர்ட்பிரெஸ் பயனர்களுக்கான குறிப்புகள்

April 25, 2008

in wordpress

1. Filezilla போன்ற ftp செயலி மூலமாக உங்கள் /blog அடைவில் வலச் சொடுக்கி file attributes பாருங்கள். அதில் read, write, execute என்ற 3×3 தெரிவுகளையும் தேர்ந்தெடுத்து recurse into subdirectories என்பதையும் குறியுங்கள்.

இந்த ஏற்பாடு வலைத்தளத்தில் இருந்து உங்கள் வழங்கியில் மாற்றங்களைச் செய்வதற்கான அனுமதியைத் தரும். இவ்வாறு செய்வது design-theme editor, plugins-plugin editor போன்றவற்றில் இருந்து வலையூடாக மாற்றங்கள் செய்ய உதவும்.

2. நிரந்தரத் தொடுப்பை மாற்றுங்கள்.

settings-permalink போய் custom என்ற பெட்டியில் /%postname%/ என்று கொடுத்து சேமித்தால் உங்கள் முகவரி தானாக மாற்றப்பட்டு விடும். இந்த மாற்றத்தைச் செய்ய .htaccess கோப்பில் சில மாறுதல்கள் செய்ய வேண்டும். முந்திய அடியில் சொன்னது போல் நாம் file attribute மாற்றங்கள் செய்திருந்தால் வேர்ட்பிரெஸே இந்த மாற்றத்தைச் செய்து விடும்.

3. பொதுவாக, வேர்ட்பிரெஸ்ஸில் ஒரு சிக்கல் என்றால் எல்லா நீட்சிகளையும் முடக்கி விட்டு இயல்பிருப்பு வார்ப்புருவுக்கு மாற வேண்டும். பிறகு ஒவ்வொரு நீட்சியாகப் போட்டுப் பார்த்து எதில் கோளாறோ அதைச் சரி செய்த பிறகு வேண்டிய வார்ப்புருவுக்கு மாறலாம். http://wordpress.org/extend/themes/ முகவரியில் கிடைக்கும் வார்ப்புருக்கள் பிரச்சினையின்றியும் வேர்டுபிரெசின் அனைத்து வசதிகளையும் தருவதாகவும் இருக்கலாம்.

4. வேர்ட்பிரெஸ் தரவுத் தளம் உங்கள் /blog அடைவுக்குள் இல்லை. தனியே இன்னொரு இடத்தில் இருக்கிறது. எனவே, பிரச்சினைகளைச் சரி செய்வதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் வேர்ட்பிரசை மீள நிறுவிப் பார்க்கலாம். மீள நிறுவும் முன் உங்கள் wp-content அடைவையும், wp-config கோப்பையும் படி எடுக்க மறவாதீர்கள்.

5. MistyLook வார்ப்புருவில் தமிழ்ப் பதிப்பும் இருக்கிறது. MistyLook பதிவிறக்கப் பக்கத்தில் இருந்து Tamil translation file என்னும் zip கோப்பைப் பெற்று பிரித்து எடுத்தால் ta_TA.mo என்று இருக்கும். அதை உங்கள் வழங்கியில் உள்ள mistylook அடைவுக்குள் போடுங்கள். பிறகு, பதிவின் wp-config கோப்பில்

define (‘WPLANG’, ”);

என்ற வரியை

define (‘WPLANG’, ‘ta_TA.mo’);

என்று மாற்றவும். அவ்வளவு தான்.

விவரங்களுக்கு

http://wprocks.com/wordpress-tips/how-to-use-an-internationalized-theme-for-wordpress/

இந்தத் தமிழாக்கத்தை வேண்டியவாறு எளிதாக மாற்றிக் கொள்ளலாம். இதைச் செய்ய http://www.poedit.net/download.php செயலியைத் தரவிறக்க வேண்டும். பிறகு, உங்கள் mistylook அடைவில் உள்ள POT கோப்பைத் திறந்து தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும். உங்களிடம் உள்ள mo கோப்புக்குத் தகுந்த தமிழாக்கங்கள் POT கோப்பில் இருக்காது. இதற்கான மூலத் தமிழ் POT கோப்பு என்னிடம் இருக்கிறது. யாருக்கும் வேண்டுமானால் அனுப்பி வைக்கிறேன்.

6. அருட்பெருங்கோ புதிய தமிழ்மணம் கருவிப்பட்டை நீட்சி செய்திருக்கிறார். இது தமிழ்மணம் கருவிப்பட்டையைப் பக்கத்தின் இறுதியில் சேர்க்கும். எனவே, பக்கத்தின் தரவிறக்க வேகத்தைப் பாதிக்காமல் இருக்கும். 

தமிழ்மண நீட்சி /images அடைவுக்குள் ஒரு குரங்குத் தலை படம் இருக்கும். அதை நீக்கி உங்கள் படத்தை default.png என்ற பெயரில் பதிவேற்றுங்கள். நீங்கள் தமிழ்மணத்தில் இடுகைகளை அளிக்கும் போது இந்தப் படத்தைக் காட்டும்.

7. settings-discussion போய் before a comment appears என்பதில் முதல் தெரிவை நீக்கி மற்ற இரண்டையும் தேர்வு செய்யுங்கள். இப்படிச் செய்வதன் மூலம், ஏற்கனவே மறுமொழி இட்டவர்களின் மறுமொழிகளை மட்டுறுத்தத் தேவை இருக்காது. உங்கள் நண்பர்களின் மறுமொழிகள் உடனுக்குடன் வெளியாக உதவும்.

பயனுள்ள தொடுப்புகள்:

WordPress.org உதவி மன்றம். – உங்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு இங்கு ஏற்கனவே பதில் இருக்கும்.

* WordPress.org ஆவணங்கள் – வேர்ட்பிரெஸ் நிரலில் மாற்றங்கள் செய்வது குறித்த வழிகாட்டி.

* How to install a self-hosted WordPress blog?

* Blogger to WordPress converts – Beginner questions

* Tamil in WordPress

* தமிழ் வேர்ட்பிரெஸ் பயனர்கள் குழுமம்

* வேர்ட்பிரெஸ் பதிவுகளில் ஜிலேபி எழுத்துப் பிரச்சினையை நீக்குவது எப்படி?

* வேர்ட்பிரெஸ் குறித்த சின்னச் சின்ன ஐயங்களைக் கேட்டுத் தெளிய http://ravidreams.net/forum ஐப் பயன்படுத்த வரவேற்கிறேன்.

இக்குறிச்சொற்களில் சிலவற்றைக் கொண்டிருக்கும் பிற இடுகைகள்

{ 6 comments… read them below or add one }

அருட்பெருங்கோ April 25, 2008 at 2:06 pm

/சிலர் இடுகை முகவரியில் மாதம், ஆண்டுத் தகவல்களும் வருமாறு இடுகிறார்கள். என் கருத்தில் இது தேவையில்லாதது. ஏனென்றால், பல நாட்கள் சென்ற பிறகு நாமே எந்த மாதம் எழுதினோம் என்பதை மறந்து விடுவோம். அப்போது, இந்த மாதம், ஆண்டு முகவரியை நினைவு வைத்து உள்ளிட முடியாது. /

ரவி,

எனக்குத்தெரிந்து URL களை உலாவியில் தட்டச்சுபவர்கள் குறைவு. ஒரு சொடுக்கில் ஒரு பக்கத்தை அடைவதைத்தான் எல்லோரும் விரும்புவார்கள். அல்லது புக் மார்க் செய்து கொள்வார்கள்.

நாம் தொடுப்பாக கொடுக்கப்போகிறோம் அல்லது வாசிப்பவர்கள் புக்மார்க் செய்துகொள்ளப்போகிறார்கள் எனும்போது இந்த மாற்றத்தினால் என்ன பயன்?

Reply

ரவிசங்கர் April 25, 2008 at 2:46 pm

அருட்பெருங்கோ,

//உலாவியில் தட்டச்சுபவர்கள் குறைவு. ஒரு சொடுக்கில் ஒரு பக்கத்தை அடைவதைத்தான் எல்லோரும் விரும்புவார்கள். அல்லது புக் மார்க் செய்து கொள்வார்கள்.//

உண்மை தான். ஆனால், தளம் வளர வளர, அதுவும் தளம் முழுக்க ஒரு துறை தொடர்பாக இருக்கும்போது, இந்த தேதிகளை நீக்கி எழுதுவது உதவும். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியா பக்கங்களில் உங்களுக்கு வேண்டிய தலைப்பைத் தேடுவதை விட நேரடியாக /wiki/articleTitle என்று அந்தப் பக்கத்துக்கு நேரடியாகச் சென்று விடுவது எளிது. பக்க முகவரிகளைத் தேடத் தேவை இன்றி ஊகிக்க இயல்வது மிகப் பெரிய பயன்.

பக்க முகவரிகளில் தேதிகள் இருந்தால், அதைப் பழைய இடுகையாக நினைத்து ஒதுங்குவோரும் இருக்கலாம். பலரும் புதிய இடுகைகளைப் படிக்கத் தானே விரும்புகிறோம்? (சில சமயம், பழையதைத் தேடுவோருக்கு இது உதவும் என்பதையும் மறப்பதற்கில்லை)

பக்க முகவரி என்பது தேடுபொறிகளுக்கு முக்கியமான சேதியைச் சொல்லும் ஒரு விசயம். அதில், இடுகைக்குத் தொடர்பில்லாத இந்த எண்களை வைத்திருப்பது, குறிச்சொற்களின் முக்கியத்துவத்தைக் குறைக்கலாம்.

ஏற்கனவே தமிழ் ஒருங்குறிச் சொதப்பலால், தமிழில் மிக நீளமான முகவரிகளை வைக்க இயலவில்லை. அதில் இருக்கிற கொஞ்ச இடங்களையும் இந்த எண்கள் அடைத்துக் கொள்கின்றன :)

Reply

அருட்பெருங்கோ April 25, 2008 at 6:14 pm

/ஆனால், தளம் வளர வளர, அதுவும் தளம் முழுக்க ஒரு துறை தொடர்பாக இருக்கும்போது, இந்த தேதிகளை நீக்கி எழுதுவது உதவும். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியா பக்கங்களில் உங்களுக்கு வேண்டிய தலைப்பைத் தேடுவதை விட நேரடியாக /wiki/articleTitle என்று அந்தப் பக்கத்துக்கு நேரடியாகச் சென்று விடுவது எளிது. பக்க முகவரிகளைத் தேடத் தேவை இன்றி ஊகிக்க இயல்வது மிகப் பெரிய பயன்./

விக்கிப்பீடியா போன்ற தளங்களுக்கு இது சரி! ஆனால் வலைப்பதிவு என்பது நாட்குறிப்பு மாதிரி. இங்கு தேதி வாரியாக தொகுத்து வைப்பதே நல்லதுன்னு நெனைக்கிறேன்.

பில்லாவுக்கு லக்கியோட விமர்சனம் படிக்கனும்னா /பில்லா னு கொடுத்தா எப்போ வேலை செய்யும்? அவர் அந்த URL-³ /பில்லா னு உருவாக்கியிருந்தா மட்டும்தான? /பில்லா-விமர்சனம் னோ, /பில்லா-திரைப்பார்வை னோ உருவாக்கியிருந்தார் னா என்ன செய்ய?

அதுவே 2007/12 னு கொடுத்து தேடினா அந்த படம் வெளியான காலகட்டத்துல அவர் எழுதின எல்லா பதிவுகளையும் பார்த்துக்கலாம். அதுல விமர்சன பதிவ ஒரு சொடுக்குல திறந்துக்கலாம்!

/பக்க முகவரி என்பது தேடுபொறிகளுக்கு முக்கியமான சேதியைச் சொல்லும் ஒரு விசயம். அதில், இடுகைக்குத் தொடர்பில்லாத இந்த எண்களை வைத்திருப்பது, குறிச்சொற்களின் முக்கியத்துவத்தைக் குறைக்கலாம்./

இதில் சந்தேகம் இருக்கிறது.
கூகுளில் ‘மச்சுவீடு’ என்று தேடினால் ta.wordpress.com/tag/மச்சுவீடு என்பது blog.arutperungo.com/2008/04/அம்மா-வாழ்ந்த-மச்சுவீடு.html க்கு முன்னால்தான் வருகிறது. ஆனால் techtamil.in/tag/மச்சுவீடு technorati.com/tag/மச்சுவீடு எல்லாம் பின்னால் வருகின்றன!

அதனால் வெறுமனே URL query string இல் ?p=103 என்று இருப்பதற்கு பதிலாக பதிவின் தலைப்பும் இருக்குமாறு வைத்துக்கொண்டால் போதுமென்றே நினைக்கிறேன்!

/ஏற்கனவே தமிழ் ஒருங்குறிச் சொதப்பலால், தமிழில் மிக நீளமான முகவரிகளை வைக்க இயலவில்லை. அதில் இருக்கிற கொஞ்ச இடங்களையும் இந்த எண்கள் அடைத்துக் கொள்கின்றன /

பிளாக்கரிலிருந்து மாறியவர்களையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் ;)

Reply

ரவிசங்கர் April 25, 2008 at 7:05 pm

//விக்கிப்பீடியா போன்ற தளங்களுக்கு இது சரி! ஆனால் வலைப்பதிவு என்பது நாட்குறிப்பு மாதிரி. இங்கு தேதி வாரியாக தொகுத்து வைப்பதே நல்லதுன்னு நெனைக்கிறேன். //

பதிவின் உள்ளடக்கத்தைப் பொருத்தும் இந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், வேர்ட்பிரெஸ்ஸைப் பொருத்தவரை தேதி வாரித் தொகுப்புகளைப் பார்க்க பக்க முகவரிகளை இப்படி வைக்க வேண்டும் என்றில்லை. எடுத்துக்காட்டுக்கு, என் பக்க முகவரிகளில் தேதி வராது. ஆனால்,
http://blog.ravidreams.net/2008/04/ பக்கத்துக்குப் போய் பார்த்தால் என்னுடைய ஏப்ரல் 2008 தொகுப்புகளைக் காணலாம்.

//பில்லாவுக்கு லக்கியோட விமர்சனம் படிக்கனும்னா /பில்லா னு கொடுத்தா எப்போ வேலை செய்யும்? அவர் அந்த URL-³ /பில்லா னு உருவாக்கியிருந்தா மட்டும்தான? /பில்லா-விமர்சனம் னோ, /பில்லா-திரைப்பார்வை னோ உருவாக்கியிருந்தார் னா என்ன செய்ய?//

சுமார் 20, 30 ஆண்டுகள் வலைப்பதியப் போகிறீர்கள் என்ற தொலைநோக்கில் பார்த்தால் :) , உங்கள் வலைப்பதிவு வாசகர்களையும் உங்கள் பக்க முகவரிகளை ஊகிக்க இயலுமாறு தொடர்ந்து ஒரே முறையைப் பின்பற்றுதல் நலம். பில்லா-விமர்சனம், பில்லா-திரைப்பார்வை எப்படி வேண்டுமானால் முகவரி வைக்கலாம். ஆனால், எல்லா பக்கங்களுக்கும் தொடர்ந்து விமர்சனம் என்றோ திரைப்பார்வை என்றோ மட்டும் வைக்கும் ஒரு ஒழுங்கு இருப்பது நலம். தவிர, வேர்ட்பிரெஸ்ஸில் இடுகைத் தலைப்பைத் தான் பக்க முகவரியாக வைக்க வேண்டும் என்றில்லை. எனவே, இடுகைத் தலைப்பை வேண்டிய மாதிரி கவர்ச்சியாக வைத்து விட்டு இடுகை முகவரியை மட்டும் ஒரு ஒழுங்குடன் வைக்கலாம்.

http://mykitchenpitch.wordpress.com/ – தாளிக்கும் ஓசை – போன்ற பதிவுகளில் இடுகைத் தலைப்பில் உணவின் பெயர் மட்டும் இருந்தால் ஊகிக்க இலகு தானே? திரைப்படம் போன்ற நாட்களோடு தொடர்புடைய இடுகைகளுக்கு மட்டுமே தேதியை வைத்து ஊகித்துக் கண்டறிய முடியும். அதுவும், எந்தக் கால வரிசையிலும் இல்லாமல் உலகத் திரைப்படங்கள் பற்றி எழுதுபவர்கள் என்றால் தேதியும் செல்லாது. நான் சொல்ல வருவது என்னவென்றால், இன்னும் கொஞ்ச ஆண்டுகள் போனால், இடுகையை எழுதிய உங்களுக்கே நீங்கள் எழுதிய மாதத்தை நினைவு வைப்பதை விட இடுகைத் தலைப்பை மட்டும் நினைவில் கொள்வது எளிது.

//இதில் சந்தேகம் இருக்கிறது.
கூகுளில் ‘மச்சுவீடு’ என்று தேடினால் ta.wordpress.com/tag/மச்சுவீடு என்பது blog.arutperungo.com/2008/04/அம்மா-வாழ்ந்த-மச்சுவீடு.html க்கு முன்னால்தான் வருகிறது. ஆனால் techtamil.in/tag/மச்சுவீடு technorati.com/tag/மச்சுவீடு எல்லாம் பின்னால் வருகின்றன!

அதனால் வெறுமனே URL query string இல் ?p=103 என்று இருப்பதற்கு பதிலாக பதிவின் தலைப்பும் இருக்குமாறு வைத்துக்கொண்டால் போதுமென்றே நினைக்கிறேன்!//

இடுகை முகவரியில் சொற்கள் கூடக் கூட ஒவ்வொரு தனிச்சொல்லுக்கும் உள்ள முக்கியத்துவம் குறையும். இது உறுதி. ஆனால், இந்த அடிப்படையில் மட்டுமே தேடல் முடிவுகள் வருவதில்லை. அதனாலேயே “மச்சு வீட்டு” சோதனை வேறு மாதிரி புரிதல்களைத் தருகிறது. தேடு பொறி நோக்கில் செய்ய வேண்டிய ஒவ்வொன்றையும் பிழை விடாமல் செய்யலாம் என்பதே என் கருத்து.

நீங்கள் ப்ளாகரில் தனித்தளத்தில் இருந்து மாறி இருப்பதால், அதே நீளமான முகவரிகளை, தேதியுடன் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் புரிகிறது. மற்றபடி, தேதி தேவையா இல்லையா என்பது இரு வித நோக்குகளையே சுட்டும். இதில் முழுக்கச் சரி, தவறு என்று எதையும் சொல்ல முடியாது. அவரவர் தெரிவுகள், தேவைகள்..

Reply

Balaji April 26, 2008 at 8:19 pm

Blogger to WordPress converts – Beginner questions – link is wrong

Reply

ரவிசங்கர் April 26, 2008 at 10:37 pm

சுட்டிக்காட்டியதற்கு நன்றி பாலா – திருத்தி இருக்கிறேன்

Reply

Leave a Comment

Previous post:

Next post: