மக்கள் தொலைக்காட்சிக்கும் பிற தமிழ் தொலைக்காட்சிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் சில மேலே உள்ள படத்தில் புலப்படுகின்றன:
நிகழ்ச்சிக்கான பெயர்கள் போடும்போது
1. கிரந்த எழுத்துக்களைக் காணோம்.
2. இராசா என்று இலக்கணப்படி எழுதுகிறார்கள். ராசா என்று எழுதுவதில்லை.
3. அனைவரின் பெயர்களுக்கான தலை எழுத்துக்களும் தமிழிலேயே இருக்கின்றன. கா. குமார் என்று எழுதுகிறார்கள். K. குமார், கே. குமார் என்று எழுதுவதில்லை.
4. Post production போன்ற பொறுப்புகளைக் கூட பின் தயாரிப்பு என்றே எழுதுகிறார்கள். ஆங்கிலத்தை மருந்துக்கு கூட எங்கும் காண இயலவில்லை.
Entries from March 2008
மக்கள் தொலைக்காட்சி
March 27th, 2008 · 9 Comments · ஊடகம்
Tags:ஊடகங்களில் தமிழ்·ஊடகத் தமிழ்·ஊடகம்·தமிழ் ஊடகங்கள்·தொலைக்காட்சி·தொலைக்காட்சி ஊடகங்கள்·மக்கள் தொலைக்காட்சி
இடைமுகப்புத் தமிழாக்கம்
March 27th, 2008 · 2 Comments · தமிழ்
தளங்கள், மென்பொருள்களைத் தமிழாக்குகையில் அவற்றின் தொனி எப்படி இருக்க வேண்டும் என்ற உரையாடல் தமிழ் விக்சனரி குழுமத்திலும் கணிமை வலைப்பதிவிலும் நடக்கிறது.
இந்த உரையாடல்களில் இருந்து இது ஒரு நோக்குப் பிரச்சினை என்று புரிகிறது. இவை நாம் கணினிக்குத் தரும் கட்டளைகள் என்று சிலரும், கணினி தம்மை நோக்கி அறிவுறுத்துவனவாக சிலரும் உணர்கிறார்கள்.
* இவை உயிரற்ற கணினிக்கு இடும் கட்டளைகள் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், கணினி தம்மைப் பார்த்துச் சொல்வதாக நினைக்கும் ஒவ்வொருவரிடமும் போய் “இது கணினிக்கு இடும் [...]
Tags:இடைமுகப்புத் தமிழாக்கம்·தமிழாக்கத் தொனி·தமிழாக்கம்
புதிய தமிழ் வலைப்பதிவர்களுக்கான வேண்டுகோள்கள்
March 27th, 2008 · 2 Comments · வலைப்பதிவு
பல புதிய தமிழ் வலைப்பதிவுகளைக் காண்கையில் மனதில் தோன்றிய எண்ணங்களை இங்கு பதிந்து வைக்கிறேன். இக்கருத்துக்களில் நான் செய்து திருத்திக் கொண்ட பிழைகளும் அடங்கும். இன்னும் நிறைய புதியவர்களைப் பார்க்கையில் கருத்துகள் மாறலாம். கூடலாம்.
தங்கள் வாசிப்புக்காக மட்டுமே எழுதுவோர், நிகழ் வாழ்க்கை நட்பு வட்டத்துக்கு மட்டும் எழுதுவோர் இவ்வேண்டுகோள்களைக் கண்டு கொள்ள வேண்டாம். ஆனால், முன் பின் அறிமுகமில்லா பலரும் தன் எழுத்துக்களைத் தொடர்ந்து படிக்க வேண்டும் என்று எழுதுவோர் கவனிக்கலாம்.
Tags:உதவிக் குறிப்புகள்·குறிப்புகள்·தமிழ் வலைப்பதிவுகள்·பதிவு·வலைப்பதிவர்கள்·வலைப்பதிவு·வலைப்பூ·வேண்டுகோள்கள்
தமிழ் விக்கிப்பீடியர்கள்
March 24th, 2008 · 7 Comments · இணையம்
2005 மார்ச் முதல் தமிழ் விக்கிமீடியா திட்டங்களில் பங்களிக்கத் தொடங்கினேன். அதற்குப் பிறகு தமிழ் இணையத்தில் பல இடங்களில் சுற்றி வந்துவிட்டாலும், இன்று வரை 100% மன நிறைவு அளிக்கும் ஒரே திட்டம் தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் மட்டும் தான்.
தணியாத தமிழார்வத்துக்கு களமாக இருப்பது ஒரு காரணம். இன்னொரு முக்கியக் காரணம், தன்னலமற்ற, ஒத்த கருத்துடைய, தோழமை உணர்வு மிகுந்த, பண்பில் சிறந்த, நேர்மையான நண்பர்களுடன் பணியாற்றுவதே தனி இன்பம் தான்.
இவர்களில் சிலர் தமிழ் இணையத்தில் பிற இடங்களில் தென்படாதவர்கள் என்பதால் அவர்களைப் பற்றிய குறிப்பு:
Tags:தமிழ் இணையம்·தமிழ் விக்கிப்பீடியர்கள்·விக்கிப்பீடியா·விக்கிமீடியா·விக்சனரி
எளிய தமிழ்
March 19th, 2008 · 3 Comments · தமிழ்
தகுந்த இடங்களில் புதிய பொருத்தமான சொற்களைப் பயன்படுத்துவதும் கற்றுக் கொள்வதும் தவிர்க்க இயலாதது.
புல்லாங்குழல் என்று சொன்னால் கூடத் தான் குழந்தைக்குப் புரியாது. அதற்காக காலத்துக்கும், ஓட்டை போட்ட இசைக் கருவி / பீப்பீ என்றே அதற்குப் புரிகிற மாதிரி சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? நம்மில் பலரும் புதிய தமிழ்ச் சொற்களைக் கற்றுக் கொள்வதை பள்ளிக்கூடக் காலத்துடன் நிறுத்திக் கொள்கிறோம். இது தான் பிரச்சினை. இந்தக் குறைவான சொற் தொகையைக் கொண்டு எப்படி உலகின் எல்லா கருத்துக்களையும் எடுத்துரைப்பது?
கணினிக்குப் புதியவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் கூட log in, password போன்ற சொற்கள் புதிதாகவே இருக்கும். ஆங்கிலத்தில் ஒவ்வொரு நாளும் புதுச் சொற்களைக் கற்றுக் கொள்வதற்கும், பொருள் தெரியாத போது அகரமுதலிகளைப் புரட்டுவதற்கும் பழக்கப்படுத்திக் கொள்வது போல் தமிழுக்கும் செய்வதே தீர்வு.
Tags:இடைமுகப்பு·எளிய தமிழ்·சொற்கள்·தமிழாக்கம்·தமிழ்·தூய தமிழ்·விக்கிப்பீடியா
மக்கா சொற்கள்
March 19th, 2008 · No Comments · தமிழ்
தமிழ் வேர் உள்ள சொற்கள் பல்வேறு விதமாக கிளைத்துப் பெரும்பயன் தரவல்லது. கடன்பெறும் சொற்கள் அப்படிப்பட்டன அல்ல. மண்ணில் போட்ட பிளாஸ்டிக் போல் துருத்திக்கொண்டு நிற்கும்.
நியூ என்பது எளிய சிறிய சொல்தானே, ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது? புது என்றால் அது மேலும் “புத்” என்று சுருக்கம் கொண்டு புத்+ஆண்டு = புத்தாண்டு, புத்துணர்வு, புத்தூக்கம், புத்திணக்கம், புத்தெழுச்சி என்று எத்தனையோ சொற்கள் ஆக்கலாம். புதிய கிளர்சியூட்டும் பொருள்கள் கிட்டும். நியூ உணர்ச்சி, நியூ ஊக்கம் , நியூ ஆண்டு என்றெல்லாம் சொல்லிப்பாருங்கள், எப்படிச் செத்துக் கிடக்கும் உணர்வுகள் என்று. மேலும் தமிழ் வேர்ச்சொற்கள் வளர்சியூட்டும் விரிவு தரும், கடன் சொற்கள் இயல்பான வளர்ச்சியை முடக்கும்
Tags:தமிழாக்கம்·தமிழ்·மக்கா சொற்கள்
பிற தளங்களில் எழுதியவை..
March 18th, 2008 · No Comments · பொது
இந்தத் தனிப்பதிவு போக, அப்பப்ப பிற தளங்களில், கூட்டுப் பதிவுகளில், நண்பர்களின் பதிவுகளில் எழுதுவதும் ஒலி உரையாடல்களில் பங்குபெறுவதும் உண்டு. அவற்றில் சிலவற்றை ஒரு குறிப்புக்காக இங்கு தொகுத்து வைக்கிறேன்.
அண்மைய இடுகைகள்
தமிழ் விக்சனரியில் ஒரு இலட்சம் சொற்கள்
தமிழாக்கத் தொனி குறித்த உங்கள் கருத்து தேவை
ஆன்மிகப் பதிவுகளால் தமிழ் இணையத்துக்கு நன்மை உண்டா?
பதிவர் சுதந்திரமும் போலித்தனமும்
தமிழ்99 - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
தமிழ் வலைப்பதிவுலகம்
2 நிமிடத்தில் செய்த திரட்டி
2680+ தமிழ் வலைப்பதிவுகள் பட்டியல், OPML வெளியீடு
பதிவுகளைத் திரட்ட பதிவரின் அனுமதி [...]
Tags:நாட்குறிப்பு·வலைப்பதிதல்
கட்டாயத் தமிழ் மொழிக் கல்வி
March 14th, 2008 · 10 Comments · தமிழ்
தாய்மொழியைக் கட்டாயமாகக் கற்பிக்கலாமா என்று உரையாடிக் கொண்டிருக்கும் உலகின் ஒரே கேடு கெட்ட சமூகம் தமிழ்ச் சமூகமாகத் தான் இருக்க வேண்டும்.
Tags:கட்டாயத் தமிழ் மொழிக் கல்வி·கட்டாயத் தமிழ்க் கல்வி·தமிழர்·தமிழ்·தமிழ் மொழிக் கல்வி·தமிழ்க் கல்வி·தமிழ்நாடு
பேச்சுத் தமிழ்
March 14th, 2008 · 10 Comments · தமிழ்
நேத்து கல்லூரி நண்பன் ஒருத்தன் கிட்ட பேசினேன். என்னோட பதிவுகளைப் படிச்சு பிடிச்சுப் போய், “ரவிசங்கர், இனி நாம் தூய தமிழிலேயே பேசுவோம், சரியா?” அப்படின்னு சொல்லி கொஞ்ச நேரம் “தூய” தமிழில் பேசப் பார்த்தான். அதைத் “தூய” தமிழ்னு சொல்லுறத விட உரைநடைத் தமிழ் / மேடைப் பேச்சுத் தமிழ் / மேடை நாடகத் தமிழ் / பழங்காலத் திரைப்படத் தமிழ் - னு சொல்லலாம்.
அவன் கிட்ட நான் பகிர்ந்துகிட்ட கருத்துக்களும் அதுக்கு அப்புறம் மனசில [...]
Tags:உரைநடைத் தமிழ்·தமிழர்·தமிழ்·தமிழ்நாடு·நற்றமிழ்·நல்ல தமிழ்·பேச்சுத் தமிழ்
வேர்ட்பிரெசு தமிழாக்கம் தந்த படிப்பினைகள்
March 14th, 2008 · 10 Comments · wordpress
டிசம்பர் 2007ல் வேர்ட்பிரெஸ் தமிழாக்கத்துக்கான ஒரு பெருமெடுப்பிலான அழைப்பு விடுத்த ஒரு சில நாள்களிலேயே 3000க்கும் மேற்பட்ட சரங்களைத் தமிழாக்கினோம். அதில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்கள்
Tags:localisation·translation·wordpress·wordpress translation·தமிழாக்கம்·வேர்ட்பிரெஸ்·வேர்ட்பிரெஸ் தமிழாக்கம்·வேர்ட்ப்ரஸ்·வேர்ட்ப்ரெஸ்