இலங்கைத்தமிழுக்கும் தமிழ்நாட்டுத் தமிழுக்கும் சொல் அளவில் இருக்கும் வேறுபாடு பிற நாட்டுத் தமிழில் இருப்பதில்லை என்று நினைக்கிறேன். ஒரு 10 மாதக் காலம் சிங்கப்பூரில் இருந்ததில் கவனித்தது என்னவென்றால்:
தமிழ்நாடு, ஈழம் போன்று தமிழ் முதன்மை மொழியாக இருக்கும் இடங்களில் ஆங்கிலத்தைத் தமிழ் ஒலிப்பில் பேசுகிறோம். தமிழ் பயன்பாடு சமூகத்தில் முதன்மையாக இல்லாத சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் தமிழை அந்த ஊர் ஆங்கில ஒலிப்பில் பேசுகிறார்கள். ஆனால், ஊடகங்களிலும் மக்கள் பேச்சு வழக்கிலும் ஆங்கிலக் கலப்பு தமிழ்நாட்டை [...]
Entries from October 2007
சிங்கப்பூர், மலேசியா தமிழ்
October 19th, 2007 · 2 Comments · தமிழ்
Tags:சிங்கப்பூர்·சிங்கை·தமிழ்·மலாய்·மலேசியா
பட்டிமன்றம் நடத்துவது எப்படி?
October 19th, 2007 · 1 Comment · ஊடகம், தமிழ்
பெண் பேச்சாளர்களுக்கு பட்டுப்புடவை, மினுக்கும் அணிகலன்கள் தேவை இல்லை. ஒத்திகை பார்த்த அசட்டுக் கும்மிச் சிரிப்புகள், குட்டிக் கதைகள் தேவை இல்லை. திரைப்படப் பாட்டு தேவை இல்லை. கண்ணீர் சிந்த வைக்கும் அழுகாட்சிக் கதைகள், அடித்தொண்டையில் கத்தும் பாசாங்குப் பேச்சு தேவை இல்லை.
இப்படியும் அமைதியாக, ஆரவாரம் இன்றி பட்டிமன்றம் நடத்தலாம். மக்களின் வாழ்க்கையைப் பேசலாம். சமூகச் சூழல் தான் எப்படி எல்லாம் ஊடகப் போக்கை மாற்றுகிறது?
பி.கு: சாலமன் பாப்பையா, திண்டுக்கல் லியோனி, விசு கவனத்துக்கு.
Tags:சமூகம்·தமிழ்·பட்டிமன்றம்
இலங்கைத் தமிழ்
October 18th, 2007 · 6 Comments · தமிழ்
தெனாலி, நந்தா, கன்னத்தில் முத்தமிட்டால், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - இவற்றில் கேட்கும் தமிழ் தான் இலங்கைத் தமிழ் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், “அப்துல் அமீது கமல்ஹாசனுக்குத் தவறான பலுக்கலைச் சொல்லித் தந்து விட்டார்” என்று என்னிடம் சொல்லி மாளாத இலங்கைத் தமிழரே இல்லை. ஐரோப்பா, நெதர்லாந்து மற்றும் இணையத்திலும் பல இலங்கைத் தமிழர்களுடன் பேசிப் பழகினாலும், என்னுடன் பேசும் போது எனக்கு சிரமமும் குழுப்பமும் வரக்கூடாது என்று இந்தியத் தமிழுக்கு மாறிப் பேச [...]
Tags:இலங்கை·இலங்கைத் தமிழ்·ஈழத் தமிழ்·தமிழ்
தமிழில் உரைத்துணை
October 17th, 2007 · 10 Comments · இணையம், தமிழ்
dotSUB தளம் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் உரைத்துணை வழங்கும் நுட்பத்தை இலகுவாக்கி இருக்கிறது. சோதனைக்காக, நான் தமிழில் உரைத்துணை சேர்த்துப் பார்த்த நிகழ்படம் ஒன்று..
ஒரு விக்கி தளத்தைத் தொகுப்பது போல் இந்தத் தளத்தில் உரைத் துணையைச் சேர்ப்பதும் மிக இலகுவாக இருக்கிறது. தற்போது இந்தத் தளத்தில் முறையான காப்புரிமம், பொது உரிமம் உள்ள படைப்புகளைத் தான் சேர்க்க முடியும் போல் இருக்கிறது. ஆனால், இந்த நுட்பம் Youtube போன்ற தளங்களுக்கு வரும் எனில் எண்ணற்றை பிற [...]
இலங்கைத் தமிழ் X இந்தியத் தமிழ்
October 16th, 2007 · 8 Comments · தமிழ்
ஒரு குறிப்புக்காக, இலங்கைத் தமிழ் X இந்தியத் தமிழ் வேறுபாடுகளைக் குறித்து நான் கற்றுக் கொள்பவற்றை இங்கு தொடர்ந்து பதிந்து வைக்க இருக்கிறேன். இலங்கைத் தமிழ் என்று நான் குறிப்பது பெரும்பாலும் யாழ்ப்பாணத் தமிழாக இருக்கலாம். இல்லை, வேறு ஒரு இலங்கை வட்டாரத் தமிழாகவும் இருக்கலாம்.
வீட்டில் நிண்டிட்டு போங்கோ | இருந்துட்டுப் போங்க
மழை துமிச்சுக்கொண்டு இருக்கு | தூறிக்கிட்டு இருக்கு
சத்தி வருது | வாந்தி வருது
பஞ்சியா இருக்கு | சோம்பலா இருக்கு
வடிவா இருக்கு | அழகா / [...]
Tags:இந்தியத் தமிழ்·இலங்கைத் தமிழ்·ஈழத் தமிழ்·ஈழம்·தமிழ்
The Bourne, Riding alone for thousands of miles, Ratatouille, The Prince and Me
October 16th, 2007 · 2 Comments · திரை
The Bourne Ultimatum, The Bourne Supremacy, The Bourne Identity - Action படம்னாலே ஒன்னு Superman, Spider-man வகையறா ஜட்டிமேன் படங்கள் அல்லது James Bondன் சாகசப் படங்கள் போல தான் இது வரைக்கும் பார்த்து அலுத்துப் போய் இருந்தது. நண்பரின் மூலம் கிடைத்த திருட்டு டிவிடியைப் பார்த்து இந்தப் படத்துக்கு செம ரசிகனாகி The Bourne Supremacy, The Bourne Identityனு பாகம் 3, 2, 1னு தலைகீழா இந்த படத் [...]
Tags:ஆங்கிலத் திரைப்படம்·சினிமா·சினிமா விமர்சனம்·திரை விமர்சனம்·திரைப்பட விமர்சனம்·திரைப்பார்வை