ரவி

தமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு

ரவி random header image

Entries from September 2007

வணிக நிறுவனங்களுக்குத் தன்னார்வ உழைப்பைத் தருவது சரியா?

September 28th, 2007 · 4 Comments · தமிழ், திறமூலம்

ஆர்க்குட் தமிழாக்கத்துக்கு ஆலோசனைகள் வழங்கலாம் என்று தமிழ் விக்சனரி குழுமத்தில் ஒரு மடல் இட்டிருந்தேன். அதை ஒட்டி எனக்கும் மு. மயூரனுக்கும் நடந்த பயனுள்ள உரையாடலை ஒரு குறிப்புக்காகப் பதிந்து வைக்கிறேன்.
நான்: ஆர்க்குட் தளம் தமிழ் இடைமுகப்புடன் தற்போது கிடைக்கிறது. அது குறித்த தமிழாக்க உரையாடல்கள் இங்கு நிகழ்கின்றன. உங்கள் ஆலோசனைகளையும் தரலாம்.
மு.மயூரன்: இது கூகிள் சம்பளம் கொடுத்து செய்தெடுத்திருக்கவேண்டிய பணி. ஏதோ ஒரு மூடிய கம்பனிக்காக நாம் எமது உழைப்பை வீணடிக்கத்தேவையில்லை. ஆர்குட்டை கூகிள் தமிழில் [...]

[Read more →]

Tags:··

சிறுவர் இலக்கியம் படைப்பவர்களுக்கான மொழி சார் பொறுப்பு

September 28th, 2007 · 1 Comment · தமிழ்

மாடர்ன் முயலும் முட்டாள் ஆமையும் என்ற தலைப்பில் கண்மணி எழுதிய ஒரு சிறுவர் கதையைக் கண்டேன். அதில் உள்ள தமிங்கில நடையைத் தவிர்க்கலாமே என்று சொல்லி ஒரு மறுமொழி அளிக்க அதைத் தொடர்ந்து நடந்த உரையாடலை ஒரு குறிப்புக்காகப் பதிந்து வைக்கிறேன். கண்மணியின் மனப்போக்கு ஒரு கதை எழுதுபவரின் பார்வையாகவும் இன்றைய தமிழ்ச் சமூகத்தில் தமிங்கிலம் குறித்து நிலவும் மனப்பான்மையைச் சுட்டுவதுமாக அமைந்திருப்பதைக் காணலாம்.
நான்: இயன்ற வரை நல்ல தமிழில் கதை சொன்னால் பரவாயில்லை..வளரும் பருவத்திலேயே [...]

[Read more →]

Tags:·

தமிழ்நாட்டுப் பள்ளிப் பாடநூல்கள் இணையத்தில் கிடைக்கின்றன

September 27th, 2007 · 4 Comments · தமிழ்

ஏப்ரல் 2007ல் இணையத்தமிழ் உள்ளடக்க உருவாக்கத்துக்கு தமிழக அரசு செய்ய வேண்டியது குறித்து எழுதி இருந்தேன். அதை யாரும் பார்த்தார்களா தெரியாது நேற்று கூட இதன் தேவை குறித்து தமிழ் விக்கிபீடியாவில் உரையாடினோம். நேற்று இரவே, தமிழ்நாட்டுப் பள்ளிப் பாடத்திட்ட நூல்கள் pdf வடிவில் இணையத்தில் கிடைக்கத் தொடங்கி இருப்பதை கண்டு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
http://www.textbooksonline.tn.nic.in/ என்ற முகவரியில் 1 முதல் 12 வகுப்பு வரைக்குமான பாடநூல்கள் தமிழ், ஆங்கிலம் இரு வழியிலும் [...]

[Read more →]

Tags:·······