பள்ளிக்கூடம் | பாவம் டிகாப்ரியோ

August 18, 2007

in திரை, நாட்குறிப்பு

பள்ளிக்கூடம் – முதல்ல தங்கர் பச்சான் தன் படங்களைப் பத்தி உருகி உருகி பேசுறதைத் தவிர்க்கணும். அழகியின் பாதிப்பை விட்டு இன்னும் அவர் மீளவில்லை. அழகியைத் தவிர வேற எந்தப் படமும் பாதிப்பை ஏற்படுத்துவதாயும் இல்லை.

இனிமே சினேகா பேச்சை நம்பக்கூடாது. இந்தப் படத்திலயும் புதுப்பேட்டை படத்திலயும் வாழ்நாள் கதாப்பாத்திரம் என்ற rangeல் build-up கொடுத்து இருந்தாங்க. அப்படி ஒன்னையும் காணோம் படத்தில. இன்னும் இரண்டு படம் இப்படி நடிச்சாருன்னா நரேன் பாரதிராஜாவின் மாப்பிள்ளை நாயகர் ராஜா மாதிரி ஆகிடுவார். கவனம் தேவை.

தங்கர், சீமான், நரேன்-சிநேகா, ஸ்ரேயா-னு ஏகப்பட்ட புள்ளிகளைச் சுற்றி கதை முன்னும் பின்னுமாக அலைவது அலுப்பூட்டுக்கிறது. இந்த voice over narration உத்தியை எந்த புண்ணியவான் கண்டுபிடிச்சானோ சேரன், தங்கர் போன்றவர்கள் அதைத் தேவை இல்லா இடங்களில் எல்லாம் பயன்படுத்தி கடுப்பைக் கிளப்புறாங்க. காடு பதுங்குவோமே, மீண்டும் பள்ளிக்குப் போகலாம் தவிர இந்தப்படத்தில் மூனு பாடல்களுக்குத் தேவையே இல்லை. ஸ்ரேயா பாத்திரம், சின்ன சினேகா-நரேன் duetம் தேவையே இல்லை. கண்ணியமான திரைப்படம் குறித்து பேசும் தங்கர் எதற்கு “தடவித் தடவி” விடலைப் பிள்ளைகளுக்கு ஒரு duet வைக்கணும்? இப்படித் தடவித் தடவிக் காதலைக் காட்டுவதால் சினேகா-நரேன் பிரியும் போது பதைபதைப்போ சேர வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்போ இல்லை. கிளைக் கதைக்கு மேல் கதை வைச்சதால், உண்மையில் பள்ளிக் கூடம் கட்டப்படுமா என்று எல்லாம் படம் பார்க்கிற ஒருவருக்கும் கவலை வராது. தங்கர் சொல்ல விரும்புவதாக நினைக்கும் செய்தியும் போய் சேராது.

என்ன இருந்தாலும், ஒரு சில மண்ணின் மனிதர்களையாவது உண்மை முகத்துடன் காட்டுகிறார் என்பதற்காக மட்டுமே தங்கரின் படங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

கிரீடம் – ok. ஒரு மறை time passக்குப் பார்க்கலாம்.

லியோனார்டோ டிகாப்ரியோவின் அழகு என்ன, நடிப்பு என்ன..ஹ்ம்ம்..தமிழ்நாட்டில் விஜயாகவோ மாதவனாகவோ பிறந்து இருந்தால் நல்லா வாழ்ந்திருக்க வேண்டியவர். அநியாயத்துக்கு நான் பார்க்கிற ஆங்கிலப் படத்துல எல்லாம் பொசுக்கு பொசுக்குன்னு செத்துப் போறார். இல்லாட்டி, சோகமா இருக்கார்.

Black Diamond – இப்படி ஒரு உலகம், மனிதர்கள் இருப்பதே இந்தப் படம் பார்த்து தான் தெரியும். விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு இதுவே இந்தப் படத்தின் வெற்றி தான். சிறுவர்கள் போராளிகளை மாற்றப்படும் சூழல் நடுங்க வைக்குது !

The Departed – எப்படியும் டிகாப்ரியோ தபாலிச்சு வந்திருவாருன்னு பார்த்தா அநியாயமா டப் டப்புன்னு சுட்டுக் கதையை முடிச்சிடுறாங்க. அர்ஜூன், விஜயகாந்த் எல்லாம் இந்தப் படங்களைப் பார்க்க மாட்டாங்களா ;)

The Aviator – The Departed இயக்குனரே இயக்கியது. ஆனால், முற்றிலும் வேறுபட்ட கதைக்களம். தமிழில் இப்படி முந்தைய படங்களின் பாதிப்பு இல்லாமல் வேறுபட்டு இயக்குகிறவர்கள் மிகவும் குறைவு. புதியவர்களில் சுசி கணேசனும் லிங்குசாமியும் தான் உடனே நினைவுக்கு வருகிறவர்கள்.

மேலே உள்ள மூனும் டிகாப்ரியோ படங்கள். கண்டிப்பா பார்க்கலாம்.

அடுத்து வரும் இரண்டு படங்களும் பார்க்கப்பட வேண்டியவை தான். Superman, Science fiction வகையறா படங்களைக் காட்டிலும் மனிதர்களை அவர்கள் பலம், பலவீனத்துடன் காட்டும் நிகழ் வாழ்க்கை கதையுடைய படங்கள் பிடித்திருக்கின்றன.

Million dollar baby – நம்ம ஊரு மூத்த நடிகர்கள் எல்லாம் இந்த மாதிரி பாத்திரங்களில் நடிச்சா எவ்வளவு நல்லா இருக்கும் !! ஒரு பயிற்சியாளருக்கும் விளையாட்டு வீரருக்குமான அறிமுகம், அதைத் தாண்டிய நெகிழ்ச்சியான உறவாக மாறும் விதம் அருமை.

The Pursuit of Happyness – Will Smithம் அவருடைய மகனும் சேர்ந்து கலக்குறாங்க. அமெரிக்காவை அதன் இயல்போடு அறிந்து கொள்ள முடிகிறது. நிச்சயம், உற்சாகமும் முனைப்பும் தர்ற படம்.

மேல உள்ள படங்களை எல்லாம் பார்க்கும்போது தோணுறது ஒன்னு தான். தமிழ்த் திரைப்படங்கள் வெளிநாட்டு locationகள், வண்ண வண்ண setகள், ஏய்..ஊய் அலட்டகள், தெய்வீகக் காதல்கள் இதை எல்லாம் தாண்டி வெளிய வந்தா சொல்லப் படக்கூடிய, சொல்லப்பட வேண்டிய கதைகள் எத்தனையோ இருக்கு.

Derailed – இந்தப் படத்தைப் பார்க்கவே கொட்டாவி வருது. இதை வேற தமிழ், இந்தில உல்டா பண்ணி எடுக்கத் தோணுச்சோ மக்களுக்கு ! ஆனால், பிரம்மாண்டம் இல்லாமல் குறைந்த நிதியில் சுமாரான படம் எடுக்க இதைப் பார்த்து நம்ம ஆட்கள் கற்றுக் கொள்ளலாம்.

பொம்மரில்லு - ஆஹா..சூப்பர் படம் ! எப்படியும் நம்ம வீட்டுக்கு வர்ற மக்களுக்கு எல்லாம் போட்டுக்காட்டி பல காட்சிகள் ஓடப்போகுது..எத்தனை முறை வேணா சலிக்காமப் பார்க்கலாம்னு இருக்கு..தங்கத் தலைவி cute ஜெனிலியாவுக்காக இன்னும் பல முறை பார்க்கலாம். துறு துறு நாயகி வேடத்துக்கு தானைத் தலைவி லைலாவுக்குப் பிறகு ஜெனிலியா தான் முழுப் பொருத்தம். ஆந்திரா மக்களை நாம ஓட்டிக்கிட்டே இருந்த வேலைல அவங்க நல்ல பொழுது போக்குப் படங்கள் எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க போல..இது மாதிரி வேற படம் தெரிஞ்சாலும் சொல்லுங்க.. ஆர்யா, கோதாவரி நல்ல திருட்டுப் பதிப்பு கிடைக்காம காத்திருக்க வேண்டியிருக்கு..இந்தப் படத்துக்கு tamiltorrents தளத்துல அருமையான டிவிடி பதிப்பு கிடைக்குது. இந்தப் படம் தமிழ்ல remake raja, ravi சகோதரர்கள் தயாரிப்புல வெளிவர இருக்கு. கண்டிப்பா வெற்றிப் படம் தான். ஜெயம் ரவி கூட remake படத்தில் நடிச்ச சதா, அசின், ஷ்ரேயா, த்ரிஷா-ன்னு எல்லாரும் முன்னணி நடிகைகளா வந்தத நினைக்கையில் ஜெனிலியாவுக்குத் தமிழ்லயும் ஒரு round கிடைக்கும்னு நம்ம பகுத்தறிவு சொல்லுது :)

ஒன்னுமில்லாத படத்தை ஊதிப் பெரிசாக்குறதும், நல்ல படத்தை பலரறியச்செய்யாம விட்டுடுறதும் தமிழ்த் திரைப்பட விமர்சகர்களுக்கு கை வந்த கலை.

பெரியார் – இதைப் பார்ப்பதற்குப் பதில் “பெரியார் வாழ்வில் சுவையான நிகழ்வுகள்” என்று மணிமேகலைப் பதிப்பக 25 ரூபாய் நூல் ஏதும் இருந்தால் படித்து விட்டுப் போகலாம். காமராஜ் படத்தையும் இப்படித் தான் உப்பு சப்பில்லாமல் எடுத்துக் கவிழ்த்தார்கள். பாரதி படத்தின் 60ஆம் நாளில் கூட black ticket எடுத்துத் தான் பார்த்தோம். பாரதி என்ற ஒரு வரலாற்று நாயகனை வைத்து ரத்தமும் சதையுமாக அப்படி ஒரு அருமையான படத்தைத் தந்த ஞான ராஜசேகரனின் freedom of creativity இதில் முடக்கப்பட்டிருக்கிறது என்றே நம்புகிறேன். இரண்டு காரணங்கள் – பெரியார் போன்ற அரசியல் நாயகனின் வாழ்வை அனைத்து அரசியல் கட்சியனருக்கும் திருப்திகரமாக எடுக்க வேண்டுமே என்ற கட்டாயம் / மலைப்பு, அரசின் நிதியுதவிக்கு நன்றி உடையவனாக இருக்க வேண்டியிருப்பது. இப்படி 95 ஆண்டு வாழ்க்கையையும் ஒரு படத்தில் அடக்க முற்படாமல் அவர் வாழ்வின் முக்கிய கால கட்டத்தை எடுத்துக் கொண்டு அதில் அவர் பண்பு, முக்கியத்துவம் வெளிப்படுமாறு செய்திருக்கலாம்.

தெளிவான வணிக வடிவத்திலும் இல்லாத இந்தப் படத்தில் பாடல்களைப் புகுத்தி நேரத்தை வீணடித்திருப்பது மன்னிக்க முடியாத பிழை. படத்தின் நடிகர் தேர்விலேயே கோட்டை விட்டு விட்டார் இயக்குனர். கடைசி வரை சத்யராஜ், மனோரமா, குஷ்பு என்று தான் என்னால் படத்தைப் பார்க்க முடிந்ததே தவிர அவர்களை வரலாற்றுப் பாத்திரங்களாகப் பார்க்க இயலவில்லை. மக்கள் மனதில் எந்த அறிமுகமும் இல்லாத நாடக நடிகர்களை வைத்து இன்னும் சிறப்பான அனுபவத்தைத் தந்திருக்க முடியும். மதன்பாப், Y.G மகேந்திரன், நிழல்கள் ரவி, சந்திரசேகர் என்று quota முறையில் நடிகர்கள் தேர்வு நடந்திருக்கும் போல..அம்பேத்காராக நடித்தவரைப் பார்த்து எனக்கு சிரிப்பு தான் வந்தது. இது போன்ற comedy நடிகர்களையா இப்படி முக்கியமான பாத்திரங்களுக்கத் தேர்ர்வு செய்வது? இடைவேளைக்குப் பிறகு, ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு தலைவராக வரிசையில் நிற்க வைத்து ஒவ்வொரு காட்சியிலாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள். என்ன கொடுமையடா? :( நல்ல தலைவரை முறையாக அறிமுகப்படுத்தும் வாய்ப்பை விட்டு விட்டார்கள். ஒரு பிரச்சாரப் படமாக இது பயன்படலாம். ஆனால், சாதாரணத் தமிழ்ச் சிறுவன் மனதில் இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. Life history படம் எடுப்பதில் நம்ம ஆட்கள் இன்னும் பல படிகள் முன்னேற வேண்டும்.

சென்னை 600028 – இன்னொரு ஊதிப் பெரிசாக்கப்பட்ட படம். கதைக்களம், பாத்திரப் படைப்புகள் புதிது தான். ஆனால், தேவையில்லாத பாடல்கள், bore அடிக்கும் கிரிக்கெட் காட்சிகள் தவிர்த்து 50% படத்தை வேண்டுமானால் பார்க்கலாம். லகான் படத்தில் கிரிக்கெட் ஆட்டத்தை ஒரு வாழ்வா சாவா ஆட்டமாக புத்திசாலித்தனமாக மாற்றி இருந்தார் இயக்குனர். அதில் பந்துக்குப் பந்து, வீரருக்கு வீரர் strategy, style மாறி நம் இதயத் துடிப்பை எகிற வைக்கும். இந்தப் படத்தில் கிரிக்கெட் காட்சிகள் ஏனோ விளம்பர இடைவேளை முன்னோட்டம் போல் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான பின்னணி இசை அதை விட கொடுமை. படத்தில் ரசித்த இரண்டே காட்சிகள் – சிறுவர்களிடம் பந்தயம் கட்டித் தோற்பது, சிவா சொல்லும் காதல் கவிதைக்கு குழந்தை அழுவது. இந்த Radio Mrichy சிவாவின் குறும்புக் குரலுக்கு நான் மிகப் பெரிய விசிறிங்கிறது துணைத் தகவல் :)

ஒக்கடு (கில்லி) – லைடன் மகேஷ்பாபு ரசிகர் மன்றத் தலைவர் என்ற முறையில் யாம் அவரது பழைய படங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். என்ன இருந்தாலும் தமிழனின் திறமையைக் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. ஒக்கடுவை விட பல மடங்கு நகாசு வேலைகளோடு, முக்கியமாக வீட்டில் நடக்கும் நகைச்சுவைக் காட்சிகளை, கில்லியை அருமையாக எடுத்திருக்கிறார்கள்.

குறைந்தபட்ச மாற்றங்களோடு ஈயடிச்சான் copy படங்கள் எடுப்பது எப்படி என்று அறிய இயக்குனர் ராஜா & co, சென்னைக் கிளையை அணுகவும். நுவ்வொஸ்தானந்தே நேனொத்தந்தா (இது தாங்க தெலுங்குப் படப் பெயர்!!!) -ன் தமிழ்ப்பதிப்பான Something Somethingல் கோழி, வாத்து பறப்பது கூட Frame பிசகாமல் copy அடிக்கப்படிருந்தது பார்த்துப் புல்லரித்துப் போனேன் ;)

உன்னாலே உன்னாலே – நல்லா இருக்கு. பின்பகுதி படத்தை 2,3 தடவை கூட தாராளமா பார்க்கலாம். கவர்ச்சி, ஆபாசம், சண்டை, மட்டமான நகைச்சுவை இல்லாமல யதார்த்தமாக ஒரு இளமை துள்ளும் படம். இதப் போய் ஏன் நல்லா இல்லை, கதை இல்லைன்னு நிறைய பேரு திட்டி விமர்சனம் எழுதுறாங்கன்னு புரில! 12 B, உள்ளம் கேட்குமேயும் பிடிச்சிருந்தது..ஒருத்திய மட்டும் காதலிச்சு அவளுக்காகப் பூச்சி மருந்து குடிச்சு சாகுறத எல்லாம் படிச்ச நகரத்து இளைஞர்கள் மறந்து ரொம்ப நாளாச்சு ! படத்துல உள்ள climax தான் யதார்த்தம். எத்தனை நாளைக்கு தான் ஆழமான கதை, அகலமான கதை, வித்தியாசமான கதைனு மக்களை அழ வைச்சுத் துன்புறுத்திக்கிட்டே இருக்கிறது? கொஞ்சம் இந்த மாதிரி சந்தோஷமாவும் இன்னும் நிறைய பேர் படம் எடுத்தா நல்லது.

Hotel Rwanda – ஈரக் குலையை நடுங்க வைக்கும் மனிதம் ததும்பும் உண்மைக் கதை படம்! எல்லாரும் கண்டிப்பா பார்க்கணும்..ஆனா, ஒரு தடவைக்கு மேலப் பார்க்க கல் மனசா இருக்கணும் இல்ல திரைப்படக் கலை விரும்பியா இருக்கணும்..1994ல ருவாண்டாவுல 3 மாசத்துல பத்து இலட்சம் மக்களை இனப்படுகொலை செஞ்சிருக்காங்க ! இது குறித்த எந்த சொரணையும் இல்லாம இருந்திருக்கமேங்கிறது தான் பொட்டுல அடிச்ச மாதிரி உறுத்துது! இத எல்லாம் நம்ம வரலாற்றுப் பாடப் புத்தகங்கள்ல சேர்க்க மாட்டாங்களா?

Superman Returns – ஒன்னு புரிஞ்சு போச்சு. சிகப்பு, நீலக் கலர்ல பனியன், ஜட்டி design செஞ்சுட்டா நாமளும் Spiderman, Superman படங்களை எடுத்திடலாம். ஜட்டி விசயத்தில் எனக்கு முன் அனுபவம் இருக்கனால், ஜட்டிமேன்-னு கூட மூணு பாகம் எடுக்கலாம். கூடவே, ரஜினி பட heroism, பழைய முரளி பட காதல் sentiment எல்லாம் கலந்துக்கணும்.

Happy Feet – ஒரு முறை பார்க்கலாம். என்ன இருந்தாலும் Finding Nemo மாதிரி வராது ! இந்தப் படத்தை எல்லாம் நம்ம ஊர்ல மொழிமாற்றி விடுறாங்களா? விட்டா நல்லது தான்.

Lost in Translation – Mr. and Mrs. Iyer மாதிரி திருமணமான இருவருக்கு இடையில் மலரும் மெல்லிய அன்பு குறித்த கதை. நல்ல படம். ஒரு முறை பார்க்கலாம்.

Motorcycle Diaries – சே குவேரா அவருடைய நண்பருடன் செய்த Motorcycle பயணம் குறித்த diaryய அடிப்படையா வைச்சு எடுக்கப் பட்ட படம். ஒரு புரட்சியாளனின் கதையைப் பார்க்கிறோம் என்ற பிரமிப்பு அகலாமல் பார்க்கலாம். பிரச்சாரம் இல்லாத இயல்பான படப்பிடிப்பு. முழு வாழ்க்கையையும் ஒரு படத்தில் அடைக்காமல் அவரது வாழ்க்கையின் முக்கியக் கட்டத்தை மட்டும் படம்பிடித்துக் காட்டி இருப்பது சிறப்பு.

Salam Namaste – முன் பாதி இரண்டு முறை பார்க்கலாம். சாயஃப் அலி, ப்ரீத்தி பிடிச்சவங்களுக்கு இந்தப் படம் நல்லாவே பிடிக்கும். இதில வர்ற இந்தியக் comedian கலக்கல்.

மொழி - அருமையான படம்!

பருத்தி வீரன் – பலரும் ஆஹா ஓஹோன்னு சொன்னாலும் எனக்கு ஒன்னும் தோணலை. மௌனம் பேசியதே அமீரோட நல்ல படம்னு நினைக்கிறேன். ராம் படமும் over hypeக்கு அப்புறம் பார்த்து புஸ்ஸுன்னு ஆயிடுச்சு. இந்தப் படத்துல பாட்டு எனக்கு என்னவோ எனக்கு ஒட்டவே இல்லை. இரண்டு நீளமான பல பகுதி flash back bore. செம சாதாரணமான கதை. கதையின் முடிவுக் காட்சி கோரம் தேவையில்லாதது. மண்டை வலி தான் மிச்சம். கதைல வர்ற சோகத்தால நாயகன், நாயகி மேல எந்த விதமான பரிதாபமும் வரல. இந்தப் படத்த இரண்டு வருசம் எடுக்க என்ன இருக்குன்னு தோணல. Not recommended for viewing

போக்கிரி (தமிழ்) – விஜய், அசின், வடிவேலுக்காக ஒரு முறை பார்க்கலாம். தெலுங்குப் படத்த remake பண்ணாலும் இப்படியா ஈயடிச்சான் copy அடிக்கிறது? இதே படத்துல மகேஷ் பாபு நடிச்சிருந்தா நல்லா இருக்கும். original படம் அளவுக்கு அதே வன்முறை. ஆனா, கூடுதல் கண்ணியமா எடுத்திருக்காங்க. வடிவேலு comedy நல்லா இருக்கு.

தாமிரபரணி – நாட்டாமை, நட்புக்காக காலத்து படம். bore அடிச்சா ஒரு முறை பார்க்கலாம். கதாநாயகி tv serial நடிக்கத் தான் தகுதின்னு தோணுது.

குரு (தமிழ்)சுத்த waste படம். aishwarya rai இனிமேலும் நாயகியா நடிக்கிறத நிறுத்திக்கணும். மணிரத்னம் தன் பழைய படத்தில இருந்தே காட்சிகளை remix பண்றத நிறுத்தணும்..

இக்குறிச்சொற்களில் சிலவற்றைக் கொண்டிருக்கும் பிற இடுகைகள்

{ 23 comments… read them below or add one }

Sathia May 18, 2007 at 2:14 am

அய்யா சாமி, நீங்க இத்தன படத்த பாத்துட்டு ஞாபகம் வச்சுக்கற அளவுக்கு உங்க RAM அளவு இருக்கா. நமக்கு 2 படத்தை பாத்தாலே ஞாபகம் இருக்காது. இதுல ‘மொழி’ , ‘போக்கிரி’ மட்டும் தான் பாத்து இருக்கேன். அழகான, நாசூக்கான படம் மொழி. அப்படியே எதிர் போக்கிரி.

Reply

ravishankar May 18, 2007 at 11:21 am

சத்தியா – ரொம்பத் திட்டுற அளவுக்கோ பாராட்டுற அளவுக்கோ இல்லாததால் எழுதாம விட்ட படங்கள் இன்னும் நிறைய..இதுல தெலுங்குப் படங்கள் வேற பார்க்கிறேன் :) தமிழ்நாட்டுல உள்ளவங்கள விட வெளிநாட்டில் இருக்கவங்க நிறைய குப்பை படங்களைப் பார்த்துடுறாங்க..இலகுவா கிடைக்குது..நேரத்தையும் எப்படியாச்சும் கடத்தணுமே!

Reply

Arun May 28, 2007 at 3:12 pm

Paruthi Veeran is a wonderful creation. I can’nt understand your taste. Don’t waste your time by writing reviews for Junk Masala movies like Pokkiri.
If you are educated, you won’t think about movies like Pokkiri and should appreciate Paruthi Veeran.

Reply

கலை May 31, 2007 at 9:10 am

கிரிக்கெட் ஆட்டமே பிடிக்காத என்னையே, எழும்ப விடாமல் கிரிக்கட் பார்க்க வைத்த படம் லகான் :) .

Hotel Rowanda படம் DVD வாங்கி வைச்சு ரொம்ப நாளாகுது. ஆனாலும் பார்க்க இன்னும் நேரம் கிடைக்கவில்லை :( . பார்த்தாலும் தாங்க முடியாது போல இருக்கு, ம்ம்ம்.

மொழி படம் பார்க்க waiting :) .

Reply

Shankar Ganesh July 1, 2007 at 4:58 pm

ம்ம்… Happy feet பார்க்க வேண்டும்.
மொழி மிக நன்றாக இருந்தது :)

Reply

Bala July 2, 2007 at 6:02 am

சலாம் நமஸ்தே… உங்க பேரை சொல்லிப் பார்த்துடலாம்… ;)

பொம்மரில்லு குறித்த மைக்ரோ விமர்சனம்: இரண்டாம் பாதி அமர்க்களம். நல்ல நகைச்சுவை. ஏற்கனவே ஜோடி போன்ற சில படங்களில் பார்த்த கதையம்சம்; என்றாலும், இதில் வெகு சிறப்பாகவே வந்திருக்கிறது.

‘மனசுக்குப் பிடிச்சதை செய்யணும்’ என்று அமெரிக்க கருத்தாக்க பாணியில் ஜெனீலியவின் பாத்திரம். பிரகாஷ்ராஜ்தான் ஹீரோ. ‘அத்தடு’வுக்கு அடுத்த வாரம் பாத்ததாலோ என்னவோ சித்தார்த் சோபிக்கவில்லை.

Reply

ரவி July 2, 2007 at 9:18 pm

பாலா – ஜெனிலியா அறிமுகக் காட்சியில இருந்து இடைவேளை வரைக்கும் உள்ள காட்சிகள் எனக்குப் பிடிச்சது. இரண்டாம் பாதி கொஞ்சம் அப்பப்ப serious ஆகிடுது. மகேஷ்பாபுவோட எல்லாம் சித்ததார்த்த ஒப்பிடலாமா :) ஜெனிலியா தான் படத்தின் + என்று என் கருத்தை ஜொள்ளிக் கொள்கிறேன்.

Reply

Bala July 3, 2007 at 6:33 am

ரொம்ப ரொம்ப சீக்கிரமா ஒரு கேள்வி… Anukokunda Oka Roju பார்த்திருக்கீங்களா?

Reply

ரவி July 3, 2007 at 10:09 am

இன்னும் இல்லை, பார்த்துடுவோம். பார்க்க வேண்டிய தெலுங்கு, இந்தி, மலையாள, ஆங்கில, உலகப் படங்கள்-னு snapjudgeல ஒரு பட்டியல் போட்டீங்கன்னா வசதியா இருக்கும் :)

Reply

மயூரேசன் July 3, 2007 at 6:20 pm

இந்தோனேசியாக் காரர் ஒருவர் கொழும்பில் வேலைசெய்தார்.. பைத்தியம் இரண்டு மடங்கு பைத்தியம் என்பதற்கு அவர் சொல்லும் சிங்கள்….
1. பிஸ்சு – பைத்தியம்
2. டபிள் பிஸ்சு

இதில் நான் ஏது நீங்க ஏது என்று புரியுதுதானே!!! ;)

Reply

பாலாஜி July 6, 2007 at 11:30 pm

இந்த ஒரு முறை பார்க்கலாம் சங்கதியே எனக்கு புரிந்ததில்லை. தேர்வுக்கு படிக்கும் போது இந்த பகுதி வினாவாக வருமா என்று தெரியலில்லை. இருந்தாலும் ஒரு முறை படித்துவிட்டுப் போ என்று நன்பர்கள் பேசிக்கொள்வது போல் இருக்கிறது. நீங்கள் கொடுத்த லிஸ்டில் மொழி, Hotel Rwanda போன்று படங்களையே நான் மற்றவர்களுக்கு நான் சிபாரிசு செய்யமாட்டேன்! Lost in Translation மற்றும் Motorcycle Diaries மட்டும்தான் சிபாரிசு செய்யத்தக்க படங்களென்று நான் நினைக்கிறேன். ஜெயம் ரவி மாதிரி ஆசாமிகள் படத்தை துப்பாக்கி முனையில் பார்க்கச் சொன்னாலும் மாட்டேன்!! நாம் பார்க்கும் ஒவ்வொரு மட்டமான படமும் நாமே நமது ரசனையைக் கெடுத்துக்கொள்ளும் செயல் என்று நினைக்கிறேன்!

Reply

Bala July 7, 2007 at 7:40 am
Bala July 7, 2007 at 7:44 am

sorry for spamming…
Amazon.co.uk: Is It Just Me or Is Everything Shit?: The Encyclopedia of Modern Life: Books: Alan McArthur,Steve Lowe புத்தகத்தில் இருந்து ‘Lost in Translation’ குறித்த பகுதி – ”a supercilious rich-kid auteur who does pseudo-profound confections that people initially twat themselves over but which, on second viewing, are the cinematic equivalent of unflavoured rice cake”

Reply

ரவி July 7, 2007 at 11:23 am

பாலாஜி – ஏனடா இந்தப் படத்துக்குப் போனோம் என்று நாள் கணக்கில் நொந்து கொள்ளும் படங்கள் இருக்கின்றன. அவற்றை மட்டுமே நான் பரிந்துரைப்பதில்லை. மற்றபடி, கொடுத்த காசுக்கு செலவழிக்கும் நேரத்துக்கு ஏதோ பரவாயில்லாம பொழுது போனா சரி என்ற நோக்கில் பல நண்பர்கள் படம் பார்ப்பதுண்டு. அவர்களுக்காகவே, ஒரு முறை பார்க்கலாம் என்ற சான்றிதழ். கலை நோக்கில் மட்டுமே எல்லா படங்களையும் என்னால் பார்க்க முடியாது. பொழுது போக்கு அம்சம், கலையம்சம் இரண்டில் எது இருந்தாலும் சரி தான். operaக்களை ரசிப்பவனால் டப்பாங்கூத்தையும் ரசிக்க முடியும். இரண்டையும் தனித்தனியாக ரசிப்பவர்களும் உண்டு. ஒருவரின் ரசனையைக் காட்டிலும் இன்னொன்று மட்டம் என்று சொல்லி விட முடியாது. அவரவர் எதிர்ப்பார்ப்பது சரியாகக் கிடைத்தால் போதுமானதே.

bala – lost in translation நினைவில் தங்கும் படமோ புரட்டிப் போடும் படமோ logicல் சிறந்த படமோ இல்லை தான். ஆனால், okன்னு தோணுச்சு. அவ்வளவு தான்

Reply

Dr.Sintok July 7, 2007 at 4:46 pm

பெரியார்- பார்க்க வில்லை…… நேறம் கிடைக்கும் போது கண்டிப்பாக ஒரு முறை பார்ப்பேன். காமராஜ் பாரதி படத்தை அவர் சிறந்த முறையில் இயக்க வில்லை. ‘ஞான ராஜசேகரனின் freedom of creativity இதில் முடக்கப்பட்டிருக்கிறது’ அவரின் முந்திய இரு படங்களை பார்த்த பிறகு இவர் வரலாறு படம் எடுக்க தகுந்தவர் அல்ல என்பது என் எண்ணம்.

சென்னை 600028 – நான் மிகவும் ரசித்த படம்…… சத்தியமாக எனக்கு கிரிக்கெட்டை பத்தி எதுவும் தெரியாது… கிரிக்கெட் விளையாட்டையும் பார்த்தது இல்லை.. இருந்தும் இந்த படத்தை ரசித்து பார்த்தேன்.’சிறுவர்களிடம் பந்தயம் கட்டித் தோற்பது, சிவா சொல்லும் காதல் கவிதைக்கு குழந்தை அழுவது.’ – நானும் ரசித்த காட்சிகள் . ‘பின்னணி இசை அதை விட கொடுமை’ – உங்கள் ரசனையுடன் முரன்படுகிறேன்…(காதில் ஏதும் கோலறா?)

ஒக்கடு (கில்லி)- தமிழ் கில்லியே பார்க்க சகிக்கில இதுல தெலுங்கில வேர….

உன்னாலே உன்னாலே- புதுமுக நாயகி அழகு…அவருக்காக ஒரு முறை….

Reply

ரவி July 7, 2007 at 4:50 pm

ஆஹா..நம்ம மசாலாப்பட ரசனைகள் வெவ்வேறு துருவங்கள்ல இருக்கே :)

காமராஜ் படத்தை ஞான ராஜசேகரன் இயக்கலை. பாரதி ஒரு வரலாற்றுப் படம் கிடையாது. வரலாற்று நாயகனை வைத்துப் பின்னப்பட்ட கதை என்று தான் நான் புரிந்து கொண்டேன். அதை நல்லா எடுக்க வில்லை என்றாலும் இந்த மாதிரி genreல் நல்ல படங்கள் வருவதற்கு இது ஒரு முதல் முயற்சி தானே?

Reply

Dr.Sintok July 7, 2007 at 5:22 pm

பருத்தி வீரன்- recommended for viewing

போக்கிரி (தமிழ்)- bore அடிச்சாலும் ஒரு முறை வேண்டவே வேண்டாம்… அசினுக்காக பாடல் காட்சிகளை download செய்து பார்க்கவும்…

குரு (இந்தி)- இந்திதான் கிடைத்தது….. பார்த்தேன்…புரியதான் வில்லை…. கண்டிப்பாக குரு(தமிழ்) பார்ப்பேன் மணிக்காக…. நாயகனைவிட மாதவன் கவர்ந்தார்….நாயகிக்கு வயதாகிவிட்டது….

மொழி – படம்

Superman Returns – campus-யில் ஓசியில் பார்த்து அனைவரும் துப்பிய படம்….

தாமிரபரணி- பிரபுவின் மனைவியாக வரும் அந்த 80’s நடிகை..அழகோ..அழகு(படத்தில் பிடித்தது அவர் மட்டும்தான்) அவர் பெயர் மறந்துவிட்டது..

Reply

VoW July 8, 2007 at 10:16 am

இங்கு சில சுந்தரத் தெலுங்குப் படங்களின் பெயர்கள் கொலை செய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்:

- நூ வஸ்தானன்டே நே(ன்) வத்தன்டானா? (pronunciation: nU vasthAnante nEn vadhdhantAnA?) மொழிபெயர்ப்பு: நீ ‘வருகிறேன்’ என்றால் நான் வேண்டாமென்று சொல்வேனா?

- அனகனகா ஒக்க ரோஜு (pron. anakanakA okka roju) மொழிபெயர்ப்பு: முன்பொரு நாள்.

இன்னொன்று, தெலுங்கில் குற்றியலுகரத்திற்கு இடம் கிடையாது. எல்லாமே முற்றியலுகரம்தான். ஆகவே, ஒக்கடு என்னும்போது ஒக்கடுஉஉஉ என்று முழு மரியாதை செலுத்துக :) மேலும் தெலுங்குடன் ஆங்கிலம் கலப்படம் செய்யும்போது ஆங்கிலச் சொற்களுக்கும் இந்த உஉஉஉஉ மரியாதை தருவது சாலச் சிறந்தது. உ-ம். flightஉஉஉஉ, lunchஉஉஉஉ, pictureஉஉஉஉ etc etc :)

உன்ட்டானு(உஉஉ) .

Reply

ரவி July 8, 2007 at 10:44 am

VoW காரூஉஉஉஉஉ :) திருத்தங்களுக்கூஉஉஉ நன்றி. தமிழ் விக்கிபீடியாவில் சில தெலுங்குப் படங்கள் குறித்த கட்டுரைகளும் உண்டுஉஉஉ. அவற்றையும் நேரம் கிடைக்கும் திருத்தித் தந்தால் நன்றாக இருக்கும்.

Reply

யோசிப்பவர் August 22, 2007 at 5:40 pm

The Aviator – நல்ல படம்தான். ஆனால் பார்ப்பதற்கு அநியாய பொறுமை தேவை!!
Black Diamond – பார்க்க வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கிறேன்!!
//என்ன இருந்தாலும் Finding Nemo மாதிரி வராது ! இந்தப் படத்தை எல்லாம் நம்ம ஊர்ல மொழிமாற்றி விடுறாங்களா? விட்டா நல்லது தான்.// – விஜயா சன்னா என்று தெரியவில்லை. ஒரு முறை தமிழில் ஒளிபரப்பியதாக ஞாபகம்!!

//மௌனம் பேசியதே அமீரோட நல்ல படம்னு நினைக்கிறேன். ராம் படமும் over hypeக்கு அப்புறம் பார்த்து புஸ்ஸுன்னு ஆயிடுச்சு. //உண்மைதான் ராம் பயங்கர சொதப்பல்!!

//தாமிரபரணி – நாட்டாமை, நட்புக்காக காலத்து படம். Bore அடிச்சா ஒரு முறை பார்க்கலாம்//- ஒரு தடவை பார்க்கிறதே ஓவர். அதுவும் என்னை மாதிரி தூத்துக்குடி-திருநெல்வேலி ஆளுங்களுக்கு

Reply

பாலாஜி August 26, 2007 at 12:15 am

ம்…இந்த இடுகையை வளர்த்துக்கொண்டே போறீங்களே!

டிகாப்ரியோ டைட்டானிக், பீச் போன்ற பாடாவதி படங்களிலிருந்து மீண்டு நல்ல நடிகராகிவிட்டார் என்பது உண்மைதான்.

நீங்கள் பட்டியலிட்டுள்ள மூன்று படங்களில் ஏவியேட்டரை நான் இன்னும் பார்க்கவில்லை. டிபார்டட் வணிக நோக்கங்களுக்காக climax கெடுக்கப்பட்ட ஒரு படம். அந்த lift காட்சியோடு படத்தை முடித்திருக்கலாம். Wark Wahlberg இந்த படத்தில் எதற்கு இருந்தார் என்றே எனக்கு விளங்கவில்லை. Martin Scorcesse யின் சுமாரான படங்களில் ஒன்றான இதற்காக அவருக்கு ஆஸ்கர் கிடைத்தது விந்தைதான்!

Blood Diamond ஒரு மட்டமான படம் என்பது எனது கருத்து! நல்ல கதைக்களத்தை எடுத்துக்கொண்டு ஹாலிவுட் பாணியில் கெடுத்து குட்டிச்சுவராக்கினார்கள்!

நாம் இவ்வளவு சினிமா பார்க்கிறோமே இதை ஒரு கூட்டுப்பதிவா செய்யலாமா? thiraivimarsanam.blogspot.com மற்றும் vimarsanam.wordpress.com என்று urls வாங்கி ஆள் பிடித்துக்கொண்டிருக்கிறேன்!

Reply

ரவிசங்கர் August 27, 2007 at 12:59 am

//ம்…இந்த இடுகையை வளர்த்துக்கொண்டே போறீங்களே!//

ஒவ்வொரு இடுகையா சொடுக்கிப் போய் பார்க்காம ஒரே பக்கத்துல இந்தக் குட்டி குட்டி விமர்சனங்களை ஒரு மூச்சில் படிச்சிடலாமே? என் ஒட்டு மொத்த ரசனையும் புரிஞ்சாப்புல இருக்கும்.

http://vimarsanam.wordpress.com/ல் செய்யலாம்ங்க. பெரிசா பங்களிப்பு விதிகள் இல்லாம சில வரி விமர்சனங்களுக்கு இடமுண்டு என்றால் என்னையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Reply

un peruthan enakkum December 22, 2007 at 7:17 pm

pokkiri nalla irukkunna pothe un yokkiyathai purinju pochchuyyaa/

Reply

Leave a Comment

Previous post:

Next post: