தமிழ்நாட்டில் குழந்தைகளின் பெயர்கள்

March 16, 2007

நல்ல, தூய தமிழ்க் குழந்தைப் பெயர்கள் தரும் இணையத்தளங்கள்:

1. http://peyar.yemkay.com – நண்பர்களும் நானும் சேர்ந்து உருவாக்கும் வலை 2.0 தமிழ்ப் பெயர் தரவுத்தளம்.

2. TamilNation.org தரும் 800 தூய தமிழ்ப் பெயர்கள்.

3. தமிழீழ விடுதலைப் புலிகள் தொகுத்த ஆயிரக்கணக்கான தூய தமிழ்க் குழந்தைப் பெயர்கள்.

4. BabyNames.LookTamil

5. Thamizhagam.NET

**
தமிழர் பெயர்களில் பிற மொழித் தாக்கம்:

முந்தா நேத்து காலையில தூங்கிட்டிருந்தப்ப அண்ணன் அழைச்சார். அண்ணனுக்கு முதல் குழந்தை பிறந்திருக்கு.

“தம்பி, பையனுக்கு பேர் வைக்கணும். ர-வுல ஆரம்பிக்கிற நல்ல பேரா சொல்லுப்பா”

காலாங்காத்தால அண்ணன் எழுப்பி விட்ட கடுப்பு எனக்கு.

“ரவிசங்கர்-னு வையுங்க” :)

“தம்பி, புதுசா உள்ள பேரு சொல்லுப்பா. ராம், ராஜா-னு பழைய பேர் எல்லாம் வேண்டாம்”

“சரிண்ணே, இணையத்தில பார்த்து சொல்றேன்”

வலையில தேடினப்புறம் தான் தெரியுது. இந்த எழுத்தில் புதுப் பெயர்கள் ரொம்பக் குறைவு. இருந்தாலும் ரோஷன், ரோஹித்-னு எல்லாம் வட நாட்டுப் பெயரா இருக்கு. அதையும் மீறி புதுசா வைக்கணும்னா rembrandt-னு டச்சு ஓவியர் பேரை தான் வைக்கணும். கண்டிப்பா, இந்தியால இது புதுப் பேர் தான் :)

முன்ன எல்லாம் சாமிப் பெயர், குலசாமிப் பெயர், முன்னோர் பெயர், புகழ் பெற்றவர் பெயர், அரசியல்வாதி பெயர், தலைவர் பெயர்னு வைப்பாங்க. செட்டியார் வீட்டுப் பிள்ளைகள் பலர் இப்படி அழகம்மை, வள்ளியம்மை-னு இப்பவும் பேர் வைச்சிருக்கிறத பார்த்திருக்கேன். இப்ப நிறைய பேர் தொலைக்காட்சித் தொடர்கள்ல வர்ற பாத்திரங்கள் பேர் வைக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஹர்ஷினி, வர்ஷினி, தர்ஷினி-னு எல்லாம் நாடக நடிகர் பேர். ஸ, ஷ, ஜ, ஹ கலந்து பேர் வைச்சா இன்னும் ரொம்ப மகிழ்ச்சி மக்களுக்கு. 

தொலைக்காட்சித் தொடர்களும் எண் ராசி, சோதிட நம்பிக்கைகளும் பெருமளவில் ஊர்ப்புறங்களை கெடுத்து வைச்சிருக்கு. எங்க சித்திப் பையன் பேர் ஹர்ஷத். ஏன் ஹர்ஷத் மேத்தான்னே வைச்சிருக்கலாமேன்னு கேட்டேன் ;) 200 மக்களும் 50, 60 மாடுகளும் இருக்க ஒரு பட்டிக்கு எதுக்கு இந்தப் பெயர்?

புதுசா பேர் வைக்க வேண்டாம்னு இல்ல. ஆனா,முதல்ல வீட்ல உள்ளவங்க அதக் கூப்பிட முடியுற மாதிரி வைக்க வேண்டாமா? ஏற்கனவே சத்யாங்கிற எங்க உறவினர் பொண்ணுக்கு வீட்டுப் பெயர் வேலாயி. காயத்ரிங்கிற பொண்ணுக்கு வீட்டுப் பெயர் காயம்மா.  இந்த வீட்டுப் பெயர்கள் எல்லாம் அப்பத்தாக்கள், அமத்தாக்கள் வசதிக்காக வைச்சது. வாயுல நுழையுற மாதிரி ஒரு பேர முதல்லயே வைச்சிருக்கலாம்ல. எங்க அக்கா பையன் பேரு ஹரீஷ்.  இருந்தாலும் அப்பத்தா அரீசு-னு தான் கூப்பிட முடியும். கிரந்த எழுத்து குறித்த எந்தக் கொள்கையும் அவங்களுக்கு கிடையாது :) ஆனா, அவங்க வாயுல இப்படி தான் வருதுன்னா எது இயல்பான ஒலியமைதி கெடாத தமிழ், எது திணிக்கப்பட்ட ஒலின்னு எளிமையா புரிஞ்சுக்கிடலாம்.

பிள்ளை பிறந்த பிறகு எழுத்துப் பார்த்து பெயர் வைக்கிறத விட பிள்ளை பிறக்கிறதுக்கு முன்னாடியே அம்மாவும் அப்பாவும் இந்தப் பேர் தான்னு யோச்சிச்சு வைச்சு பேர் வைச்ச பிள்ளைங்களையும் பார்த்து இருக்கேன். அந்த குழந்தைகள்ட்ட ஒரு மகிழ்ச்சியையும் பார்த்திருக்கேன். எனக்கு எங்க அப்பா முன்னமே யோசிச்சாரான்னு தெரில. ஆனா, இந்தப் பெயர் தான் வைக்கணும்னு வைச்சாராம். மகிழ்ச்சி. அது என்ன அரும்பாடு பட்டு சுமந்து பெத்துட்டு பேரு வைக்க சோதிடனையும் அகராதியையும் பக்கத்து வீட்டுக் காரனையும் ஆலோசனை கேட்கிறது?

எங்க அம்மா ஒரு பழமொழி சொல்லுவாங்க..”ஒன்னு மண்ணும் இல்லையாம்..புள்ளைக்குட்டி அஞ்சாறாம்”-னு :) அதனால் என்னோட இந்த தொலைநோக்குக் கவலைய நிறுத்திக்கிறேன். எனக்கு கல்யாணம் ஆகி, புள்ளைக் குட்டி பிறக்கும் போது பார்த்துக்கிறேன் ;)

தொடர்புடைய இடுகை: தமிழர் பெயர்கள்

இக்குறிச்சொற்களில் சிலவற்றைக் கொண்டிருக்கும் பிற இடுகைகள்

{ 1 trackback }

குழந்தையின் பெயர்! | உயிர்ப்பு
October 17, 2008 at 11:28 am

{ 22 comments… read them below or add one }

சினேகிதி May 11, 2007 at 7:16 am

தமிழ்ல பெயர் வைக்கிறதைப் பற்றி நான் கதைக்கலாம் ஏனென்றால் என் பெயரில ஒரு எழுத்து மட்டும்தான் தமிழ் :-) அதால என்னை நக்கல் அடிக்கிறதுக்கென்றே ஒரு தமிழ் ஆர்வலர் கூட்டமிருக்குது.

உங்கட அம்மா சொன்ன பழமொழிக்கு அர்த்தம் விளங்கேல்ல ஆனால் இந்தப் பெயர் வைக்கிறது பெரிய விசயம் தான்.அக்காக்கு முதல் பையன் பிறக்க முதலே நிறைப் பெயர்கள் செலக்ற் பண்ணி வைச்சம் ஆனால் அக்காவும் அத்தானும் கடைசில அவனுக்கு வைச்ச பெயர் “றினிஸ்”. தெரிஞ்ச அன்ரியொராள் தன் மகனுக்கு வச்ச பெயர் “சஷ்டிக்” .

Reply

ravishankar May 11, 2007 at 7:21 am

நிகழ்காலத்திலோ வருங்காலத்திலோ கூடிய சீக்கிரம் நமக்கு நிகழ வாய்ப்பு இல்லாத ஒன்று குறித்து ரொம்ப கற்பனை காணக் கூடாது. பேசிக்கொண்டிருக்கக் கூடாது. – இது தான் எங்க அம்மா சொன்ன பழமொழியோட சாரம்

Reply

jayakumar October 17, 2008 at 8:54 am

Dear Sir,

My baby bour at 19th october 2008, 11.08 a.m

i am sreaching so many names, my iyar told me

my baby names starting name is la – lee- leu

enough.

please help my baby tamil names.

Regards

M. jayakumar

9944466828

Reply

jessica October 28, 2009 at 9:21 pm

vishali

Reply

jessica October 28, 2009 at 9:25 pm

ho sorry leandra…….lathika……..lakshmi….

Reply

கலை October 17, 2008 at 11:09 am

//பிள்ளை பிறந்த பிறகு எழுத்துப் பார்த்து பெயர் வைக்கிறத விட பிள்ளை பிறக்கிறதுக்கு முன்னாடியே அம்மாவும் அப்பாவும் இந்தப் பேர் தான்னு யோச்சிச்சு வைச்சு பேர் வைச்ச பிள்ளைங்களையும் பார்த்து இருக்கேன். அந்த குழந்தைகள்ட்ட ஒரு சந்தோஷத்தையும் பார்த்திருக்கேன். //

மகளுக்கு வைத்த பெயர் அவள் பிறக்க 4 வருடத்திற்கு முதலே நினைத்த பெயர் :) . பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்று பார்க்காமலே, பெண்ணாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையிலும், ஆசையிலும் குழந்தைக்கு அதே பெயரை வைப்பது என்று முடிவாகி, பெண்ணாகப் பிறந்ததால், அதே பெயரை வைக்க முடிந்தது :) .

மகளிடம் இதைப் பற்றி சொல்லும்போது, தனது பெயரிலும், பெயர் வைத்த விதம்பற்றியும் அவள் முகத்தில் பெருமையையும், மகிழ்ச்சியையும், சிரிப்பையும் பார்க்க முடிகின்றது.

Reply

arul July 4, 2009 at 8:27 pm

superb………….

Reply

jessica October 28, 2009 at 9:29 pm

ur right very nice.

Reply

கதிரவன் May 22, 2009 at 3:32 pm

வணக்கம்.
நானும் என் மனைவியும் முன்னதாகவே பேசி என்ன பெயர் வைப்பது என்று முடிவுசெய்திருந்தோம். ஆண்குழந்தையாயின் “கன்னல்” எனவும் பெண்குழந்தையாயின் “கவின்” (என் மனைவி பெயர் கவிதா) எனவும் பெயர் வைக்க முடிவுசெய்திருந்தோம்.
என் பெயர் கதிரவன் என்பதால் “பரிதி” எனவும் தன் தந்தை பெயர் இளங்கோ என்பதால் “இளம்” என்பதையும் சேர்த்து “கன்னல் இளம்பரிதி” என ஆண்குழந்தையாக இருந்தால் பெயர்வைக்கலாம் என என் மனைவி கூறினாள்.
என் தாயார் பெயரான மணிமேகலை என்பதிலிருந்து “மணி” என்பதைச் சேர்த்து “கவின் மணிச்சுடர்” என பெண்குழந்தையாக இருந்தால் வைக்கலாம் என்று நான் கூறினேன்.
ஆண்குழந்தை 16.04.2009 அன்று பிறந்தான். நண்பர்களுக்கு நான் அனுப்பிய குறுஞ்செய்தியிலேயே எங்களுக்கு “கன்னல் இளம்பரிதி” (ஆண் குழந்தை) பிறந்திருக்கிறான் என்றுதான் அனுப்பியிருந்தேன்.
குழந்தைக்கு பெயர் வைக்கும்போது அனுபவித்து ஆராய்ந்து ரசித்து பெயர்வைக்கவேணடும்

Reply

கதிரவன் May 22, 2009 at 3:45 pm

நானும் என் மனைவி குடும்பத்தாரும் என் மைத்துனருக்கு பெண் பார்ப்பது தொடர்பாக நெய்வேலி சென்றிருந்தோம். அங்கு உணவகத்தில் உணவருந்திவிட்டு நாங்கள் வெளியில் வரும்போது எதிரில் சுப. வீரபாண்டியன் அய்யா அவர்களைப் பார்த்தோம்.
நானொரு தமிழ்விரிவுரையாளர் என்று என்னை நான் அறிமுகப்படுத்திக்கொணடு என் மனைவியையும் அவள் கையிலிருந்த என் மகனையும் பெயர்கூறி அறிமுகப்படுத்தினேன்.
என் மகன் பெயர் “கன்னல் இளம்பரிதி” எனக்கேட்டதும் சுபவீ அவர்கள் மகிழ்ச்சியுற்று கேட்கும்போது இனிக்கிறதே என்று கூறி என் குழந்தையைத் தட்டிக்கொடுத்தார்.
என் மனைவி “பெயர் சூட்டிய பொழுதினும் பெரிதும் மகிழ்ந்த கணம்” அது.

நல்ல தமிழ்ப்பெயரைக் குழந்தைக்குச் சூட்டுங்கள்
நானொரு தமிழனென்று அடையாளம் காட்டுங்கள்

Reply

ரவிசங்கர் May 22, 2009 at 4:02 pm

கதிரவன், நீங்கள் பெயர் வைத்த கதையே இனிக்கிறது. பரிதி வாழ்வில் சிறக்க என் வாழ்த்துகள்.

Reply

velayudham July 27, 2009 at 2:13 pm

Dear Sir,

i had male baby one month before. i iyar told that my baby name start with Tha Thaa,raa, roo, ru.

Pls guid me put the good Tamil name as per my iyar advice.

Thanks,
Velu

Reply

கார்த்திக் July 30, 2009 at 10:19 am

வேலாயுதம்,

இந்த சுட்டிகளில் நீங்கள் தேடும் சில பெயர்கள் உள்ளது.

த – http://peyar.yemkay.com/index.php?baby=boy&start=2980
தா – http://peyar.yemkay.com/index.php?baby=boy&start=2980.3006
ரா – http://peyar.yemkay.com/index.php?baby=boy&start=2992.3006

Reply

sakthivel September 11, 2009 at 9:47 am

Dear sir,

kindly send me the name list in following letters, s.so,l

thanks and regards,
v.sakthivel

Reply

murugaperumal November 6, 2009 at 1:32 pm

really this s very usefull site for all the tamilanz

Reply

je,ji,jo November 6, 2009 at 2:55 pm

please send me the boy baby
name

Reply

kannan November 13, 2009 at 12:55 pm

send me the baby names

Reply

anbu November 14, 2009 at 1:37 pm

dear sir my boy birth day date 13/11/2009/ name starting letter i want pu pls send my mail id one great name thank u

Reply

S.Banumathi January 7, 2010 at 11:21 am

Hai,

My name is banu, am searching a muslima boy and girl baby name.. my frnd wife was having now 9months…. i want the name list for my frnd…..

Reply

S.Banumathi January 7, 2010 at 11:23 am

if you have the name list means plz sent it my mail id……

Reply

Yaggna Magesh February 2, 2010 at 9:29 am

Sudhanthira tamil Peyara???

Reply

ரவிசங்கர் February 4, 2010 at 8:13 pm

@yaggna magesh – சுதந்திரா – தமிழ்ச் சொல் இல்லீங்க

Reply

Leave a Comment

Previous post:

Next post: