தமிழ்99 விசைப்பலகை தாங்க உலகிலேயே சிறந்த தமிழ் விசைப்பலகை.
மேல இருக்கிறது தாங்க அந்த விசைப்பலகை !
இதில என்ன சிறப்பா?
1. விசையழுத்தங்கள் (keystrokes) ரொம்ப குறைவுங்க. இது தான் முதன்மையான சாதகம். அடுத்து வர்ற சிறப்புகளுக்கும் இது தான் காரணம். கிரந்த எழுத்துக்கள், புழக்கத்தில் இல்லாத சிறப்பு எழுத்துக்கள் தவிர எல்லா தமிழ் எழுத்துக்களையும் SHIFT, CTRL விசை இல்லாம அழுத்த முடியும். உயிர் எழுத்து, அகர உயிர்மெய்கள் இரண்டையும் ஒரே விசையில் அழுத்த முடியும். கிரந்த எழுத்துக்களுக்கு அதிகம் மெனக்கட வேண்டி இருப்பதால் பல சமயம் ஜன்னல் என்று எழுதுவதற்கு சன்னல் என்று எழுதுவதால், கிரந்த எழுத்துக்களின் அனாவசியத் தேவையை ஒழிக்கலாம்.
எடுத்துக்காட்டுக்கு, romanised / அஞ்சல் / தமிங்கில முறைக்கும் தமிழ்99 முறைக்கும் தேவைப்படும் விசையழுத்தங்களைப் பார்ப்போம்.
| சொல் | romanised | தமிழ்99 | keystrokes saved |
| தொழிலாளி | thozilaa+SHIFT+li | த ஒ ழ இ ல ஆ ள இ | 3 |
| வெற்றி | ve+SHIFT+r+SHIFT+ri | வ எ ற ற இ | 2 |
| கணையாழி | ka+SHIFT+naiyaazi | க ண ஐ ய ஆ ழ இ | 4 |
| தந்தம் | thantham | த ந த ம f | 3 |
உயிரெழுத்துக்கள், அகர உயிர்மெய்யெழுத்துக்களை எப்படி உள்ளிடுவதென்று விசைப்பலகையை பார்த்தாலே புரியும். இனி, பிற உயிர்மெய்யெழுத்துக்களுக்கு மட்டும் ஒரு சுருக்கமான வழிகாட்டி.
| எழுத்து | விசை வரிசை |
| த் | த f |
| த | த |
| தா | த ஆ |
| தி | த இ |
| தீ | த ஈ |
| து | த உ |
| தூ | த ஊ |
| தெ | த எ |
| தே | த ஏ |
| தை | த ஐ |
| தொ | த ஒ |
| தோ | த ஓ |
| தௌ | த ஔ |
2. இலக்கணப்படி பல இடங்களில் அதுவே மெய்யெழுத்துக்களுக்கு புள்ளியும் வைத்துக் கொள்ளும். இதனால் எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை இரண்டையுமே ஒழிக்கலாம்.
எடுத்துக்காட்டுக்கு,
| சொல் | விசைகள் |
| புள்ளி | பு ள ள இ |
| கன்று | க ன ற உ |
| தங்கம் | த ங க ம f |
| தந்தம் | த ந த ம f |
| வெற்றி | வ எ ற ற இ |
3. பழகிக்கிறது எளிது. எழுத்துக்கள் இருக்கிற இடங்கள நினைப்புல வைச்சிக்கிறதும் எளிது. உயிரெழுத்துக்கள் ஒரு பக்கமாகவும் அகர உயிரெழுத்துக்கள் இன்னொரு புறமாகவும் ஒழுங்காக ஒரு வரிசையில் அமைஞ்சிருக்கு. அகர உயிர்மெய்யெழுத்துக்கள் அமைஞ்சிருக்கிறதுலயும் நெருக்கமான எழுத்துக்கள் அருகே அருகே இருக்குமாறு ஒரு ஒழுங்கு இருக்கு. அதிகம் அடுத்து வரும் எழுத்துக்கள் பக்கத்தில பக்கத்துல இருக்கு.
எடுத்துக்காட்டுக்கு,
ந – த; ங – க; ண – ட; ன – ற; ஞ – ச
ஆகிய எழுத்துக்கள் அருகருகில இருக்கும்.
4. தமிழ் எழுத்துக்களை எப்படி புரிஞ்சிக்கிறமோ அந்த வகையில தான் இதுவும் அமைஞ்சிருக்கு. அதாவது, உயிரும் மெய்யும் சேர்ந்து உயிர்மெய் என்பது தான் இவ்விசைப்பலகையின் அடிப்படை.
5. மிக வேகமா தட்டச்சு செய்யலாம். அயர்ச்சி, சோர்வு வராது. கடந்த ஒரு வருஷமா தான் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துறேன். ஆனா, 7 வருஷம் பழக்கமான ஆங்கிலத்தோட வேகமா தட்டச்ச வருது. எப்படி இவ்வளவு வேகமா தட்டச்சு செய்யுறேன்னு நண்பர்கள் வியக்குறாங்க. பழகினதுக்கு அப்புறம் விசைப்பலகைய பார்க்காமயே தட்டச்சு செய்ய எளிது. ஆங்கில விசைப்பலகைக்கு கூட எனக்கு இன்னும் இந்த நம்பிக்கை வரவில்லை. தட்டச்சுப் பயிற்சி நிலலயத்துக்கு செல்லாம நீங்களே இத கத்துக்க எளிது.
6. இது பல தமிழறிஞர்கள் ஒன்று கூடி ஆலோசிச்சு கூடி உருவாக்கி, சோதிச்சுப் பார்த்து தமிழக அரசால் கணித்தமிழுக்காக அங்கீகரிக்கப்பட்ட ஒரே விசைப்பலகை. பிற விசைப்பலகைகள் எல்லாம் இந்த மாதிரி இல்லாம தனி முயற்சியில் உருவானவை. எனவே அதில் உள்ள நுட்பத் திறமும் குறைவாக இருக்கும்.
7. 247 தமிழ் எழுத்துக்களை 31 விசைகளில் அடக்குகிறது இந்த விசைப்பலகை வடிவமைப்பு. இதன் எளிமை பிற மொழி விசைப்பலகைகளில் காணக்கிடைக்காதது. இதன் வடிவமைப்பே புத்திசாலித்தனமானது. நாம் உள்ளிடாமலயே மொழியின் கட்டமைப்புக்கு ஏற்ப செயல்பட்டு நம் வேலையை குறைக்கிறது. இது தொடர்பாக உள்ள 12 புத்திசாலித்தனமான விதிகளை பாருங்கள். இதை பழகப் பழகத் தான் தமிழ் எவ்வளவு கட்டமைப்பும் ஒழுங்கும் உடைய எளிமையான மொழி என்று வியக்க வேண்டி இருக்கிறது. தமிழ் spelling கஷ்டம்னு சொல்றது எல்லாம் நாம் ஒழுங்கா எழுத்துக்கள பலுக்கத் தெரியாததால் வந்த வினை. ஆனா, இலங்கையில ல, ள ண, ன , ந , ர , ற வேறுபாடுகள் எல்லாம் அம்மா, அப்பாக்களே தெளிவா சொல்லித் தர்றதா மயூரன் சொன்னபோது ஆச்சர்யமாக இருந்தது. எனக்கு எங்க தமிழம்மாவும் சொல்லித் தரல..பெத்த அம்மாவும் சொல்லித் தரல
8. எல்லாத்தையும் விட முக்கியமான விஷயம், இதப் பயன்படுத்தாட்டியும் பரவால. romanised / அஞ்சல் / தமிங்கில விசைப்பலகை மட்டும் பயன்படுத்த வேண்டாம். முதலில் கொஞ்ச நாள் தமிங்கிலத்தில் எழுதிப் பழகி விட்டு அப்பாவுக்கு காகிதத்தில் கடிதம் எழுதும்போது என்னை அறியாமல் appa eppadi irukkeenga? ungkaL katitham kaNdeen என்று எழுதும் அளவுக்கு உள்மனத்தில் இந்த எழுத்து முறை பதிந்து விடுகிறது. தமிங்கில sms அனுப்புவதாலும் இதே பாதிப்பு வருகிறது. அடுத்த தலைமுறை தமிழுக்கான சொற்களை ஆங்கில எழுத்துக்களின் பிம்பங்களாக உள்வாங்கிக் கொண்டால் அதை விட அவமானம் உண்டோ? அதனால் இன்றே தமிங்கில தட்டச்சை விடவும். இதற்கு பிற தட்டச்சு முறைகளான பாமினி, typewriting layout எவ்வளவோ பரவாயில்லை. அவற்றை பழகியவர்களுக்கு அதை விட்டு தமிழ்99க்கு வர கடினமாக இருக்கும். ஆனால், தமிங்கிலக் காரர்கள் எளிமையாய் மாறிக் கொள்ளலாம். தமிங்கிலத் தட்டச்சை விட்டொழிப்பதற்கான இன்னும் வலுவான காரணங்களை அறிய ஏன் தமிழ்99 விசைப்பலகைக்கு மாற வேண்டும் என்ற கட்டுரையைப் பாருங்கள்.
கணினியில் தமிழ்த் தட்டச்சுக்கு அறிமுகமாகும்போது ஏறக்குறைய எல்லாரும் தமிங்கிலப் பலகை மூலம் தான் அறிமுகமாகிறோம். ஆனால், விரைவில் அடுத்த கட்டமாக தமிழ்99 கற்றுக் கொள்வது நலம். சொந்தக் கணினி வைத்திருப்பவர்கள் தமிழ்99க்கான எ-கலப்பை நிறுவலாம். பயர்பாக்ஸ் வைத்திருப்பவர்கள் எ-கலப்பைக்கு ஒத்த தமிழ் விசை நீட்சியைப் பயன்படுத்தலாம். சுரதா எழுதியில் கூட tam தெரிவு தமிழ்99க்கு ஒத்த வசதியை தருகிறது. ஆனால், இதில் சில குறைகள் இருக்கிறது. அதனால், அவசரத்துக்கு மட்டும் பயன்படுத்தலாம்.
ஒருமுறை தமிழ்99 பயன்படுத்திப் பழகிவிட்டால் பிறகு கனவிலும் பிற முறைகளில் தட்டச்ச மனம் வராது.
இறுதியாக, மேல்விவரங்களுக்கு:
1999ஆம் ஆண்டு நடந்த தமிழ் இணைய மாநாட்டின் பகுதியாக அமரர் நா. கோவிந்தசாமி அவர்களின் முன்முயற்சியில் இவ்விசைப்பலகை உருவாக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து மேலும் அறிய, பிற வலைப்பதிவர்கள் தமிழ்99 விசைப்பலகை அருமை பெருமைகள் பற்றி கூறுவதை படிக்க பின் வரும் தளங்களை பாருங்கள்:
0. தமிழ் விக்கிபீடியா கட்டுரை
1. தமிழ்99 மாநாட்டுக் குறிப்பு.
2. திரு.நா. கோவிந்தசாமி குறித்து.
3. கணினியில் தமிழ் தட்டச்சு எப்படி?
4. அனுராக்
5. Voice on Wings கருவி.
6. Voice on Wings.
7. Shortcuts / Syntax that Tamil99 users should know.
8. தமிழ்99 பயனர் வாக்குமூலங்கள்
.
9. தமிழ்99 பயிற்சி நிகழ்படம்
10. தமிழ்99 தட்டச்சுப் பயிற்சி ஏடு. (pdf)
11. கணிச்சுவடி – எ-கலப்பை நிறுவல், பயன்பாடு, தமிழ்99 பழகுமுறை குறித்து படங்களுடன் கூடிய விரிவான விளக்கம் உள்ள .pdf கோப்பு. ஆக்கம் – சிந்தாநதி.
12. கணினித்திரையில் பார்த்தவாறே தட்டச்சு செய்வதற்கான தமிழ்99 விசைப்பலகை Yahoo widget.
13. தமிழ்99 விழிப்புணர்வு இணையத்தளம்
தமிழ்99 முறையில் தட்டச்சு செய்வதற்கு NHM writer பயன்படுத்தலாம்.
அன்புடன்,
ரவி

{ 2 trackbacks }
{ 59 comments… read them below or add one }
← Previous Comments
சுட்டிக்காட்டியதற்கு நன்றி, பத்மகிஷோர்.சரி செய்திருக்கிறேன்.
ரவி……நீங்கள் எழுதுற நடை எனக்கு பிடிச்சிருக்கு.
ஒரு பள்ளிக்கூட ஆசிரியர்
பாராட்டுக்கு நன்றி, மு. குருமூர்த்தி. ஒரு பள்ளிக்கூட ஆசிரியரே பாராட்டுவது மகிழ்வுக்குரிய விசயம் தான்..
Where can I find this Tamil99 keyboard layout image without english letters in them.
When I see English and Tamil I always try to reference tamil letters with English keys. So I think it would be better if the image only contained Thamiz letters and not English letters.
I am searching on google but nothing I can find
Capitalz,
எனக்கும் அப்படி ஒரு படம் தெரியவில்லை. எனினும் http://tamil99.org தளத்தில் உள்ள பயிற்சி எழுதியில் தமிழ் எழுத்துக்கள் மட்டுமே உள்ளன. அதன் திரைவெட்டைத் தற்காலிகமாகப் பயன்படுத்தலாம். நீங்கள் கேட்டது போல் ஒரு படம் உருவாக்க முயல்கிறோம். நன்றி
hiii
Hi
I unable to download ekalappai. Its said bandwith exeeded. Is any other way to download. Please let me know. Nandri
please try http://software.nhm.in/products/writer . you can type in tamil99 using this software.
please sent tamil pet names
← Previous Comments