ரவி

தமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு

ரவி random header image

தமிழ்99 விழிப்புணர்வு widget

June 27th, 2007 · 6 Comments · தமிழ்

இப்பதிவின் பக்கப்பட்டையில் முதலில் காணப்படும் -தமிழ்99 - என்னும் பொத்தானை அழுத்தினால், amma not equal to அம்மா என்ற தமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வுப் படத்தை உங்கள் பதிவில் சேர்க்கலாம்.

கணினியோடு வளரும் இந்தத் தமிழ்த் தலைமுறை, தமிங்கிலம் / அஞ்சல் / romanised என்ற திறம் குறைந்த, கை வலி அளிக்கக்கூடிய முறையைப் பின்பற்றுவதைத் தவிர்க்கவும், தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களின் பிம்பங்களாக மனதில் பதித்துக் கொள்ளும் வெட்கக்கேட்டைத் தவிர்க்கவும் இன்றே தமிழ்99 விசைப்பலகைக்கு மாறுவது அவசியம்.

புதுப் ப்ளாக்கர் பதிவுகளில் மட்டுமே இந்த widget வேலை செய்யுமாதலால், மற்ற பதிவுச் சேவைகளுக்கு (பழைய ப்ளாக்கர் வார்ப்புரு உட்பட), பின்வரும் நிரல்துண்டை உங்கள் பதிவில் இட்டுக் கொள்ளலாம் :

இக்குறிச்சொற்களில் சிலவற்றைக் கொண்டிருக்கும் பிற இடுகைகள்

Tags: ·········

6 responses so far ↓

  • 1 பொன்ஸ் // Jun 28, 2007 at 6:38 am

    //கேட்டுக் கொள்கிறேன்..கேட்டுக் கொள்கிறேன்..கேட்டுக் கொள்கிறேன் //
    கடைசியா இருக்கிறது ‘கேட்டுக் கொல்கிறேன்’னு இருக்கணுமோ? ;)

  • 2 ஆமாச்சு // Jun 28, 2007 at 5:14 pm

    கூடிய சீக்கிரம் இந்த பொனடிக்கு
    முக்காடு போடணுங்கோ! இது நல்லதில்ல…

  • 3 ரவி // Jun 28, 2007 at 5:19 pm

    பொன்ஸ் - அப்படியே தாய்மாரே..தம்பிமாரே வரிசையில் இன்னொரு மாறைத் தூக்கிக் கொண்டு அடிக்க வராமல் இருந்தால் சரி..கொஞ்சம் பிரச்சாரம் over தான்..ஆனா, நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை ;)
    ஆமாச்சு- தமிங்கிலத்தில் தினம் எழுதுபவர்கள் தமிழ்99 பழகும் காலத்தில் வேகம் குறையுமே என்று தயங்குவார்கள். எத்தனையோ பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு விடுமுறையில் ஊருக்குப் போவது மாதிரி, கொஞ்சம் நாள் அதிகத் தமிழ்த் தட்டச்சுத் தேவைகளை ஒதுக்கி வைத்து விட்டு தமிழ்99 முழுமூச்சாகப் பழகினால் ஒரு வாரம் கூட போதுமான காலம் தான்.

  • 4 ஆமாச்சு // Jun 29, 2007 at 5:18 am

    மடிக்கணினியில் எழுதி வைத்து பயிற்சி செய்யணும்.. இதுக்கு ஒட்ட ஸ்டிக்கர் இல்லை. போன வாரம் இவ்விசைப் பலகையில் தமிழ் எழுத்துக்களை முயன்று எழுதினேன்.

    டிவிஎஸ் நிறுவனம் இதற்காக தயாரித்து ஒரு விசைப் பலகை வெளியிடுகிறது. ஆறு மாசத்துக்கு முன்னாடி அதன் விலை 450 ரூபாய்.

    http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/தமிழ்_99_விசைப்_பலகை

    http://permalink.gmane.org/gmane.linux.ubuntu.translators.ta/25

  • 5 ரவி // Jun 29, 2007 at 12:07 pm

    ஆமாச்சு, stickerஓ தனி விசைப்பலகையோ பெரிய தேவை இல்லைன்னு நினைக்கிறேன். ஒரு print out வைச்சு 2, 3 மூனு நாள் பார்த்து அடிச்சா ரொம்ப சுளுவா விசைகள் மனப்பாடமாகிடும்

  • 6 மேமன்கவி // Jun 14, 2008 at 9:37 am

    நண்பர் ரவி அவர்களுக்கு
    ரொம்பவும் நன்றி!
    நானும் இந்த இலங்கை தமிழ் கணனி ஆர்வலர்களிடையே தமிழ்நெட்99 பற்றியே பேசி வருகிறேன் மாறாத விசைப்பலகை!
    எனக்கு பிடித்தமானது. அதன் விழிப்புணர்வுக்கான உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.

Leave a Comment