நூல் இனி – தமிழ் மின்னூல்கள் சந்தை

ஒரு புதிய முயற்சியில் இறங்கி இருக்கிறேன்.

நூல் இனி – தமிழ் மின்னூல்கள் சந்தை.

http://noolini.com/ பாருங்கள்.

இது வரை பதிப்பாகியுள்ள இலட்சக்கணக்கான தமிழ் நூல்களும் மின்வடிவில் நிலைபெற வேண்டும். வாசகர்கள் – எழுத்தாளர்கள் ஆகிய இருவருக்கும் கட்டற்ற களத்தைத் தருவதன் மூலம் தமிழ் வழி அறிவூக்கச் செயற்பாடுகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதே இம்முயற்சிக்கான உந்துதல்.

புதிய எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துக்கான ஆதரவைச் சோதிப்பதற்கான களமாக இதனைப் பயன்படுத்தலாம். அச்சில் உள்ள நூல்கள் உலகம் முழுக்க தங்கள் சந்தையை விரிவாக்கலாம். பதிப்பு நின்று போன நூல்கள் மின்பிறவி எடுக்கலாம். நேரடி நூல் விற்பனை மூலமாக அன்றி அதனை முன்வைத்த மற்ற அறிவுச் செயற்பாடுகள் மூலம் பணம் ஈட்டலை நோக்கியே உலக பதிப்புலகப் போக்கு செல்கிறது.

உங்கள் ஆதரவைத் தேடி 🙂

5 thoughts on “நூல் இனி – தமிழ் மின்னூல்கள் சந்தை”

 1. உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.free tamil ebooks ல் வெளியிடுவது என்னாயிற்று. திடீரென்று வஇற்பனையில் இறங்கிவிட்டீர்கள்? இதில் நாங்களும் பங்கு பெறலாமா? எப்படி?

  1. நன்றி, ஞானசேகரன். FreeTamilEbooks.com ஒரு இலாப நோக்கற்ற கூட்டு முயற்சி. தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை நடத்துவது. அதில் நானும் பல நண்பர்களும் இணைந்து பங்களிக்கிறோம். நீங்களும் இணையலாம். அம்முயற்சி தொடர்ந்து வழக்கம் போலவே நடக்கும்.

   ஆனால், எல்லா எழுத்தாளர்களும் தங்கள் ஆக்கங்களை இலவசமாகவோ கட்டற்ற உரிமங்களுடனோ தர முன்வருவதில்லை. தேவையும் இல்லை. தமிழ் நூல்கள் மின்வடிவ பெற்று செழிக்க நல்ல ஒரு வணிக மாதிரி தேவைப்படுவதை உணர முடிந்தது. எனவே நூல் இனியை ஒரு சோதனை முயற்சியாக தனிப்பட்ட முறையில் தொடங்கியுள்ளேன்.

 2. நல்ல முயற்சி இரவி!
  ஏற்கெனவே இதைப் பார்த்திருந்தேன்.
  நீங்கள்தானா.. என்பதில் சந்தேகம் இருந்தது.
  வாழ்த்துகள்.

Comments are closed.